ஆய்வு:படகர்களின் சாம்பல் (பூதி) வரையும் திருவிழா

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நெருப்பின் கண்டறிவே மானுட வாழ்வில் சிறந்த பண்பாடு, பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிலைக்கு வித்திட்டது எனலாம். அதே நிலையிலேயே வீடுகளில் நெருப்பிட்டு மிஞ்சும் சாம்பலுக்கும் பல்வேறு பயன்பாடு மற்றும் வழக்காற்று நிலைகள் நிலவுகின்றன. மலை மற்றும் காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் தம் உடலின் வெப்பநிலையினைத் தக்கவைத்துக் கொள்ளவும், உடம்பிலிருக்கும் நீர்கோர்வையினை வற்றச்செய்யவும், உடல் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் உடல் முழுக்க சாம்பல்பூசி வாழ்ந்தது நாம் அறிந்தவொன்றே.

நெற்றியில் திருநீறு அணிவதும்கூட மருத்துவ நிலையில் தலையில் கோர்த்திருக்கும் நீரினை அகற்றுவதற்கான கூறினை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்களின் வாழ்வில் காணப்படும் சாம்பல் பற்றிய வழக்காறுகளை ஆய்வதாகவும், படகர் இன மக்களின் மரபுச் சடங்குகளுள் ஒன்றான சாம்பல் வரையும் சடங்கினை விளக்குவதாகவும் இக்கட்டுரை விளங்குகின்றது.

நீலகிரி படகர் இன மக்கள் சாம்பலை இன்று ‘பூதி’ என்று அழைக்கின்றனர். இது ‘விபூதி’ என்ற சொல்லின் முதற்குறையாக இருக்கலாம். ஆனால் சாம்பலினைத் ‘து’ என்ற ஓரெழுத்து ஒருமொழியில் குறிப்பதே படகர்களின் பழைய வழக்காகும். படர்கள் தம் வீடுகளில் பயன்படுத்தும் மூங்கில் முறவகையினை வீட்டின் சுவற்றில் ஆணியறைந்து அதில் தொங்கவிடுகின்றனர். பூச்சி அரிப்பிலிருந்து அம்முறங்களைப் பாதுகாக்க இம்முறையினைக் கையாளுகின்றனர். முறங்கள் பூச்சி அரிப்பினால் பாதிப்புறும்போது அதை ‘து’ ஆகிவிட்டது, அதாவது தூசியாகிவிட்டது, சாம்பல் போல் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர்.

Continue Reading →

ஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் – ஒப்பீடு

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்கார்ல் மார்க்ஸ்நவீனக்கோட்பாடுகளனைத்திற்கும் அடிப்படையாக விளங்கி நிற்கும் மார்க்சியத்துடன் அதன் நீட்சிகள் ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கின்ற காலச்சூழலில், பெரியாரியச் சிந்தனை முறையியலை மார்க்சியத்துடன் ஒப்பீடு செய்வது கோட்பாட்டு விவாதங்களாக அமைவதுடன், இந்திய அளவில் தனித்தச் சிந்தனை மரபாகப் பெரியாரை உள்வாங்கிக்கொள்ளவும் துணைபுரியும் எனலாம். இந்தியளவில் மார்க்சியம் என்பது வறட்டுத்தனமான வடிவங்களில் பொருளியல் சார்ந்த அர்த்தப்பாடுடன் புரிந்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரியாரியம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற கருத்தியல்களையும் செயல்பாட்டினையும் கொண்டிருக்கிறது. பெரியாரிடம் மார்க்சியம் பற்றிய கருத்தியல்கள் மிகப் பரந்துப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனலாம். “கார்ல் மார்க்ஸ் படைப்புகள், லெனின் படைப்புகள் என இன்னும் சொல்லப்போனால் 1848 இல் மார்க்ஸ், ஏங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை, பத்து வயதுவரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்று பயின்ற பெரியாரால் 1931 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முழுமையாக அல்ல ஒரு சிறுபகுதி அளவில் மொழி பெயர்க்கப்பட்டது” (இரா. அறவேந்தன் (ப.ஆ.), இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், 2014, ப. 149) பெரியாரின் இத்தகைய செயல்பாடுகள் மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப்பார்க்கும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த்து எனலாம். ரஷ்யா, சீனப் பயணங்களுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் புரட்சிகளும் இந்தியச் சமூகங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றனவா என்ற விவாதங்களை நிகழ்த்துகிறார். அதன்பின்னணியிலேயே பொதுவுடைமைச் சித்தாந்தங்களை மொழிப்பெயர்த்து வெளியிடுகிறார் என அறியமுடிகிறது.

