வாசிப்பும், யோசிப்பும் 81: ஜெயகாந்தன் பற்றிய நினைவுகள் சில ..

வாசிப்பும், யோசிப்பும் 81: ஜெயகாந்தன் பற்றிய நினைவுகள் சில ..அறுபதுகளின் இறுதியில் என்று நினைக்கின்றேன் அப்பொழுதுதான் நான் முதன் முதலாக எழுத்தாளர் ஜெயகாந்தனை அறிந்துகொண்டது. ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகளாக வெளிவந்த ஜெயகாந்தனின் ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’. ‘ஆடும் நாற்காழிகள் ஆடுகின்றன’ போன்ற குறுநாவல்களைப்பற்றி அப்பாவும், அம்மாவும் உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் அவரது பெயரினை நான் அவ்விதம் அறிந்துகொண்டேன். ஆனால் நான் முதலில் வாசித்த அவரது முதலாவது படைப்பு ராணி முத்து வெளியீடாக வெளிவந்த ‘காவல் தெய்வம்’ என்ற தொகுப்புத்தான். அந்தத்தொகுப்பில் காவல் தெய்வம் குறுநாவலுடன் அவரது இன்னுமொரு குறுநாவலான ‘கருணையினால் அல்ல’ குறுநாவலையும் இணைத்து ராணிமுத்து பதிப்பகம் வெளியிட்டிருந்தது. கை விலங்கு என்ற பெயரில் வெளியான அவரது குறுநாவல்தான் காவல் தெய்வம் என்ற பெயரில் ராணிமுத்து பிரசுரமாகவும், திரைப்படமாகவும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது இன்னுமோர் ஆரம்பகாலத்து நாவலான ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலும் ராணி முத்து வெளியீடாக வெளியானது.

இவ்விதமாக ஜெயகாந்தனுடன் எனது பயணம் ஆரம்பமாகியது. அதன் பின்னர் தினமணிக்கதிர் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதைகள் பலவற்றை மீள்பிரசுரம் செய்தபொழுது அவற்றை வாசித்தேன். ‘ஒரு பிடி சோறு’, ‘மவுண்ட்ரோடு மைக்கல்’, ‘டிரெடில்’, ‘பிணக்கு’, ‘ராசா வந்திட்டாரு’ போன்ற சிறுகதைகளைப்படித்தது அப்பொழுதுதான். தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்து பலத்த வாதப்பிரதிவாதங்களை எழுப்பிய ஜெயகாந்தனின் ‘ரிஷி மூலம்’ குறுநாவலினையும் மறப்பதற்கில்லை. அக்காலகட்டத்தில் ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதையான ‘ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது’ வாசித்தது நினைவிலுள்ளது.

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியத்தில் முயலின் வாழ்விடமும் பதிவுகளும்

 - கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -தமிழகத்தின்  நிலவியல், தாவரவியல், விலங்கியல்,கடலியல், அரசியல், சமூகவியல்,  மானுடவியல், சூழலியல்,  ஆன்மீகம் என பல தறப்பட்ட கூறுகளையும்  உள்ளடக்கினவாகச்  சங்க இலக்கியம் திகழ்கின்றது. இச்சங்கப் பிரதி தமிழர் வாழ்வியலையும்,  விலங்குகள் அவர்தம் மனவெளியிலும், புறவெளியிலும், வாழ்நெறியிலும் உறவு கொண்டு ஊடாடி விளங்குவதையும் காட்சிப் படிமங்களாகக் கண்முன் படைத்துக் காட்டுகின்றது. சங்கப் பாக்கள் முதல், கரு, உரி என்ற முப்பெரும்பிரிவின் அவதானிப்பில் அமைந்துள்ளன. இப்பாடல்களில் முதற்பொருளின் பின்புலத்தில் கருப்பொருளாக மனிதனைச் சுற்றியுள்ள இயற்கைப்பொருட்கள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்வியல்  விளக்கம் பெற்றுள்ளன. பண்டையத் தமிழனின் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப அவனோடு இயைந்து வாழ்ந்த விலங்கினங்களை வேட்டையாடி மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்தான். அந்நிலையில் தாவர உண்ணியாக வாழ்ந்த முயலினை வேட்டையாடி தன் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்து கொண்டான். சங்கப் பிரதியில் முயலின் வாழ்வியல் சூழல், புலவரின் கற்பனைத் திறன்,  உவமையாக்கல் போன்ற பல்வேறு நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

சங்க  இலக்கியத்தில்  முயல் பற்றிய  பதிவுகள்
சங்க இலக்கியத்தில்  முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. அதில் முயல் பற்றிய பதிவு சங்க இலக்கியத்தில் பதினெழு பாடல்களில் காணப்படுகின்றன. அதைப் பற்றிய அட்டவணை கீழே

Continue Reading →

கலைத்தாகம் மிக்க தம்பதியரின் தணியாத தாகம் கலைத்தாகம்!

