பூமராங் இணைய இதழ்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ்   பூமராங்  உங்கள் பார்வைக்கு வருகிறது. www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின்…

Continue Reading →

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2017

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா, இம்முறை மெல்பனில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017 ) சனிக்கிழமை மாலை…

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ இயக்குனர் கிளாட் சாப்ரோலின் ஐந்து படங்கள் திரையிடல்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!03-04-2017 முதல் 07-04-2017 வரை மாலை 6:30 மணிக்கு…
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

சினிமா ரசனையின் மிக முக்கிய அங்கமான ரெட்ரோஸ்பெக்டிவ் என்ற தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. சென்ற வாரம் முழுக்க வூடி ஆலனின் படங்கள் திரையிடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட இயக்குனரின் படங்கள் #Retrospective வரிசையில் திரையிடப்படும். ஒரு இயக்குனரின் படங்களை தொடர்ந்து பார்ப்பதன் வாயிலாக அந்த இயக்குனர், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இயக்குனரின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படும். சினிமா சார்ந்து இயங்குபவர்கள், உதவி இயக்குனர்கள், மாணவர்கள், திரைப்பட பொது பார்வையாளர்கள், தவறாமல் பங்கேற்க வேண்டிய நிகழ்வு இது.
அனைவரும் வருக….அனுமதி இலவசம்…

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: சித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்

ஈழத்தமிழர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்  – ஓர் அறிமுகம் சிறப்புப் பேச்சாளர்கள் உரை:“சிங்கள பௌத்தரின் பதிவுகள்”  –  திரு.என்.கே.மகாலிங்கம்“தென்னிந்தியப் பதிவுகள்”  – கலாநிதி நா.சுப்பிரமணியன்“பிறநாட்டவரின் பதிவுகள்” – …

Continue Reading →

கிரேக்க நாடகாசிரியர் ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு.

கிரேக்க நாடகாசிரியர்  ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு. - முனைவர் தாரணி அகில் -

-  Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

மிக நீண்ட பயணத்தின் பல்வேறு பரிணாமங்கள் என்பதே  ஒடிசி என்ற வார்த்தையின் பொருள். காலத்தால் அழியா    கிரேக்க காவியமான ஹோமரின் ஒடிசி, காப்பிய நாயகனான யூலிஸிஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரனின் ஒரு நெடுந்தூர பயணத்தை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. கி. மு எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஒடிசி ஹோமரின் முந்தய காப்பியமான இலியட் என்ற புத்தகத்தின் தொடராக அமைகிறது. இலியட் காப்பியத்தில் கிரேக்கர்களும், டிராய் மக்களுக்கும் நடந்த  ட்ரோஜன் போர் மற்றும்  அதன் முடிவு பற்றி விவரிப்பதாக உள்ளது. எனினும், அதன் தொடர்ச்சிக்காப்பியமான ஒடிஸியில் கதாநாயகன் யூலிஸிஸ் ( இன்னொரு பெயர் ஒடிஸிஸ்) மேற்கொள்ளும் தீரம் நிறைந்த பயணங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. ட்ரோஜன் போரில் மிகுந்த துணிவுடன் பங்கு பெற்று தன் கிரேக்க நாட்டுக்கு மாபெரும் வெற்றிக்கனியை ஈட்டித்தரும் யூலிஸிஸ், தன் தாயகமான இதாகாவுக்கு செல்லும் வழியில் பத்து வருடங்களாக  மேற்கொள்ளும் பயண சாகசங்கள் நிறைந்த காப்பியம் என்ற வகையில் ஒடிசி புதுமைக்காப்பியமாக படைக்கப்பட்டு உள்ளது.

தன் சகாக்களுடன் தாயகம் நோக்கி புறப்படும் யூலிஸிஸ் பல்வேறு விதமான விசித்திர அனுபவங்கள் நிறைந்த நெடும்பயணம் மேற்கொள்ளுகிறான். டிராய் நகரத்தில் இருந்து பன்னிரண்டு கப்பல்களில் தன் குழுவினருடன் புறப்படும் யூலிஸிஸ் சிறு தூரம் அலைக்கடலில்  கடந்த பின் ஒரு சிறிய நிலப்பரப்பை காண்கிறான். சிகானீஸ் எனப்படும் அந்நிலப்பரப்புவாசிகள் இந்த குழுவினரை பார்த்து பக்கத்தில் உள்ள மலைகளை நோக்கி ஓடி தப்பிவிட, யூலிஸிஸ் தன் குழுவினருடன் அந்த  நிலப்பரப்பில் இறங்கி அங்குள்ள பொருட்களை சூறையாடி தன் கப்பல்களை நிரப்புவதுடன், நல்ல உணவு மற்றும் வைன் முதலியவற்றை ருசி பார்த்து அனுபவிக்கின்றான்,

