வாசிப்பும், யோசிப்பும் 84 : நூல் அறிமுகம் – எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ‘ ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்’ பற்றிச் சில சிந்தனைகள்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ‘ ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்’ அண்மையில் வாசித்தேன். கவிஞரின் கவிதைகள் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றி, அதன் விளைவுகள் பற்றி, காதலைப்பற்றி, அதன் இழப்பு பற்றி, சூழற் பாதிப்பைப்பற்றி, புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி, ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் உணவு மற்றும் போக்குவரத்து போன்றவை பற்றி, பெண் உரிமை பற்றி, தமிழர்களின் மத்தியில் நிலவும் எதிர்மறையான அமசங்கள் பற்றி, வாழ்வுக்கு உதவிடும் ஆரோக்கியமான சிந்தனைகள், உடற் பயிற்சி பற்றி…..  இவ்வாறு பல்வேறு விடயங்களையும் பற்றி எனப்பலவற்றைக் கூறுபொருளாகவெடுத்து விபரிக்கின்றன. கவிஞரின் பலவகைப்பட்ட சிந்தனைகள் வாசிப்புக்கு விருந்தாகின்றன.

தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றி, யுத்தத்தின் முடிவின் பின்னரான அவர்களது நிலைமை பற்றிக்கூறும் கவிதைகளாக ‘அம்மா மெத்தப் பசிக்கிறதே’, ‘ஓ தமிழகமே’, ‘தசாவதாரம்’, யாரடியம்மா ராசாவே’, போன்றவற்றைக்குறிப்பிடலாம். .’அரசடி வைரவர்’ தமிழர்கள் மத்தியில் நிலவும் வைரவ வழிபாடு பற்றி அங்கதச்சுவையுடன் விபரிக்கும்.

Continue Reading →

25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்  Tuesday, April 14, 2015 @ 7:11 PM

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00)

முதல் அமர்வு 9:30 – 11:00

வரவேற்புரை: சந்திரலேகா, தொடக்கவுரை: றஞ்சி
கலை நிகழ்வு: இன்னிசைப்பாடல் (சுகன்யா, லாவண்யா, சகுந்தலா)
இரண்டாவது அமர்வு 11:30 – 13:00

எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சரோஜா சிவச்சந்திரன்
போர்ச் சூழலில் பெண் – ச.விசயலட்சுமி
கலாச்சார மத வழியில் பலமிழந்த பெண்கள். – பரிமளா
இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச் சமத்துவம் – கெகிறாவ ஸஹான

Continue Reading →

சமூக அறிவித்தல் 01 & 2 : மெல்பன்

சமூக அறிவித்தல் 01 : மெல்பன் 

சமூக அறிவித்தல் 01 & 2 : மெல்பன்  பாரதி பள்ளியின்  20 வருட  நிறைவு  விழாவும்  பெற்றோர் – பிள்ளைகள்  – பொதுமக்கள்  ஒன்றுகூடலும். மெல்பனில்  1994  ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டு  வேறு  வேறு  பிரதேசங்களில் நான்கு   வளாகங்களில்   வாராந்தம்  இயங்கிவரும்  பாரதி  பள்ளியின் இருபது  வருட  நிறைவு விழாவும்  மாணவர்கள் – பெற்றோர்கள் – பொதுமக்கள்   இணைந்து  பங்குபற்றும்  பல்வேறு   நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும்   எதிர்வரும்   26-04-2015   ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை முற்பகல்  10   மணியிலிருந்து  மாலை  6  மணிவரையில்  Dandenong High School  மண்டபத்தில் (Ann Street, Dandenong 3175)     நடைபெறும்.

