‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கம்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 25-04-2015

மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

'ரொறன்ரோ' தமிழ்ச்சங்கம்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 25-04-2015எமது புத்தாண்டு
ஒருங்கிணைப்பு:
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

நிகழ்ச்சி நிரல்:
எமது புத்தாண்டு – காலக்கணித மரபு – கலாநிதி பால.சிவகடாட்சம்
எமது புத்தாண்டு – தமிழர் மரபு – திரு.வே.தங்கவேலு (நக்கீரன்)
எமது புத்தாண்டு – அறிவியல் மரபு – திரு.சிவ.ஞானநாயகன்

ஐயந்தெளிதல் அரங்கு: மார்ச் மாத இலக்கிய நிகழ்வுகள்

நாள்: 25-04-2015
நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
 3A, 5637, Finch avenue East,
Scarborough,
M1B 5k9

Continue Reading →

கவிஞர் சோ. பத்மநாதன் மொழிபெயர்த்த Sri Lankan Tamil Poetry

கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் மொழிபெயர்த்த ஈழக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய Sri Lankan Tamil Poetry – An Anthology என்ற (தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட)…

Continue Reading →

பேசாமொழி 31வது இதழ் வெளியாகிவிட்டது…

நண்பர்களே, பேசாமொழி இணைய இதழின் 31வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. இனி ஒவ்வொரு மாதமும் மிக சரியாக 1ஆம் தேதி இதழ் இணையத்தில் வெளியாகும். பேசாமொழி இனி…

Continue Reading →

ஈழத்துப் புலம் பெயர் இலக்கியம்: ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் சிறப்பிதழ்

– புகைப்படத்தில்: கலாநிதி நா. சுப்பிரமணியன், வைத்திய கலாநிதி லம்போதரன், விசேட பிரதியைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன், மற்றும் எழுத்தாளர் அகில் –

 சர்வதேச எழுத்தாளர்களை மட்டுமல்ல, குழுசார் நிலையில் இயங்கிவந்த கனடிய தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை அறிந்தோ அறியாமலோ ஈழத்துப் புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழ் மூலம் ஒன்று சேர்த்த பெருமை தாய்மண்ணில் இருந்து வெளிவந்த இந்த ஞானம் மலருக்கே உண்டு. கனடிய சிறுகதை எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் இந்த இதழில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக அ. முத்துலிங்கம், யோகா பாலச்சந்திரன், தேவகாந்தன், குமார் மூர்த்தி, க.நவம், சக்கரவர்த்தி, திருமாவளவன், குரு அரவிந்தன், வ.ந. கிரிதரன், அகில், சுமதி ரூபன், வீரகேசரி மூர்த்தி, மனுவல் ஜேசுதாசன்,  ஸ்ரீ ரஞ்சனி, துறையூரான், கடல் புத்திரன், மெலிஞ்சிமுத்தன், இளங்கோ, வசந்திராஜா ஆகியோரது சிறுகதைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டத் தக்கது. இந்த மலரில் தற்போது கனடாவில் வசிக்கும் மூத்த பெண் எழுத்தாளர், அன்று வீரகேசரியில் எஸ்.பொ.வுடன் சேர்ந்து ‘மத்தாப்பு’ எழுதிய குறமகளின் (வள்ளிநாயகி இராமலிங்கம்) சிறுகதை தவறவிடப்பட்டிருப்பதை முக்கியமாக அவதானிக்க முடிந்தது. மிகவும் கவனமாகவும் சிறப்பாகவும் தயாரிக்கப்பட்ட இந்த மலரில் சில கட்டுரைகள் அரைத்த மாவையே அரைப்பது போல ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்கின்றன. பழைய பல்லவியையே பாடுகிறார்கள் என்பதும், விரிந்து பரந்த இந்த இலக்கிய உலகில் அவர்களிடம் புதியதேடுதல் இல்லை என்பதும் மிகவும் தெளிவாகப் புரிகின்றது. பயமா அல்லது பக்தியா தெரியவில்லை. இதைப்பற்றிய தனது கருத்தை இணையப் பத்திரிகையான பதிவுகள் ஆசிரியர் வ.ந. கிரிதரன் அவர்கள் குறிப்பிடும் போது, ‘ஆவணப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். எந்தவித ஆவணப்படுத்தல்களுமின்றி, ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும் பலர் தமக்குக்கிடைக்கும் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு, பல படைப்புகளைப் படித்துவிட்டு எழுதுவது போன்றதொரு தன்மை தெரியும் வகையில் எழுதிவருகின்றார்கள். இவர்கள் இவ்விதம் எழுதுவதன் மூலம் உண்மைகளைக் குழி தோண்டிப்புதைக்கின்றார்கள்.’ என்று பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading →

எழுத்தாளர் ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடு

வணக்கம்! வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல்…

Continue Reading →

சமூக நீதி 2015: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 பிறந்தநாள் விழா!