Continue Reading →

கவிதை: யசோதரையின் போதிமரம்

கவிதை: யசோதரையின் போதிமரம் - முனைவர் தாரணி அகில்

-  Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

புயல் தாக்கும் பூகம்ப வேளையில், போதிமரம் என்ன செய்யும்?
புத்தன்தான் என்ன செய்வான்?
பொதி சுமக்கும் மனத்தின் குமுறல்கள் யாருக்கு எட்டும்?
சூறாவளி சுழன்று சுழன்று  அடிக்கும் மனப்பிரதேசத்தில் வசிப்பது யார்?
விடையில்லா வினாக்கள் ஆண் வர்க்கத்திற்கே உரித்தாகுமா?
மாயாதேவியின் மாயமகன் நீயாகின் என் வாழ்வே மாயம் ஆனது என்பதா?
யாமத்திலே, மெய் மறந்த தருணத்தில் நீ நீங்கியது கடவுளர்களின் ஆணையோ?
பேரொளி பிழம்பு என்னை நீ துறந்தது உன் ஞானத்தின் முதல் அடியோ?
ஆறாத்துயர் அளித்து ஆறுவது சினம் என்று போதித்தாயோ?
பெண் மனம் பேதை என்ற நிலைக்கு ஆட்படுத்தும் வன்செயல் நிகழ்த்தினையோ?
உன் மனம் முற்றும் துறந்த வேளை என் சித்தம் அழிக்க துணிந்தனையோ ?
காலம் உன்னை வேள்விகளில் நிலை நிறுத்தும் எனில் என் நிலை குலைத்த செயல் நிம்மதியோ?
நிஜமாய் நீ நீடித்திருக்க  நிழலாய் நான் பரிதவித்தேன்
ஈர் ஐந்து வருடங்கள் நீயே என் போதி மரம்
கருவின் வளர்ச்சி என் மணிவயிற்றில்! மன சுழற்சி உன்னிடத்தில்!
நான் தாயாகிறேன். நீ தாயுமானவன் ஆகிறாய்
உன் நிழல் எனக்கு போதித்த பாடங்கள் என் மன வேதனைகள்
புலன் அடக்கிய நீ என் புலன் இச்சை அறியாதது ஏனோ?
பெண்ணுக்கு மெய் பாரம் ஆகுமோ? ஆனது உன்னால் அன்றோ?

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 228: கவிஞர் பிரமிள் சுட்ட ‘தவளைக்கவிதை’யும், அதற்கான மூலமும் பற்றி…..

பிரமிள்:  கவிஞர் பிரமிள் சுட்ட 'தவளைக்கவிதை'யும், அதற்கான மூலமும் பற்றி.....‘ பிரமிளின் தவளைக்கவிதை பற்றியதொரு புரிதல்.’ என்னுமொரு கட்டுரையினை ஏற்கனவே ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்திருந்தேன்.முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் மேற்படி கவிதை பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1539:-17-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54


அந்தக் கட்டுரையில் நான் பிரமிள் அவர்களின் ‘தவளைக்கவிதை’ பற்றிக்குறிப்பிட்டிருந்ததுடன் இப்பதிவினை வாசிப்பது நல்லதென்பதால் அக்கட்டுரையில் அக்கவிதை பற்றிய எனது புரிதலின் சாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மேலே செல்வோம். ஏனெனில் இப்பதிவானது அவரது அக்கவிதையின் தோற்றத்துக்கான மூலம் பற்றியது என்பதால் அக்கட்டுரை பற்றி மீண்டுமொருமுறை பார்ப்பதும் அவசியமானதே. அக்கட்டுரையின் அக்கவிதை பற்றிய கருத்துகளின் சாரம் வருமாறு:

“நூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால், அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா? ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா? ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா? இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது), மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்…… கவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள் புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி ‘தவளைக்கவிதை’ என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, ‘நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.’ என்று சாடுகின்றார் பிரமிள். …….. ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா? பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் ‘தவளைக் கவிதை’ என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார்? குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவளைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்?”

இவ்விதம் அப்பதிவினில் எழுதியிருந்தேன். இனி இப்பதிவுக்கு வருவோம்.

Continue Reading →