தமிழுக்கு  தொண்டாற்றி  மறைந்த  தமிழ்  அறிஞர்கள்,   கலைஞர்கள்,   எழுத்தாளர்களின்  ஒளிப்படக்கண்காட்சி,   நூல்,  இதழ்களின்  கண்காட்சி பெரியவர்கள்   பிள்ளைகள்  கலந்துகொள்ளும்  பலதரப்பட்ட விளையாட்டுப்போட்டிகள்,   உற்சாகமூட்டும்  கலை   நிகழ்ச்சிகள், சிந்தனைக்கு   விருந்து  படைக்கும்  அறிவியல்  நிகழ்ச்சிகள்  என்பனவும் இடம்பெறும்.  மழலைகள் முதல் வளர்ந்தோர் வரை யாவரையும் மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், புதுமையான  தமிழ்  மொழிப்போட்டிகள்,  சிறுவர் ஓவியப்போட்டி    என்பனவும்    இடம்பெறும்.

Continue Reading →

பிரெஞ்சு நாவல்: எமிலி ஸோலாவின் ‘நானா’! | தமிழில் அறிஞர் அ.ந.கந்தசாமி

அத்தியாயம் மூன்று: மோகப் புயல்!

நாவல்: 'நானா'![ ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் ‘நானா’ நாவலை மொழிபெயர்த்துச் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் ‘யூத அராபிய உறவுகள்’, சீனத்து நாவலான ‘பொம்மை வீடு’, மேலும் பல கவிதைகள், மற்றும் ‘சோலாவின் ‘நானா’ போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் ‘நானா’வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை’ ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.]

பாரிஸ் நகரின் ஒரு முக்கிய்மான வீதியில் அமைந்திருந்த ஒரு பெரிய மாடி வீட்டின் இரண்டாவது மாடியில் வசித்து வந்தாள் நானா. நானாவுக்கு இந்த வீட்டை எடுத்துக் கொடுத்து உதவி செய்தவன் மாஸ்கோ நகரில் இருந்து வந்த ஒரு வியாபாரி. வீட்டுக்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் அவன் வாங்கியிருந்தான். பாரிஸ் நகருக்கு வந்த மாஸ்கோ வியாபாரி வந்த சமயம் மாரிகாலமாக இருந்ததால் கடுமையான மழை பொழிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் நானா அவன் வசத்தில் சிக்கினாள். ஒரு சிலரிதைத் தலைகீழாகத் திருப்பி நானாவிடம் மாஸ்கோ வியாபாரி சிக்கினான் என்றும் கூறினார்கள். ஆனால் மாஸ்கோ வியாபாரியிடம் நானாவும், நானாவிடம் மாஸ்கோ வியாபாரியும் சிக்கினார்களென்று வைத்துக் கொள்வதுதான் பொருத்தமாயிருக்கும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 83 திறனாய்வு, விமர்சனம் மற்றும் அணிந்துரை பற்றி தெணியான்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்‘திறனாய்வு என்றால் என்ன?’ என்னும் நூலுக்கான அணிந்துரையில் கலாநிதி கா.சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு கூறுவார்: ‘… இந்த எழுத்துக்கள் பற்றிய சுய மதிப்பீட்டில் இவர் விமர்சனம் திறனாய்வு (Criticism)) என்ற பதத்தைத்தவிர்த்து மதிப்புரை (Review)  என்ற பதத்தினையே பயன்படுத்தி வருகின்றார்…’  இக்கூற்றில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘விமர்சனம்’, ‘திறனாய்வு’ ஆகிய பதங்களை ஒரே அர்த்தம் கொண்டவையாகப் பயன்படுத்துகின்றார்.

கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் “திறனாய்வு (தமிழ்) விமர்சனம் (வடமொழி)  ஆகிய இரண்டு பதங்களும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. நமது பழைய தமிழ் நூல்களில் ‘விமரிசன்’, ‘விமரிசனம்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ‘ என்பார் [‘திறனாய்வு என்றால் என்ன’; பக்கம் 27].