மார்க்ஸின் இந்தியா பற்றிய கணிப்புகள் மிக தெளிவாக உள்வாங்கப்பட்டிருப்பினும் அதனைப் பற்றிய புரிந்துணர்வும் செயல்பாடுகளும் இந்தியளவியல் முன்னெடுக்கப்பட வில்லையென்பதே நிதர்சனமாகயிருக்கிறது. “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்’’ (எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் (மொழி.), இந்தியாவைப் பற்றி, 1971, ப. 111) என்ற கருதுகோளைப் பெரியார் இந்திய மண்ணில் மிகச்சரியாகவே உள்வாங்கிக்கொண்டு செயலாற்றியவராக இருக்கிறார் என்பதே பெரியாரின் சிந்தனையை முக்கியத்துவமுள்ளதாக மாற்றியுள்ளது. பெரியாரின் பார்வை சமதர்மத்தை நோக்கியவையாக இருந்தாலும் பொதுவுடைமைச் சமூகம் தோன்றுவதற்கு முன்னால் பண்பாட்டளவிலான சமதர்மத்தையும் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் உறுதி செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவராகப் பெரியார் செயலாற்றுகிறார். சாதி எதிர்ப்யைம் அதன் காரணியான மத எதிர்ப்பையும் பெரியார் அடிப்படை நோக்கமாக்க் கொண்டு செயலாற்றியுள்ளார். “அரசியல், பொருளாதார இயல் என்பவைகளைப் பிரதானமாகக் கருதாதீர்கள். அறிவியல், மனவியல், சரிப்பட்டுவிட்டால் அரசியல் கஷ்டம், பொருளாதார இயல் கஷ்டம் தலைக்காட்டவே காட்டாது” (ஈ.வெ.ரா. சி., ப. 1992) இங்குப் பொருளியல் காரணிகளைவிட பண்பாட்டுச் சமத்துவத்தினை முதன்மையாக்க் கருதுகிறார்.

Continue Reading →

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்கலாச்சாரத்தை மையப்படுத்தல் என்ற அடிப்படையினைப் பெரியார் தனது சிந்தனை முதன்மையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் நடைபெற வேண்டிய எழுச்சி கலாச்சாரக் கேள்விகளைக் கொண்ட எழுச்சிதான் என்பதனைத் தனது செயல்பாடுகளில் வகைப்படுத்தியிருக்கிறார். “ஒரு தாராளவாதியாக, தேசத்துரோகியாக, மொழிப்பற்றை விட்டவராக, சிலை உடைப்பாளராக, எதிர்க் கலாச்சார வாதியாக, எல்லா விதமான பற்றுகளுக்கும் எதிரியாக, சுய உறுதியாகத்தையே விடுதலை என்று உணர்ந்தவராய், மொழிந்தவராய்ப் பெரியாரை அணுகுதல் என்பது பெரியாரின் மறைக்கப்பட்ட பரிமாணங்களையும் மவுனமாக்கப்பட்ட சிந்தனைகளையும் மட்டுமின்றி இந்த நோக்கில் நிகழ்காலச் சூழலையும் விளங்கிக்கொள்ளப் பயன்படும்” (அ. மார்க்ஸ், பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு, 2018, ப. 152) பண்பாட்டு அடிப்படையிலான நிகழ்காலச் சூழலின் மீது விமர்சனம் செய்த பெரியாரின் சிந்தனை மரபினைக் கடவுள் மறுப்பாளர் என்ற பொதுப் பின்னணியில் வைத்து குறுக்கிவிடுகின்றனர். பண்பாட்டு அடிப்படையிலான முன்னெடுப்புகள்தான் பெரியாரியச் சிந்தனையின் மையப்புள்ளி என்பதனைக் கிராம்சியின் அணுகுமுறைகளிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.