1_panuval5.jpg - 31.78 Kbபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் 125 பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தை சமூக நீதிக்கான மாதமாக அனுசரிக்க சென்னையிலுள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளது. மார்ச் 28, 2015 அன்று தொடங்கும் சமூக நீதி நிகழ்வுகள் தொடர்ந்து ஏப்ரல் 26, 2015 வரைக்கும், ஒவ்வொரு சனி, ஞாயிறன்றும் நடைபெறும்.

போட்டிகள்
மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்புடன் நிகழ்ச்சிகளைச் செய்ய விரும்புகிறோம். இந்த அடிப்படையில் டாக்டர் அம்பேத்கரின் சாதியை ஒழிக்கும் வழி நூலை முன்வைத்து, கட்டுரை, குறும்படம், ஒளிப்படப் போட்டிகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம். மேலும் தகவல்களுக்கு http://www.panuval.com/blog/?p=29 பார்க்கவும்

சிறப்பு புத்தக விற்பனை
சமூக நீதி நிகழ்வுகள் நடக்கும் காலம் முழுவது கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் (அஞ்சல் செலவு தனி)

சாதி அழித்தொழிக்கும் வழி ரூ. 70/-
அயோத்திதாசர் சிந்தனைகள் ரூ.1400
நொறுக்கப்பட்ட மக்களும் மறுக்கப்படும் நீதியும் ரூ.200
தம்மபதம் ரூ.130
மனுதர்ம சாஸ்திரம் ரூ. 160

Continue Reading →

27.03.2015 – இலக்கியவீதி அழைப்பு: ‘மறுவாசிப்பில் அகிலன்’..

அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’.. தலைமை : திரு. இல. கணேசன் அவர்கள்…

Continue Reading →

நூல் விற்பனை: திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபாவின் ‘அவளுக்குத் தெரியாத ரகசியம்’ (நாவல்) !

நாவல் – அவளுக்குத் தெரியாத ரகசியம்நாவலாசிரியர் – திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபாபக்கங்கள் – 218வெளியீடு – எக்மி பதிப்பகம்விலை – 300 ரூபாய்தபால் செலவு –…

Continue Reading →

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவின் நிகழ்வு!

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவின் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். 28/03/2015 சனிக்கிழமை பி.ப.3:00 மணி தொடக்கம் மாலை 9:00 மணி வரை அன்புடன் லக்ஷ்மி…

Continue Reading →

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது விழா-2015

அதிபர் கனகசபாபதி கவிஞர் கந்தவனம்கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைக் கனடாவின் மூத்த தமிழ் இலக்கிய முன்னோடிகளான அமரர் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்களுக்கும் கவிஞர் திரு. வி. கந்தவனம் அவர்களுக்கும் வழங்கிக் கௌரவித்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை (14-03-2015) ஸ்காபரோ சிவிக்சென்ரர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக அன்று நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவரது வரவேற்புரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றோம்.

‘முதற்கண் அமரர் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அமரர் அதிபர் பொ, கனகசபாபதி அவர்களுக்கான தேகாந்த நிலை விருதை ஏற்றுக்கொள்ள வந்திருக்கும் அவரது குடும்பத்தினரான மணிவண்ணன், மணிமொழி, மணிவிழி ஆகியோரையும், இன்றைய விழா நாயகனான கவிநாயகர். வி. கந்தவனம் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்ததையிட்டு, அவர்களை அன்புடன் வரவேற்கின்றேன். தமிழ்த்தாய் வாழ்த்து, கனடிய தேசீய கீதம் ஆகியன இசைத்த செல்விகள் சங்கவி முகுந்தன், சாம்பவி முகுந்தன் அவர்களையும் அமரர் அதிபர் கனகசபாபதி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து கௌரவம் தந்த கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஸ்ணன் அவர்களையும் வருக வருக என வரவேற்கின்றேன். அடுத்து தலைவர் உரையாற்றவிருக்கும் எமது இணையத் தலைவர் கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி, தகமைச்சான்றுரை ஆற்றவிருக்கும் பேராசிரியர் நா.சுப்பிரமணிய ஐயர் அவர்களையும், மற்றும் பிரதம விருந்தினரையும் அன்புடன் வரவேற்கின்றேன்.

Continue Reading →