எழுத்தாளர் சுபைர் இளங்கீரனும் தனது ‘திறனாய்வு’ என்னும் கட்டுரையில் திறனாய்வு , விமர்சனம் என்னும் சொற்பதங்களை ஒரே அர்த்தத்தில் மாறி மாறிப்பயன்படுத்துவதை அவதானிக்கலாம் (‘நூல்: தேசிய இலக்கியமும், மரப்புப்போராட்டமும்’; பக்கம் 88]. இக்கட்டுரையின் மூல வடிவம் ‘புதுமை இலக்கிய மலர் (1962)’ தொகுப்பில் வெளியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

சித்திரையே வருக இத்தரை சிறக்கவே

வெளிதனில் விரையு மிந்த வுலகுகளிதனில் மூழ்கிடப் பிறந்ததே சித்திரை.மன்மத ஆண்டில் மகிழ்ச்சி நிறைந்துஇத்தரை எங்கும் இன்பம் பூத்துஇனம் மதம் மொழி மற்றும்வர்க்கம், வருணம் என்றே எங்கும்பிரிவுகள் மலிந்த…

Continue Reading →

ஆய்வு: புறநானூற்றில் வாணிகம்

- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -பண்டைத் தமிழரின் வாழ்வியலை இன்றைக்கு எடுத்துக் காட்டும் சிறந்த படைப்பு புறநானூறு ஆகும். புறநானூற்று 400 பாடல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இருந்து படைக்கப் பட்டவைகளும் அல்ல.  ஒவ்வொரு பாடலும் தனி மனித உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகும்.  வாழ்ந்த பண்டைத் தமிழரின் பெருமையையும், பண்பாட்டையும் கவிப் புலமை பெற்ற படைப்பாளர்கள் தாங்கள் நேரில் கண்டவற்றைக் கண்டபடியே படைத்த படைப்புகளாகும். எனவேதான் பண்டைத் தமிழ் அக இலக்கியங்கள் போல வருணனையோ, கற்பனையோ இடம்பெறவில்லை. 

  படைப்பாளர்கள் தாங்கள் படைத்த காலத்தில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்பட்ட நிகழ்வுகளைக் கவிதைகளாகப் படைத்திருக்கிறார்கள். எனவேதான் பண்டைத் தமிழர் வாழ்வை உணர்த்துகின்ற கலங்கரை விளக்கமாகப் புறநானூறு விளங்குகிறது.  படைப்பாளர்கள் தாங்கள் கண்டவற்றை மட்டும் படைக்காது, தங்களுக்குள்ளே நிகழ்ந்த வாழ்வியல் நிகழ்வுகளையும் பதிவு செய்து கவிதையாகத் தந்துள்ளனர். எனவே பல பாடல்கள் கையறுநிலைப் பாடல்களாக, அதாவது வறுமையும், வறுமை நீங்க வேண்டுகின்ற பாடல்களாகவும் விளங்குகின்றன. வறுமையைச் சுட்டுகின்ற பாடல்களைப் போல, மக்கள் வாழ்விலும் , அரசியல் வாழ்விலும் அமைந்துள்ள உயர்வு நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு தெரிவிக்கும் பொழுது மக்களின் வாழ்வுக்கு உயர்வு தருகின்ற நிலையில் அல்லது அரசரின் ஆட்சி சிறப்புற்றிருக்கும் நிலையில் அதற்குக் காரணமாக அமைந்தவற்றில் ஒன்றான வாணிக நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய வாணிகச் செய்திகளைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!

1. எங்கே போகிறது

–  வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். –

vetha_new_7.jpg - 11.42 Kbவாழ்வு முடிந்திட எம்மைத் தொடர்வதொரு
ஆழ்வெளி வாழ்வா! எங்கு போகிறோம்!
சூழ் நிலவும் சூனிய வெளியுமா!
வீழ் இறகாகி விண்ணில் வலமோ!
உடலின் ஆன்மா கடலாவி போன்றதோ!
சடலம் எரியும், சாசுவதம் ஆன்மாவோ!
உடலம் தேடி மறுபடி அடைக்கலமோ!
சுடல் என்பது ஆன்மாவிற் கில்லையோ!

