அன்புடையீர், வணக்கம். தமிழர் திருநாள்-புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் இலெமுரியா தை 2045 ( 14 சனவரி 2014) தமிழர் திருநாள் சிறப்பிதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளை மட்டுமே தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். ஈழம் குறித்து ரவி நாயரின் கட்டுரை, சண்.தவராசா,தோழர் நல்லகண்ணு, சஞ்சீவ்குமார், ம.இலெ.தங்கப்பா, குமணராசன், சுப.கரிகால் வளவன், சீர்வ்ரிசை சண்முகராசன், ’விழிகள்’ நடராசன் ஆகியோரின் கருத்தோவியங்கள், மகராட்டிரா மாநிலத்தில் ஆட்சியர்களாகத் தமிழர்கள் – நேர்முகம், வளமான கவிதைகள் என தித்திக்கும் பொங்கலாய் தமிழர் திருநாள் சிறப்பிதழ் மிளிர்கின்றது.
12.01.2014 ஞாயிறு மாலை 5 மணி. ஹோட்டல் பெனின்சுலா, ஜிஎன் செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை. அனைவரும் வருக! I.IshaqThamiz Alai Media Worldhttp://www.thamizalai.blogspot.comtamilalai@gmail.com
வணக்கம், தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது. இதுவரையில் இந்நாள்; வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருந்தபோதிலும், இது தற்போது தமிழர் நாளாக- தமிழரின் அடையாள நாளாக – ‘தமிழர் திருநாளாக’ – தற்போது புதிய வாழ்வியல் சூழலுக்கு அமைவாக பரிணாமடைந்து வருகிறது. இதற்கமைவாக எம்மாலான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவை, பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி. பேசிய வெளி – சென்னையிலுள்ள பெண்கள் சந்திப்பும் சென்னை பல்கலைக் கழக தமிழிலக்கிய துறையும் இணைந்து நடத்திய 2 நாள் (ஜனவரி 3, 4, 2014) கருத்தரங்கம். சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம். இதை மும்பையை சேர்ந்த புதிய மாதவி சாத்தியப்படுத்தினார். பேசுவதற்கான பின்னணி – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றிய உரையாடல். இந்த கருத்தரங்கு நடந்த இரண்டு நாட்களிலும் பொது அமர்வுகள் இருந்தன, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பெண்கள் சந்திப்பும் இவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தன.
கனடாவில் இருந்து வெளிவரும் பிரபலமான இலக்கிய இதழான தூறல் இதழ் தனது நான்காவது ஆண்டு நிறைவு விழாவைச் சென்ற வாரம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியது. ரொறன்ரோவில் உள்ள கென்னடி வீதியில் அமைந்துள்ள காரைக்குடி உணவகத்தின் விருந்தினர் மண்டபத்தில் இந்த விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ராதிகா சிற்சபைஈசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மார்க்கம் நகரசபை அங்கத்தவர் திரு லோகன் கணபதி அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். கனடிய தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, மௌன அஞ்சலி ஆகிய நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவில் அடுத்து தூறல் இதழின் பிரதம ஆசிரியர் ராஜ்மோகன் செல்லையாவின் வரவேற்புரை இடம் பெற்றது. தூறலின் பங்களிப்பாளர்களையும், குறிப்பாக பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், நிர்வாகக் குழவினர் ஆகியோரைப் பாராட்டி அவர்களை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
அன்பார்ந்த நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூலாக்கம் பெற்றுள்ளது. அதனையொட்டி சென்னையில் கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், முதல் தளத்தில் 2014, ஜனவரி 9ம் தேதி மாலை 5.00 மணியளவில் நடக்க இருக்கும் எளிய விமர்சன அரங்கிற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். ஆறு முக்கிய எழுத்தாளர்கள் இவ்வரங்கில் விமர்சிக்க இருக்கிறார்கள். வாய்ப்பிருப்பின், இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் விமர்சன அரங்கிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்கள், தெரிந்த / அறிந்தவர் /வாசகர்/ஊடக வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
இத்துடன் ஞானம் 163 இதழையும் அனுப்பி வைத்துள்ளேன். ஞானம் குழுவினர் போர்க்கால இலக்கியம் என்ற 600 பக்க மலரை வெளியீடு செய்தது போல தற்பொழுது புலம் பெயர் இலக்கியம் ஒன்றை வெளியிட உள்ளனர். பல பல்கலைக் கழக மாணவர்கள் ஞானம் இதழை தங்கள் சிறப்பு பட்டத்துக்க ஆய்வுக்காக எடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் புலம்பம் பெயர் வாழ்வினைப் பிரதிபலிக்க கூடிய தரமானதும் ஆழமானதுமான கதைகள், கட்டுரைகள், கவிதைகளை ஞானம் குழுவினர் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள நற்றிணைப் பதிப்பகம் அகில உலக அளவில் நடாத்திய நாவல் போட்டியின் எனது கடவுச் சீட்டு என்ற நாவல் முதலாம் இடத்திற்கு தேர்வாகி இந்திய ரூபாய்கள் 50.000ஐயும் கையெழுத்துப் பிரதியாக இருந்த எனது நாவல் அவர்கள் மூலம் நூல் வடிவம் பெறுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். புலம்பெயர்வாழ் தமிழர்களின் எழுச்சிகளையும்; – வீழ்ச்சிகளையும் அதேவேளை வெற்றிகளையும் -தோல்விகளையும் காட்டும் வண்ணம் ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற பலநாள் கனவு இந்த நாவல் மூலம் ஈடேறியுள்ளது. சுமார் 500 பக்கங்கள் வரை வளர்ந்துள்ள இந்த நாவல் புலம்பெயர்வாழ் தமிழரின் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டு முகத்தை காட்டுகின்றது எனக் கொள்ளலாம். காரணம் இது உங்களினதும் எனதும் கதை!
உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான(தரம் 8 முதல் 12 வரை) பயிற்சிப்பட்டறையை (WORKSHOP – 2013) மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா இலவசமாக நடத்த…
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார். அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும். இந்திய சினிமா நூற்றாண்டை தமிழ்நாட்டில் கொண்டாடுவதால், தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடபடுகிறது. தவிர இந்த எல்லா தமிழ் திரைப்படங்களும் வெவ்வேறு வகையில் முக்கியமான ஒரு பதிவை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி சென்றவை.
தொடங்கும் நாள்: 30-11-2013, சனிக்கிழமை.
இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், மேற்கு கே.கே. நகர், சென்னை.
தினசரி நேரம்: மாலை 6 மணிக்கு.