கமலினி செல்வராஜன்“அத்தானே அத்தானே எந்தன்   ஆசை அத்தானே கேள்வி   ஒன்று கேட்கலாமா  உன்னைத்தானே.? ”   எனக்கேட்ட   கமலினி  செல்வராசன் அத்தானிடமே   சென்றார். திருமதி  கமலினி  செல்வராசன்  கொழும்பில்  மறைந்தார்  என்ற செய்தி   இயல்பாகவே  கவலையைத்தந்தாலும்,  அவர்  கடந்த  சில வருடங்களாக   மரணத்துள்  வாழ்ந்துகொண்டே   இருந்தவர்,  தற்பொழுது   அந்த   மரணத்தைக்கடந்தும்   சென்று  மறைந்திருக்கிறார் என்றவகையில்   அவரது  ஆத்மா  சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.

ஈழத்தின்   மூத்த  தமிழ்  அறிஞர்  தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின்  புதல்வி  கமலினி,  இயல்பிலேயே  கலை, இலக்கிய,  நடன,  இசை  ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு  அவரது   தந்தையும்  வயலின்  கலைஞரான  தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக  இருந்தனர்.  எனினும்  புலோலியூர் கணபதிப்பிள்ளையின்   நெருங்கிய  நண்பராகவிருந்த  பல்கலை வேந்தன்  சில்லையூர்  செல்வராசன்,   அந்த  நெருக்கத்தை   அவர் புதல்வியின்   மீதும்  செலுத்தியமையினால்,  ஏற்கனவே  ஜெரல்டின் ஜெஸி   என்ற  மனைவியும்  திலீபன்,  பாஸ்கரன்,  முகுந்தன்,  யாழினி ஆகிய   பிள்ளைகள்  இருந்தும்  கமலினியை   கரம்  பிடித்தார்.

கலைத்தாகம்   மிக்க,   கமலினி –   களனி  பல்கலைக்கழக  பட்டதாரியாகி    ஆசிரியராகவும்  பணியாற்றியவர்.   தந்தை  வழியில் தமிழ்த்தாகத்தை   பெற்று   வளர்ந்த  கமலினி  தாய்வழியில்  இசை ஞானமும் , கணவர்  சில்லையூர்  வழியில்  கலைத்தாகமும்  பெற்று பல்துறை   ஆற்றல்  மிக்கவராக  திகழ்ந்தார்.

Continue Reading →

திருகோணமலையில் ‘நாங்கள்’ இயக்கத்தின் மக்கள் நலப்பணி!

– பேரன்புடையோர்க்கும், ஊடக நண்பர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும், இனமான செயல்பாட்டாளர்களுக்கும்! நீங்கள் பணியாற்றும் – நீங்கள் அறிந்த தெரிந்த ஊடகங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும், பரிச்சயமானவர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். -நன்றி- நாங்கள் இயக்கம்

திருகோணமலை மாவட்டத்தில் போரின் பாதிப்புகளிலிருந்து இன்னும் மீளமுடியாமல், குடும்ப பொருளாதார ரீதியாக நலிவுற்றுள்ள பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான வாழ்வாதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மூதூர் கிழக்கில், கடற்கரைச்சேனை மற்றும் சேனையூர் கிராமங்களைச்சேர்ந்த பத்து மாணவர்களுக்கு பாடசாலைக்கற்றல் உபகரணங்களும், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்டுள்ள ஐந்து குடும்பங்களுக்கு சிறுகைத்தொழில் முயற்சிக்கான நிதி ஆதாரமும், மூதூர் தெற்கில், வன்செயல்களால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பெருவெளி கிராமத்தைச்சேர்ந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் பத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Continue Reading →

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!1. வர்ணத்தின் நிறம்

முதலில்
நிறத்தில்
வர்ணம்
தெரிகிறதாவெனத்
தேடுகிறோம்

நெற்றியில் தெரியவில்லையெனில்
சட்டைக்குள் தெரியலாம்
சில பெயர்களிலும்
வர்ணம் பூசியிருக்கலாம்

வார்த்தையிலும்
சில நேரம்
வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்

நான்கு மூலைகளில்
மஞ்சள் தடவிய
திருமண அழைப்பிதழ்களில்
முந்தைய தலைமுறையின்
வால்களில்
வர்ணங்கள் தெரிகின்றன

Continue Reading →

வேதனைத் தழும்பு !

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கவி யாற்றலை  வளமுடைத்  தாக்கி !
தமிழினை உயர்த்திட கவிபாடிடும் கூட்டம்
வஞ்சகப் போட்டியாளர் பொறமை தனத்தினை
சொற்களால் எரிந்து மகிழ்ந்து விளையாடும்
பொல்லா மனசு இருந்திடல் கண்டு
நல் லுள்ளங்களில் வேதனைத் தழும்பு !