கிராம்சி காந்தியின் போராட்ட வடிவங்களைப் பிற்பற்றியதோடு அதனைக்குறித்து நேர்மறையான எண்ணங்களையும் கொண்டிருக்கிறார். இத்தாலியின் அடக்குமுறைகளுக்கெதிராகப் பண்பாட்டு வடிவங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையினைக் குறித்துப் பேசிய கிராம்சி பண்பாட்டுச் சமூகங்களில் அரசியல் முன்னெடுப்புகளைவிட பண்பாட்டு முன்னெடுப்பு வடிவிலான நடைமுறை செயல்பாட்டு விமர்சனங்கள் முக்கியமானது என வலியுறுத்துகிறார். இந்த வகையான சமூக நிலைப்பாடுகளைக் குறித்து மார்க்ஸின் கருத்துக்களும் நோக்கத்தக்கது. இந்தியச் சமூகம் நிலைப்படுத்தப்பட்ட வடிவிலானது. எத்தகைய அரசியல் மாற்றங்கள் வந்தாலும் பண்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. “ஆசியக் குழுமச் சமூகத்தில் முன்னுரிமை அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ குறிக்கப்படலாம். இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின் தொப்புள் கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை” (ந. முத்துமோகன், மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும், 2013, ப. 19) இந்தியச் சமூகத்தின் பிணைப்பு மணமுறையுடன் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் குழுவின் பிளவுகளில் தங்கியிருக்கிறது. இந்த வகையான சமூகங்களில் ஆதிக்கம் செலுத்துவது அரசியல் மட்டுமல்ல. தெய்வமும் பண்பாட்டு வழக்கங்களும் என்பதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

Continue Reading →

ஆய்வு: முல்லைப் பாட்டில் பண்பாட்டுப்பதிவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


முன்னுரை

பொதுவாகப் பண்பாடெனப்படுவது ஒருவகையில் வாழ்வியல் முறைகளைக் குறிப்பதாக அமையும். மனிதர்களது நடத்தைகள். அவர்களது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பாக இது காணப்படுகின்றது. அவ்வாறே இலக்கியங்கள் என்பனவும் மனித சமுதாயத்தைப் பண்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்பு பெறுகின்ற தெனலாம். இவ்விலக்கியம் பண்பாட்டு பதிவுகளை இனங்காண்பதற்கு ஆதாரமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பாட்டு
தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பெற்ற சங்க காலத்துத் தமிழ் நூல்களாகக் கருப்பெறுவன பாட்டும் தொகையுமாகும். இவ்விருவகை நூல்களும், அளவாலும் திறத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வகைப்படுத்தப்பெற்றன என்பர். இவ்விருவகை நூல்களும் தமிழ்மக்களின், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய, சமுதாய நம்பிக்கைகள், அகம் புறம் ஆகிய வாழ்க்கை நெறிகள் ஆகிய எல்லாவற்றையும் பொதிந்து வைத்திருக்கின்ற பேழைகளாக விளங்குவன.

Continue Reading →

ஆய்வு: பாலைக்கலியின் பண்பாட்டுப் பதிவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


முன்னுரை:
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பண்டைத் தமிழர் தம் வாழ்வில், மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும் இலக்கியக் கலையைக் கொண்டுள்ளனர். அதனை, இன்றைய வரையில் நம் முன்னோர் எண்ணங்களாகவும் உயரிய நோக்கங்களாகவும் அழியா செல்வமாகவும் போற்றுகின்றனர்.

மனிதனின் செயல்பாடுகள் செயற்பாடுகளுக்கான சிறப்புத் தன்மைகள், அதன் முக்கியத் துவத்தை கொடுக்கும் குறியீடாக அமைகிறது. ஒரு தனி மனிதனைச் சார்ந்தும், மக்களைச் சார்ந்தும் அறிய வேண்டிய பண்பாடு என்பது கற்கப்படுவது. குறியீட்டு நடத்தை முறையாக அமைவதுதான்.  சமூகத்தின் ஒரு உறுப்பினராக இருந்து நாம் கற்கும் பிற திறமைகளிலும், பழக்கவழக்கங்களிலும் அடங்கி இருக்கும் தொகுதியாகதான் நம் பண்பாடு உள்ளது. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்று கலித்தொகையும் கூறும்.  பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.  மேலும் பண்பாடு என்னும் அமைப்பு பல வடிவங்களில் மனித சமுதாயத்தில் செயல்டுகிறது.  சமூகத்தில் உயர்ந்த பண்புகளை நிலைநிறுத்தி, அதன்மூலம் மக்களை நல்வழிபடுத்தவும் செய்கிறது. அத்தகைய பண்பாட்டுக் கூறுகள் எங்ஙனம் பாலைக்கலிப் பாடல்களில் பதிவாகியுள்ளது என ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.

