மொழிபெயர்ப்புக் கவிதை – நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி

vipushika– ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள். கவிதைக்கான குறிப்பு எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது. –

நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள
விபூஷிகா எனும் சகோதரி

விமானத்தைக் காணவில்லை
உலக வரைபடமே இங்கே பார்
யோசனைகளோடு விம்மியழுது
உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

Continue Reading →

மார்ச் 2014 கவிதைகள்!


மார்ச் 2014 கவிதைகள்!நீந்தும் மீன்களை வரைபவள்

 

–  எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை –

அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

Continue Reading →

பெப்ருவரி 2014 கவிதைகள்!

ஜனவரி 2014 கவிதைகள்!1. அம்மா

– ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –

(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)

 இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

Continue Reading →

பொங்கல் கவிதை: திருவள்ளுவர் ஆண்டு 2045 இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பொங்கல் கவிதை: திருவள்ளுவர் ஆண்டு 2045 இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
 
பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
 
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய்
உங்கள் மனமும் ஒளிர்ந்து!
 
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
 
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
 
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
 
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும்  பொதுமை இசைத்து!
 

Continue Reading →

அக்டோபர் 2013 கவிதைகள்!

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

– எம்.ரிஷான் ஷெரீப்

அக்டோபர் 2013 கவிதைகள்!

மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

Continue Reading →