நீங்களும் எழுதலாம்.
1. சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா
யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ நூலுக்கும்; துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைநூலுக்கும் கிடைக்கவிருக்கிறது. இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்
நாள்: சனிக்கிழமை (11-06-2011)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)
ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.
முதல் பகுதி: (3 மணி)
கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்
இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார்.
ஜூன் 11, 2011: ஒன்பதாவது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாவில் ‘காலம்‘ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்‘ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2011. புதிய புத்தகங்கள், புதிய சஞ்சிகைகள்,…
தோழர் யோகரட்ணம் அவர்களது நூல் வெளியீடு 03 யூலை 2011 அன்று பாரிசில் இடம் பெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். http://www.matrathu.com/2011/05/25/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/ matrathu@hotmail.com http://www.matrathu.com/
கவிஞர் செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை – ஈழப் போராட்ட நாட்குறிப்புகள்’ நூல் வெளியீட்டு விழா ஜூன் 18, 2011 சனிக்கிழமை , மாலை 5.30 மணிக்கு…
கவிஞரும் எழுத்தாளருமான திரு.வண்ணை தெய்வத்தின் ஏற்பாட்டில் எஸ். அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் அறிமுகம் பாரீசில் கவிஞை லினோதினி சண்முகநாதன், திருமதி. நவமணி அகஸ்தியர் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது. தனது இறுதிக்காலம் வரை மார்க்சிய சித்தாந்தங்களோடு தன் இலக்கியங்களை முன்னெடுத்துச் சென்ற முற்போக்கு எழுத்தாளரான எஸ்.அகஸ்தியரின் ‘போராடுங்கள்’என்ற வீரகேசரி வார இதழில் 2011 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெளிவந்த சிறுகதையுருவத்தினைச் சுட்டிக் காட்டிய மூத்த பத்திரிகையாளர் திரு. காசிலிங்கம் எந்தக் காலகட்டத்திலும் அகஸ்தியர் தன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்; என்பதனைக் குறிப்பிட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர்; அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்த காலங்களில் அவரின் நூல் வெளியீடுகளுக்குத் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்த திரு.காசிலிங்கம் இன்று அவரது ‘லெனின் பாதச் சுவடுகளில்…’என்ற இந்த நூலுக்குத் தலைமை தாங்குவதைப் பெருமையாகக் கருதுவதாகத் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.
நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme
20.5.2011 வெள்ளி மாலை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 வரை; இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை
சமகால ஈழ நாடகம் : கலந்துரையாடல்; உரையாடுவோர்: இங்கிலாந்திலிருந்து க. பாலேந்திரா கலந்து கொள்கிறார். பாலேந்திரா இலண்டனில் இருந்து இயங்கி வரும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் நெறியாளர். கடந்த பல தசாப்தங்களாகச் சளையாது இலங்கையிலும் புகலிடத்திலும் நாடகங்களைத் தொடர்ந்து நடத்தி வருபவர். புகலிட தமிழ் குழந்தைகளுக்கான நாடகப்பள்ளி இவரது முக்கியமான பங்களிப்பு.
ஜூன் 12, 2011
பொதுக்கூட்டம் – கலந்துரையாடல்: மத்திய இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் நிலத்துக்கான போர் குறித்து மனித நேயம் மிக்க எழுத்தாளர்கள் தங்கள் உணர்வு, அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அருந்ததி ராய் (Arundhati Roy), இந்திய எழுத்தாளர்; தோழர்களுடன் ஒரு பயணம்- Walking with the Comrades, உடைந்த குடியரசு (Broken Republic) நூல் ஆசிரியர். யேன் மிர்தால் (Jane Myrdal), சுவீடன் எழுத்தாளர், இந்தியா மீதொரு சிவப்பு நட்சத்திரம்- (Red Start over India) , நூல் ஆசிரியர். வசந்த இந்திரா மோகன் (Basantha Indra Mohan), இருபத்தியோராம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி- (Imperialism and Proletarian Revolution 21st Century), நேபாள நூல் ஆசிரியர்