ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் சிறப்புபேச்சாளர்கள்உரை:“தமிழியல் ஆய்வுத்தளத்தில் பேரறிஞர் கைலாசபதி பதித்துள்ள தடம்” – பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்“பேராசிரியர் க.கைலாசபதியவர்களின் பார்வையில் சங்க இலக்கியம்” – கலாநிதி பார்வதி…
எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஆப்ரஹாம் லிங்கன். அதற்கு முக்கிய காரணம் சிறு வயதிலிருந்தே பாடப்புத்தகங்களில் அவரைப்பற்றிப் படித்ததனாலேற்பட்ட பிம்பமாக இருக்கலாம். வறிய சூழலில் , விறகு வெட்டி, தெருவிளக்கில் பாடங்கள் படித்துப் படிப்படியாக முன்னேறி அமெரிக்க ஜனாதிபதியாகியவர் என்று படித்தது, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டதுடன், அதன் காரணமாகவே அமெரிக்காவின் தென் மாநிலத்தைச்சேர்ந்த தீவிரவாத எண்ணம் மிக்க நாடகக் கலைஞனான வில்லியம் பூத்தினால் சுட்டுகொல்லப்பட்டு , தன் கொள்கைக்காகத் தன் உயிரையே தந்தவர் என்று அறிந்தது போன்ற காரணங்களினால் சிறு வயதிலிருந்தே ஆப்ரஹாம் லிங்கன் எனக்குப் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களிலொருவராக விளங்கி வருகின்றார்.
ஆப்ரஹாம் லிங்கனைப்பற்றியொரு நூலினை அண்மையில் வாசித்தேன். அதுவோர் அபுனைவல்ல. வரலாறுப்புனைவு: ஒரு நாடகம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஜான் டிரின்ன்க்வாட்டர் (John Drinkwater) ஆங்கிலத்தில் எழுதி பல தடவைகள் பல்வேறு நகரங்களில் மேடையேறிய புகழ் பெற்ற நாடகமான ‘ஆப்ரகாம் லிங்கன்’ என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பான இந்த நூலினைத் தமிழில் தந்திருப்பவர் எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்களே.
இந்நாடகம் திண்ணை இணைய இதழில் தொடராக வெளிவந்து தமிழகத்தில் தாரிணி பதிப்பக வெளியீடாக (மே 2014) வெளிவந்துள்ளது. இப்பிரதியினைப் பற்றிய எனது கருத்துகளைக் கூறுவதற்கு முன்னர் திரு.ஜெயபாரதனைப்பற்றிச் சிறிது கூறுவதும் அவசியமானதே.