Continue Reading →

ஆய்வு: அந்தோனியா கிராம்சியின் சமூகவியல் சிந்தனைகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?சமூகவியல் என்பது ஓர் ஆய்வுமுறை என்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், அதன் அசைவியக்கத்தினைப் பற்றியும், பௌதீக நெறி நின்று விளக்கும் அறிவியல் துறையுமாகும். மக்கள் குழும உணா்வுடன் தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் தமக்கான ஒருவிதப் பாதுகாப்பைப் பெறவும் உருவாக்கிக் கொண்டதே சமூக அமைப்பாகும். இது பல்வேறு அலகுகளாலும் பற்பல அடுக்குகளாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இத்தகைய சமூகக் கட்டுமானங்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகளை அறுதியிடவுமான அறிவுத்துறையாகவும் சமூகவியல் விளங்குகிறது.

சமூக இருப்பை உணர்தல் என்பதான தத்துவார்த்த தேடல் வரலாற்றுக் காலந்தொட்டே மனித சாராம்சத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த போதிலும்     கி.பி. 19-ம் நூற்றாண்டில்தான் சமூக வாழ்வு பற்றிய அறிதலும் வாழ்நிலை சார்ந்த புரிந்துணர்வும் விஞ்ஞானரீதியில் முழுவதுமாகத் துளக்கமுறத் தொடங்கின. சமூகத்தில் மனித இருத்தலைப் பற்றிய புதிர்கள் தெளிவுறுத்தப்பட்டன.

இச்சமூகவியல் என்னும் அறிவுத்துறையின் தோற்றத்திற்குக் காரணமானவா் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் கோண்ட் ஆவார். இவரே சமூகவியல் என்ற பெயரோடு இந்த அறிவுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.1 சமூகம் தொடர்பான இயற்கைவழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கோண்டின் பிரதான இலக்காக இருந்தது. இது மனிதகுலத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றி மதிப்புரைப்பதாகவும் இருந்தது. ஆகஸ்ட் கோண்ட்டைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள் சமூகவியல்சார் சிந்தனைகளை வளர்த்தெடுத்துள்ளனர்..

சமூக நடத்தை விதிகளை ஆராய்வதும் அதற்கான காரண-காரிய தொடர்பை விளக்குவதும் சமூகவியலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இது பிற சமூக அறிவியல்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூக அறிவியலாளர்கள் கண்டறிந்த மூலங்களிலிருந்தும் பல்வேறு  தரவுகளைச் சமூகவியல் பயன்படுத்திக் கொள்கிறது. வரலாற்றியல், மானுடவியல், மொழியியல், பொருளாதாரவியல், இனவரைவியல், அரசியல், அறவியல், உளவியல் போன்ற பல்வேறு அறிவாய்வுத் துறைகளும் சமூகவியலுக்குப் பங்களிப்பைச் செய்துள்ளன.

Continue Reading →

ஆய்வு: வேலூர் மாவட்ட இருபெரும் சிவன் திருத்தல வரலாறும் கட்டிட அமைப்பும் – ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
வேலூர் மாவட்டத்தில் வேலூர்க் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயமும் விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீசுவரர் ஆலயமும் வரலாற்று சிறப்பு மிக்கவைகளாகவும் சிறந்த கட்டிட அமைப்பினை உடையவையாகவும் திகழ்கின்றன. அவற்றின் அமைப்பும் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் அவைகள் பெறும் இடத்தைக் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

விரிஞ்சிபுர மார்க்கபந்தீசுவரர் கோயில்

கரன் என்னும் சுராசுரனுக்கு அருள்பாலித்த வரலாற்றையும் தென்கயிலாயக் கிரிப்பிரதட்சிண விழாவில் கரிகாற் சோழ பூபதிக்குத் துக்கம் காட்டிய வரலாற்றையும் இக்கோயில் உணர்த்துகின்றது.