நண்பர் கொடுமை கவிதைப் போராட்டம் !
சரித்து வீழ்த்திச் சாபமிடும் மன வெறி
உயிர் தமிழ் மொழி அழிந்து கவிமனம்
பொறாமை தளையிடை வேதனைப்படுந்துயர்
ஊதிப் பெருத்திட ஆற்றலை அழித்திட
கவி உள்ளத்தில் வேதனை நெருப்பு !

Continue Reading →

ஏங்குகின்ற ஏழைகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அன்று     கப்பலிலே ஏறிவந்து- இலங்கைக்
                 கரைசேர்ந்த முப்பாட்டன் சோற்றுக்காய்
                 காடுவெட்டி தேயிலைநாட்டி-வெள்ளைக்
                 காரனுக்காய் உழைத்தாரே.

எட்டு       அடிகொண்ட லயமென்று -நீண்ட
                அடுத்தடுத்தக் குடிசைக்குள்ளே -கொத்து
                அடிமைபோல் வாழ்ந்தேதான் -சொந்த
                அறிவுமங்கிக் கிடந்தாரே.

Continue Reading →

காற்றுவெளி மின்னிதழ் பங்குனி/சித்திரைச்சிறப்பிதழ்!

காற்றுவெளி மின்னிதழ் பங்குனி/சித்திரைச்சிறப்பிதழ்! mullaiamuthan@gmail.com வணக்கம், காற்றுவெளி மின்னிதழ் பங்குனி/சித்திஒரை இதழாக வந்துள்ளதுhttp://kaatruveli-ithazh.blogspot.co.uk mullaiamuthan@gmail.com

Continue Reading →

‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கம்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 25-04-2015

மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

'ரொறன்ரோ' தமிழ்ச்சங்கம்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 25-04-2015எமது புத்தாண்டு
ஒருங்கிணைப்பு:
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

நிகழ்ச்சி நிரல்:
எமது புத்தாண்டு – காலக்கணித மரபு – கலாநிதி பால.சிவகடாட்சம்
எமது புத்தாண்டு – தமிழர் மரபு – திரு.வே.தங்கவேலு (நக்கீரன்)
எமது புத்தாண்டு – அறிவியல் மரபு – திரு.சிவ.ஞானநாயகன்

ஐயந்தெளிதல் அரங்கு: மார்ச் மாத இலக்கிய நிகழ்வுகள்

நாள்: 25-04-2015
நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
 3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 80 : பொதுவான தலைப்புகளும், தொகுப்புகளும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் பற்றி……..

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்இலங்கைத்தமிழ்க்கவிதை வரலாறு, இலங்கைத்தமிழ்க்கவிதை போன்ற தலைப்புகளில் தொகுப்புகளை வெளியிடுவோர் கவனத்துக்கு சில கருத்துக்களைக்கூற விரும்புகின்றேன். இவ்விதமான பொதுவான தலைப்புகளைக்கொடுத்துவிட்டு, இதுவரை கால இலங்கைத்தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்த கவிஞர்களின் கவிதைகள் எதுவுமின்றித்தொகுப்புகளை வெளியிடுவதன் மூலம் நீங்கள் புரியும் முக்கியமான தவறாக நான் கருதுவது எதிர்காலச்சந்ததிக்கு ஈழத்துத்தமிழ்க்கவிதை பற்றிய பிழையான பிம்பத்தினைச்சித்திரிக்கின்றீர்கள் என்பதாகும். அடுத்த தவறாக நான் கருதுவது: எந்தவிதப்பயனையும் எதிர்பாராது தம் வாழ்வினை எழுத்துக்காக அர்ப்பணித்து மறைந்த படைப்பாளிகளின் படைப்புகளை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அவர்களை அவமதிப்பு செய்கின்றீர்கள் என்பதாகும்.  முக்கியமான காரணங்களிலொன்று: இவ்விதமான தொகுப்புகளுக்காகப் படைப்புகளைச் சேகரிப்பவர்கள் முறையான ஆய்வுகளைச்செய்வதில் ஆர்வமற்று, நூல்களாகக வெளிவந்த கவிஞர்களின் தொகுப்புகளை மட்டுமே கவனத்திலெடுத்து,  தொகுப்புகளை விரைவிலேயே கொண்டுவந்து அத்தொகுப்புகள் மூலம் தம்மை இலக்கியத்தில் நிலைநிறுத்த வேண்டுமென்ற அவாவுடன் செயற்படுவதுதான். ஈழத்துத்தமிழ்க்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல் , விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று பல் துறைகளிலும் நூல்களாக வெளிவராத எத்தனையோ படைப்பாளிகளின் படைப்புகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மலர்கள் என்று பல்வேறு வகைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும் படிப்பகம், நூலகம் போன்ற இணைய நூலகங்கள், வலைப்பூக்கள், இணைய இதழ்கள் என்று பல்வேறு ஊடகங்களில் கூகுள் தேடுபொறி மூலம் சிறிது தேடினாலே உங்களால் பல படைப்புகளை எடுத்துக்கொள்ள முடியும்.

Continue Reading →