தமிழ்க்கவியின் கிளிநொச்சியும், மலையகத்தமிழரும் -தமிழ்க்கவி’ என்ற கட்டுரை வாசித்தேன். நல்லதோர், ,அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக வந்திருக்க வேண்டிய கட்டுரை மேலும் பல தகவல்களை உள்ளடக்காமல் போனதால் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளிலொன்றாக வரமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக வட, கிழக்கில் பெருமளவு மலையகத்தமிழர்களை எழுபதுகளில் குடியேற்றிய காந்திய அமைப்பு பற்றி எந்தவிதத்தகவல்களுமில்லை.
அது தவிர கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள விடயங்களுக்காக இணையத்தில் பலர் தமிழ்க்கவியைத் தாக்கி வருகின்றார்கள்.
1. “மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.