தமிழ் ஸ்டுடியோ குறுந்திரையரங்கம் – ஆகஸ்ட் மாத படங்கள் பட்டியல்… மனிதத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் திரையிடல்…
நாள்: 01-08-2014 முதல் 29-08-2014 வரை, தினமும் மாலை 7.00 மணிக்கு, தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில். தொடர்புக்கு: 9840698236
நண்பர்களே, தொடர்ச்சியாக இன அழிப்பும், இன துவஷமும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நிலவியல் கூறுகள் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கிடையேயான இன துவேஷம் எல்லா இடங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு போருக்கும் பின்னும், இன அழிப்பிற்கும் பின்னும் இருக்கும் நுட்பமான வல்லரசுகளின் அரசியலை நாம் சூழ்நிலைகேற்ப மறந்துவிடுகிறோம். மொழி, இனம், மதம், கலாச்சாரம், என எல்லாவற்றையும் தாண்டி, நம் போற்றவேண்டியதும், பாதுகாக்க வேண்டியதும் மனிதம். மனித மனதில் இருக்கும் கொஞ்சம் ஈரமும் காய்ந்துக்கொண்டே இருக்கிறது. சக மனிதன் மீது, பரிவு ஏற்படாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் சக மனிதன் மீது நமக்கு காழ்ப்புணர்வும், குரோதமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் மனிதத்தை வலியுறுத்த வேண்டியது படைப்புகளின் கடமை. காசாவில் தொடர்ச்சியாக நடக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான இன அழிப்பை எதிர்க்கும் விதமாகவும், காசாவில் வசிக்கும் ஒவ்வோவருக்குமான ஆதரவை தெரிவிக்கும் பொருட்டும், தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரையரங்கத்தில் இந்த மாதம் முழுவதும் மனிதத்தை வலியுறுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படவிருக்கிறது.
Continue Reading →