“பாலிமாநதித் தெய்வநீராடிய பலத்தா
லாலமாயவ னேயமாயவன் புரத் தடைந்தான்
சாலுமப்பதி யடைந்திடு மரும்பெருந் தவத்தாற்
சூலபாணியாம் வழித்துணை மருந்தரைத் தொழுதான்”1

இதன் வழி, அரசன் தெய்வத் தன்மையுள்ள அப்பாலாற்றின் நீரில் மூழ்கிய பலத்தினால் அன்புடன் திருமால் பூசை செய்ததாகிய விண்டுபுரியிற் சேர்ந்தான். இவனைத் தொடர்ந்து கௌரி, பிரமதேவர், திருமால் ஆகியோரும் முனிவர்கள் பலரும் பாலாற்றில் மூழ்கி நீராடி மார்க்கபந்தீசுவரரைப் பூசித்து மலையை வலம் வந்தனர். இவ்வகையில் இவ்வழி துணையம்பதி தென் கயிலாயங்கிரி போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனையே,

“மன்னிய விமானந்தோன்று மிடமெல்லாம் வானோர்நாடா
மின்னிசை முரசங்கேட்டு மிடமெலா மயனா டென்பர்
சென்னியர் துதினோசை தெரிவிடந் திருமாலூரா
முன்னிய சிவன்வாழ் கோயி லுருத்திர னுலகமாமே”2

சிவலிங்க பெருமான் வீற்றிருக்கிற இடமெல்லாம் தேவருலகத்துக்குச் சமானம் என்றும் அங்கு முழங்கும் இனிதான ஓசையுள்ள முழவு கேட்குமிடமெல்லாம் திருமால் லோகமென்றும் பரமசிவம் வீற்றிருக்கும் திருக்கோயிலானது திருகண்டருத்திர லோகமாகிய கைலாசம் என்றும் அத்தலத்தின் முக்கியத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.    கரிகாற் சோழ பூபதிக்கு மார்க்கபந்தீசுவரர் கிரிப் பிரதட்சண விழாவின் போது அருள்புரியும் காட்சி, மாசி மாதம் அருணாசலேசுவரர் திருவண்ணாமலை பள்ளிக் கொண்டாப்பட்டில் வல்லாள மாமன்னர் காலமானதற்குத் திருக்கருமம் செய்வதைப் போல் இருந்தது. தென் கயிலாயகிரி முகப்பில் இடபம் இருந்து வருவதும் அங்குள்ள மலையாள அன்பர் இடபக்கொடி பறக்கவிட்டு அதில் வேட்டு வெடித்துத் தென் கயிலாயகிரி பிரதட்சிண விழாவில் மார்க்கபந்துவை வணங்கி, திருவிழா கொண்டாடுவதும் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிற சிறப்பாகும்.

Continue Reading →

ஆய்வு: சங்ககாலச்சடங்குகளும் பெண்களின் நிலைப்பாடும்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாய் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பன சங்க இலக்கியங்கள். தமிழின் செழுமைக்கு மட்டும் சான்றாய் நிற்காது பன்முகப்பதிவுகளைத் தன்னகத்தே கொண்டன இவ்விலக்கியங்கள் என்பது கூடுதல் சிறப்பு. அவற்றிலும் ஒரு காலச் சமூகத்தை அடையாளம் காட்டும் அற்புத இலக்கியங்கள். இதில் காணக்கிடப்பன பல. அவற்றுள் ஒன்று அக்காலத்திய சடங்குமுறைகளும் அதில் பெண்களுக்கான பங்களிப்பும் குறித்தது. பெண்ணியக்கோட்பாடு வேரூன்றி மரமாகி நிற்கும் இக்காலச்சூழலில் ஒவ்வொரு காலத்திய பெண்கள் பற்றிய பதிவுகளை, அவர்களுக்கானச் சமூகச் சூழலை இலக்கியங்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் சங்ககால இலக்கியங்களில் வழி அறியலாகும் சடங்குகள் குறித்தும் அவற்றுள் பெண்கள் குறித்த சமூகநிலைப்பாடும் இங்கு ஆய்வுக்கு உரியதாகிறது.

சங்ககாலச் சடங்குகள்
வழிபாடுகளும் சகுனங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மக்களின் வாழ்வில் சங்ககாலம் தொட்டு இயைந்த ஒன்றாக உள்ளமையை இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றன.

