வாசிப்பும், யோசிப்பும் 213: பாரதியார் நினைவாக..: திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பாரதியார்எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டிலொன்று மகாகவி பாரதியாரின் ‘திக்குகள் எட்டும் சிதறி’ கவிதை. எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று மகாகவி பாரதியாரின் ‘திக்குகள் எட்டும் சிதறி’ கவிதை.

டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். அதனையொட்டி அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான ‘திக்குகள் எட்டும் சிதறி’ கவிதையினயும் கேட்க விரும்பியதன் விளைவு இந்தப்பதிவு.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 212: மக்கள் கவிஞன் இன்குலாப் மறைவு!

அண்மையில் மறைந்த அமரர் இன்குலாப்அண்மையில் மறைந்த அமரர் இன்குலாப் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான ‘ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்’ என்னும் கவிதையையும், அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன். ‘சமயம் கடந்து மானுடம் கூடும், சுவரில்லாத சமவெளி தோறும், குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்; மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்’ என்று பாடிய மக்கள் கவிஞன் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டான். ஆனால் அவன் தன் எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 211 : ஜெயலலிதா மறைவு: சில சந்தேகங்களும்.. கேள்விகளும்…

முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும்அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வருவது அக்கட்சியினரின் பிரச்சினை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதிவரையில் எதற்காக யாரையும் சந்திக்காத வகையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? எதற்காக அப்பலோ மருத்துவ நிலையம் அடிக்கடி அவரது உடல் நிலை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இச்சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமரர் ஜெயலலிதாவின் நிலையினை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியிடப்பட வேண்டும். இச்சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால் மட்டுமே சசிகலா அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும். ஜனநாயக நாடொன்றில் மாநிலமொன்றின் முதல்வர் இவ்விதம் நடத்தப்பட்டிருப்பது கேள்விக்குரியது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும்.

பல சந்தேகங்களை ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியிருப்பதால் அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படாமல், அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களைப்புறக்கணித்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் செயற்படுவார்களென்றால் , எதிர்காலச்சட்டசபைத்தேர்தலில் அதிமுக பல பிரிவுகளாகப் பிரிபடுவது தவிர்க்க முடியாதது.

உண்மையில் ஜெயலலிதாவின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆபத்தான கட்டத்திலிருந்திருக்கலாம். அவரது உண்மை நிலை மக்களுக்கூ தெரிந்தால் மக்கள் கொதித்தெழலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாயிருக்கும். எனவே மக்களை ஜெயலலிதாவின் முடிவுக்குத் தயார் செய்து அவரது முடிவினை அறிவித்திருந்தால் மக்கள் பொங்கியெழ மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்தால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படலாம். அதனைக்காரணம் காட்டி மத்திய அரசு அதிமுக அரசைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலை பிரதமர் மோடிக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் போலும் அவர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவ நிலையத்துக்கு வந்து பார்க்கவில்லையோ தெரியவில்லையோ?

Continue Reading →

ஆய்வு: சங்க இலக்கியத்தில் சீறூர் மன்னர்தம் குடிமைப்பண்புகள்

  - பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.பாட்டும் தொகையுமெனப் பகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்தம் பல்வேறு வாழ்வியல் மரபுகளைப் பதிவு செய்துள்ள சமூக ஆவணங்களாக விளங்குகின்றன. சமூகம் உருவான தன்மை குறித்தும், அரசுகள் உருவான தன்மை குறித்தும் விளக்கும் சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கியல் போக்கை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமச்சீரற்ற சமூக வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றன.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரசு எனும் அமைப்பு உருவாகி வளர்ந்ததைப் பல்வேறு ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில் சங்க கால அரசுருவாக்கம் என்பது சீறூர் மன்னர், முதுகுடிமன்னர், மன்னர், வேந்தர் எனும் படிநிலைகளைக் கொண்டதாக இருந்துள்ளமையை அறியலாம். இவ்அரசு உருவாக்கங்களில் இனக்குழுச் சமூகப்பண்புகளைக் கொண்டதாகக் காணப்படும் சீறூர் மன்னர் சமூக அரசமைப்பு முதன்மை பெறுகிறது. இத்தகைய சீறூர் மன்னர்தம் குடிக்கே உரியப் பண்புகளாகக் கூட்டுழைப்பு, கூட்டுண்ணல், விருந்தோம்பல், நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில், தண்ணடை பெறுதல், மறத்துடன் விளங்குதல் என்பனவற்றைச்  சங்கப் பனுவல்கள் சிறப்ப்பகப் பதிவு செய்துள்ளன. இக்குடிமைப் பண்புகளில் நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில்  என்பவற்றைக் குறித்து ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

இனக்குழுச் சமுதாயமும் சீறூர் மன்னரும்
‘சங்கப் பாடல்கள் ஒன்றுக்கொன்று மாறான இரு வேறுபட்ட சமுதாய வாழ்வியல்புகளைக் காட்டுவனவாய் உள்ளன. சிறப்பாகப் புறநானூற்றுப் பாடல்கள் புராதன விவசாயப் பொருளாதாரத்தையும் கால்நடைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுச் சமுதாய எச்சங்களைத் தாங்கிய வன்புலச் சமுதாயத்தையும், மருதநிலச் சமுதாயத்தையும் சமகாலச் சமுதாயங்களாகக் காட்டுகின்றன. இவ்விருவகைச் சமுதாயங்களும் நிலம், போர்முறை, போர்நோக்கம், வழிபாட்டுமுறை, உடைமைநிலை, புலவர் மன்னர் உறவுநிலை, வள்ளண்மை, தலைவர் குடிமக்கள் உறவுநிலை எனும் பல்வேறு நிலைகளிலும் ஒன்றுக்கொன்று முரணான இயல்புடையனவாய்க் காணப்பெறுகின்றன.’ 1

Continue Reading →