உடலைப் பிரிய விரும்பாத ஆன்மா
கடலைத் திடலை எப்படித் தாண்டும்!
படலையாக மனமா! ஆன்மா நடலையிடுமே!
ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை
நேத்திர நீர் வடிய முறையான
சாத்திரப்படி கோத்திர வழிப்படி எம்
ஆத்தும சாந்திக்காய் ஏத்தும் அமைதிப்படி
ஆன்ம சேத்திர விடுதலை எனலாமோ!

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 82: கனடாத்தமிழ் இலக்கியம் பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய வேண்டுமானால் இதுவரையில் கனடாவில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், இணைய இதழ்கள், கையெழுத்துச்சஞ்சிகைகள் போன்றவற்றைப்பற்றிய முழு விபரங்களும் அறியப்பட்டு அவை பற்றி மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யாமல் பொதுவாக அறிந்த விடயங்களை மையமாக வைத்துக் கட்டுரைகள் எழுதுவது உண்மை நிலையினை எடுத்துக்காட்டுவதாக அமையாது. கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி அறிய விரும்புபவர்களுக்குப் ‘படிப்பகம்’ மற்றும் ‘நூலகம்’ இணையத்தளங்கள் நல்லதோர் ஆரம்பமாக அமையுமென்பதென் எண்ணம். ஏனெனில் மேற்படி இணையத்தளங்களில் புலம் பெயர்ந்த தமிழர்கள் வெளியிட்ட சஞ்சிகைகள், ஈழத்தில் வெளியான சஞ்சிகைகள் போன்ற பலவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றார்கள்; வருகின்றார்கள். இவை பற்றிய முழுமையான ஆவணக்காப்பகங்களாக மேற்படி தளங்களைக்கூற முடியாவிட்டாலும், இயலுமானவரையில் கிடைத்தவற்றைப் பதிவு செய்திருக்கின்றார்கள். உதாரணமாகக் கனடாவிலிருந்து வெளியான பின்வரும் ஊடகங்களைப்பற்றிய பதிவுகளை ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் காணலாம்:

Continue Reading →

உள்ளொன்று வைத்துப் புறமொன்று …

- ஸ்ரீரஞ்சனி - “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”, என்றார், வள்ளலார்.  எமது உறவுகள், எம்முடன் உண்மையாகவிருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் நாம், அந்த உறவுகளுடன் உண்மையாக இருக்கின்றோமா?  நேர்மை என்ற சீரிய வாழ்க்கைப் பெறுமானத்தை எமக்குள் விதைப்பதற்காக சீராளனும் பூபாலனும் முலாம்பழம் விற்ற கதை எமது கீழ் வகுப்புப் பாடத்திட்டத்தில் (இலங்கையில்) சேர்க்கப்பட்டிருந்தது, அது வெற்றி பெற்றிருக்கின்றதா?  இவை பற்றிய சிந்தனைகளைத் தூண்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.  

“காதலர்கள், துணைவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் அல்லது மேலதிகாரிகளுக்கு நாங்கள் உணர்வதை, நினைப்பதை அல்லது செய்வதைச் சொல்லாமலிருக்கும்போது, ஒருவகையான மனச் சிறையில் நாங்கள் அடைபட்டுப் போகின்றோம்”, என்கிறார், உளவழி மருத்துவர் (psychotherapist) Dr. Brad Blanton.  மேலும், பொய் சொல்வதே, மனிதர்களின் மனத்தகைப்புக்கு முக்கியகாரணமாக இருக்கிறது எனக் குறிப்பிடும் இவர், இந்த மனத்தகைப்பிலிருந்து விடுபடுவதற்கு, ‘முற்றாக உண்மையாயிருத்தல்’ ( Radical-Honesty)  cஎனும் செயல்முறையைப் பின்பற்றுதல் சிறந்ததொரு வழியாக அமையும் எனப் பரிந்துரைக்கின்றார்.

Continue Reading →