முன்னுரை
பண்டைய தமிழ் நாகரிகம் மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாகவும் செய்தி ஊற்றாகவும் அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூலில் ஒன்று அகநானூற்றுப்பாடல்களில் மூலம் பார்த்தால் சிறந்த சிந்தனைகள் மலர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தைப் பிரதிபலிப்பதையும் காணலாம். காதல். களவு, இயற்கை, விலங்கு, பண்பாடு, திருவிழா, சடங்குமுறை முதலியன செய்திகள் இருப்பினும், பல்வேறு உயிரினங்கள் பற்றி செய்திகளை புலவர்கள் பாடல்கள மூலம் அறியமுடிகின்றன. இக்கட்டுரை வாயிலாக அகநானூற்றுப்பாடல்களில் இருவாழ் உயிரினங்கள் ( நிலம், நீர்) பற்றி ஆய்ந்து நோக்கில் கொடுக்க முற்படுகின்றன.
தேரை
தேரை என்ற உயிரியைப்பற்றி உயிரியலார் கூறுவது, தகவல்கள், தவளையினத்தில் ஒன்றாகிய தேரைப்பார்ப்பதற்கு தவளை போன்று இருக்கும். இவை இரண்டுமே அருநிலை வாழ்வியல் வகுப்பைச் சேர்ந்தவை. இரவு இரைதேடும் தேரைகள் நிலத்தில் வாசிப்பவை. எனினும் இவை இருப்பிடம் சதுப்புநிலப்பகுதி அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் தான் அமைந்திருக்கும். தேரை ஊர்ந்தும் நகர்ந்தும் செல்லும். பொதுவாக இவை பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருக்கும் அத்துடன் கறுப்பான வட்டங்கள் புள்ளிகள் காணப்படும். சங்க இலக்கிய நூல் அகநானூற்றில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. தேரையின் ஒலிப்பு முறைகள் ‘நீர்மிசைத்தெவுட்டும் தேரை ஒலியின்’ (அகம்.301:18) எனவும், ‘அவல்தோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க’ (அகம்.364:3) எனவும் அகநானூற்றில் பாடல்கள் மூலம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன.
முல்லை நிலத்தில் மிகுதியாக மழைப்பொழிந்து ஆழமாகிய நீரினையுடைய பள்ளங்கள் இருக்கும் அதில் வாழும் திறந்த வாயினையுடைய தேரைகள் மகிழ்ந்து சிறிய பலவாகிய இசைக்கருவிகளைப்போல் ஒலிக்கும்.