காலம் : Sep 15 ,2015 மாலை ஆறு மணி இடம் : Rainbow villlage , 2466 Eglinton avenue east. 2nd floor party…
அவுஸ்திரேலியாவில் வதியும் மிருகவைத்தியரும் எழுத்தாளருமான டொக்டர் நடேசன் கனடாவுக்கு வருகைதந்துள்ளார். சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள் முதலான துறைகளில் சில நூல்களையும் வரவாக்கியிருக்கும் நடேசனுடனான சந்திப்பு கலந்துரையாடல் …
“மொழிபெயர்ப்பியல் ஆய்வரங்கு” ஒருங்கிணைப்பு: சின்னையா சிவநேசன் நிகழ்ச்சி நிரல் “அன்றாட தமிழாக்கத்தின் இன்றைய நிலவரம்” – உஷா மதிவாணன்“தமிழாக்கத்தில் வாசகர்களின் எதிர்பார்ப்புகள்” – சுல்பிகா இஸ்மயில்“புனைவிலக்கிய தமிழாக்கத்தில்…
12-09-2015 – சனிக்கிழமை, இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர், கன்னிமாரா நூலகம் எதிரில். மாலை 4 மணிக்கு. சிறப்பு அழைப்பாளர்கள்:செயல்பாட்டாளர் சிவகாமி IASஎழுத்தாளர் அழகிய…
‘தேடல்களின் வெளிப்பாடாகவும்,சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும் ‘கட்டைவிரல்’ கட்டுரைகளைப் படிக்க முடிந்தது . இலங்கை வீரகேசரியில் வெளியான பல கட்டுரைகள் கட்டை விரலுக்கு அழகு சேர்ப்பதாகவும், ‘தடுத்திடுவார்கள் இன அழிப்பை’,‘போர்க்காலக் காதல்’ போன்ற கவிதைகள் கடந்த கால,சமகால நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டும் சிறந்த கவிதைகள்’ என முன்னாள் லண்டன் தெற்கு லண்டன் சதாக் பகுதியின் நகரசபை முதல்வரும்,தற்போதைய நகரசபை உறுப்பினருமான செல்வி எலிசா மன் அவர்கள் லண்டன் ஈஸ்ற்ஹாம் ரினிற்ரி மண்டபத்தில் மிக அண்மையில் பாரீசிலிருந்து வருகைதந்த திவ்வியநாதனின் நூல்; வெளியீட்டின்போது, தனது தலைமையுரையில் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் பேசுகையில்: ‘ கட்டைவிரல்’ தொகுப்பில் கவிதை, கட்டுரை,சமையற்குறிப்புகள் என விரிந்து கிடப்பது பாராட்டுக்குரியது. திவ்வியநாதனின் இத்தகைய உழைப்பு தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய அளப்பரிய செயற்பாடு. மேலும் இத்தகைய ஈடுபாடு; தொடரவேண்டுமென வாழ்த்துக் கூறினார்;.’
‘ நூலசிரியர் திவ்வியநாதன் பல புத்தங்களின்; தேடல்களினால் பெற்றுக் கொண்ட அறிவையும்,அவரது சொந்த அனுபவங்களையும் ஒன்று சோர்த்து இக் ‘கட்டைவிரலை’ப் படைத்துள்ளார். இக் ‘கட்டைவிரல்’ ஆங்கில மொழியில் வெளிவருமேயானால் மேலும் பயனுள்ளதாக அமையும்’ என இலக்கிய ஆர்வலரும்,இரசாயனப் பொறியியலாளருமான திரு ஜெயதீசன் தனது உரையில் தெரிவித்தார்.’
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவிற்காக கோவிந்த் நிலானி சென்னை வந்திருந்தபோது, அவருக்கும் படத்தொகுப்பாளர் லெனினுக்கும் இடையே இரண்டுமணிநேரம் சினிமா பற்றிய விவாதம் நடைபெற்றது. இருபெரும் ஆளுமைகள்,…
சென்ற சனிக்கிழமை 22-08-2015 அன்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுகதைப் பயிலரங்கு ஒன்று ஸ்காபறோ சிவிக்சென்ரர் மண்டப அறையில் காலை 9:00 மணி தொடக்கம் மதியம் 12:00மணி வரை நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவரும் எழுத்தாளருமான திரு. குரு அரவிந்தன், மற்றும் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ஆகியோரால் தமிழ் சிறுகதை ஆர்வலர்களுக்காக இந்த சிறுகதைப் பட்டறை வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது சிறுகதைகளையே உதாரணமாக எடுத்து சிறுகதை பற்றி எல்லோரும் புரிந்து கெனாள்ளும் வகையில் விளக்கங்களைத் தந்தார். பேராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தமிழ் நாட்டில் சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
‘லட்சக்கணக்கான வாசர் வியாபத்தைக் கொண்ட, தமிழ் இலக்கிய உலகம் அறிந்த எழுத்தாளர் குரு அரவிந்தன், சிறுகதைகள் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்’ என்று எழுத்தாளர் இணையத் தலைவர் கலாநிதி சிவநாயகமூர்த்தி அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய குரு அரவிந்தன் சிறுகதை பற்றிக் குறிப்பிடும் போது தனது அனுபவங்களையே முன்வைத்தார்.
சிறுகதை பற்றிச் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை சீரான நடையோடு கற்பனைத் திறன் கலந்து சொல்வதுதான் சிறுகதை என்பது எனது கருத்து என்று குறிப்பிட்ட அவர், சிறுகதை மையக்கருவோடு அதாவது கதையின் நோக்கத்தோடு ஒன்றிப்போனால் மிகவும் சிறப்பாக அமையும். வாசகர்களுக்கு அதை வாசிக்கும் போது அந்தக் கற்பனைப் புனைவு மனதில் ஏதாவது நெகிழ்வை ஏற்படுத்துமானால், அது தரமான ஒரு சிறுகதையாகக் கணிக்கப்படலாம். சிறுகதை எப்படி இருக்கக்கூடாது என்று பார்ப்போமேயானால், கட்டுரைத் தன்மையில் இருந்து மாறுபட்டிருக்க வேண்டும். சிறுகதையில் உபகதைகள் சொல்ல வெளிக்கிட்டால் அது குறுநாவலுக்கான முயற்சியாக மாறிவிடலாம். அதுமட்டுமல்ல, சிறுகதையில் உபதேசத்தைத் தவிர்ப்பதும் நல்லது என்றே எண்ணுகின்றேன் என்றார்.
நண்பர்களே, பேசாமொழி மாற்று சினிமாவிற்கான தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. தற்கால தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனரின் படம் பேசாமொழியில் அட்டைப்படமாக வருவது இதுவே முதல்முறை. அந்த பெருமை இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களையே சாரும். பாலாஜி சக்திவேலின் மிக நீண்ட நேர்காணலும், அவருடன் நான் நடத்திய கலந்துரையாடலின் சுருக்கமான வடிவமும், இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. தவிர பண்ணையாரும் பத்மினியும் திரைப்பட இயக்குனர் அருண்குமாரின் நேர்காணலும் இந்த இதழில் வெளியாகியிருக்கிறது.
நிகழ்ச்சி நிரல்: “வரலாற்றில் ஜெயகாந்தன்” பிரதம பேச்சாளர் உரை: “ஜெயகாந்தனின் ஆளுமை அம்சங்களும் இன்றைய சூழலில் அவரைப் பற்றியசிந்தனைகளின் தேவையும்” – கலாநிதி நா. சுப்பிரமணியன் சிறப்பு…
தகவல்: பொ.கருணாகரமூர்த்தி karunah08@yahoo.com