‘அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின் வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப’(முல்லைப்பாட்டு 7-11)

என்று முல்லைப்பாட்டு மக்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கை குறித்துச் சுட்டுகிறது. நெல்லையும் மலரையும் தூவி வழிபட்ட முறைமைகளையும் எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்தும் முன்னர் நற்சொல் கேட்டு நடத்தும் நம்பிக்கையையும் பண்டைய மக்கள் வாழ்வில் பின்பற்றியமை குறித்து இவ்வடிகளின் வழி அறியமுடிகின்றது.

Continue Reading →

ஆய்வு: குறுந்தொகை காட்டும் வேட்டைக் குடியினா்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?– பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 –


நாடோடியாகச் சுற்றித்திரிந்த கற்கால மனிதன் ஒரு குடும்பமாக, இனக்குழுவாக, சமுதாயமாக வளா்ச்சியுற்றுப் பின்னா் நிலவுடைமை, அரசுடைமைச் சமுதாயமாக சங்ககாலத்தில் தொடங்கியோ தொடா்ந்தோ குடிகளுள் ஒருவனாக மாறினான். நில அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் வேட்டுவா்கள், ஆயா், கானவா், உழவா், பரதவா் என்னும் வகைகளாகப் பகுக்கப்பட்டதை தமிழ் இலக்கணங்கள் கூறுகின்றன. குடிவழியோடு குயவா், தச்சா், பாணா், பொற்கொல்லா் போன்ற தொழில்வழிச் சாதியினரும் தோற்றம் பெற்றனா், ஒத்த குடிவழியோ ஒத்த தொழில்வழியோ ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் வாழ்ந்ததால் ஓா்குடிமக்கள் எனப்பட்டனா். குடிவழியறியப்பட்ட வேட்டுவா்களைப் பற்றி குறுந்தொகைப் பாடல்கள் வழி அறியமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

குறவா் குடி :

ஆதிமனிதனின் முக்கியத் தொழிலாக இருந்தது வேட்டைத் தொழில். மலைநிலம் சார்ந்த நிலங்களில் உருப்பெற்றதால் வேட்டைத் தொழில் குறிஞ்சித் திணை சார்ந்து அறியப்பட்டது. குறிஞ்சியோடு முறைமை திரிந்து பாலையாகப் படிமங்கொள்ளும் போதும் வேட்டைத் தொழில் தொடா்ந்ததை தமிழிலக்கியவெளியில் காணமுடிகிறது.

Continue Reading →

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் காப்புத் திருவிழாவும் இயற்கை வாழ்வும்

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -உயிரிகளின் அறிவுநிலையானது ஒன்றன் படிநிலையிலிருந்து அடுத்தவொன்றின் வளர்ச்சியாக அமைந்திருப்பதை உணரவேண்டியது இன்றியமையானதகும். தம் சூழலைச்  சுற்றி வாழும் உயிரிகளை உற்றுநோக்கி, இணங்கி வாழும் நிலையானது மனிதனின் பகுத்தறிவின் நோக்கமென்று கூறுவதில் மிகையில்லை. மனிதனின் பகுத்தறிவின்  வளர்ச்சிக்கு இப்படிநிலையே மூலமாக இருந்திருக்கக்கூடும். அந்நிலையில் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் பலநிலைகளில் அரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.

தமிழர்களின் நிலவமைப்பிற்கும், புறத்திணைக்கும் பெயர்க்குறியீடாக  அதற்கேற்ற தாவரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்தவொன்றாகும். இது தமிழர்களின் சூழலியல் அறிவிற்குத் தக்கச் சான்றுமாகும். நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்கள் தம் மரபார்ந்த சடங்கான “சக்கலாத்தி” எனும் நிகழ்வில் பயன்படுத்தும் தாவரங்களையும் அதன் குறியீட்டு நிலையினையும் இக்கட்டுரையானது விளக்கி ஆய்கின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற படகர்களின் வாழ்வியலானது பல்வேறு கலாச்சார, பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கியது. முன்னோர் வழிபாட்டினைத் தமது ஆதி வழிபாட்டாகக் கடைப்பிடித்து வருகின்ற படகர்கள் தம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் வழியில் தாம் வாழ்வதனைக் காட்டும் விதமாக நிகழ்த்தப்படும் சடங்கே இந்தச் ‘சக்கலாத்தி’ எனும் நிகழ்வாகும். இது படகர்களின் புத்தாண்டாகவும் கொள்ளப்படுகின்றது.

Continue Reading →