நண்பர்களே பேசாமொழி (http://pesaamoli.com/index_content_11.html) 11வது இதழ் இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழ், இலக்கியமும், சினிமாவும் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நல்ல சினிமா பற்றிய எழுத்தாளர்களின் மௌனம்…
காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி இடம்: இலன்டனில் தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள (tube eastham அருகில்)
இங்கிலாந்து சலங்கை நர்த்தனாலய நுண்கலைக்கூடத்தின இயபக்குனர் நாட்டிய விஷாரத் ஜெயந்தி யோகராஜாவின் மகளும், மாணவியுமான செல்வி சஸ்கியா யோகராஜாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆவணிமாதம் 24ம் திகதி இந்தியாவில் சென்னை மியூசிக் அக்கடமியில் கலைமாமணி நரசிமமாச்சாரிää கலாஷேத்திரா அதிபர் ஜனார்த்தனன் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. செல்வி சஸ்கியாவிற்கு ‘நாட்டிய ரூபினி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டமை சிறப்பாம்சமாகும். அரங்கேற்ற நிகழ்வின்போது ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவின் ‘ராஜேஸ்வரி நர்த்தனம்’ என்னும் பாடல்இறுவெட்டினை வேதம் புதிது மியூசிக் இயக்குநர் தேய்வேந்திரன், ‘கலைமாமணி ஷோபனா ரமேஷ், ‘கலைமாமணி’ லலா ஆறுமுகஐயா, ‘கலாரத்தினா’ உமா சங்கர்ää இந்திய ரயில்த் திணைக்கள கவன்சிலர் ஆர். பத்மநாபன், ஆண்டான் கோவில் சுந்தரராஜன் ஆகியோரினால் வெளியிடப்பட்டு ஜெயந்தி யோசராஜாவிற்கு ‘ராஜேஸ்வர நர்த்தகி’ என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. ராஜேஸ்வர நர்த்தனம் என்னும் இறுவெட்டு நாட்டிய மார்க்கம் அடங்கிய புதிய பாடல்களைக்கொண்டது. இதன் பாடல்வரி, இயக்கம் அனைத்தும் ஜெயந்தி யோகராஜாவினால் ஆக்கப்பட்டது. இவர் கடந்த வருடம் காலம் சென்ற தன் தயார் ராஜேஸ்வரி அன்ரனிரட்னம் அவர்களின் நினைவாக வெளியிட்டிருந்தார்.
நேற்று ஹரோ சிவிக் மண்டபத்தில் (12/10/13) அவைக் காற்றுக் கலைக் கழகத்தினரின் ‘கண்ணாடி வார்ப்புக்கள்’ நாடக நூல் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. சில நூல் அறிமுக விழாக்களுக்கு செல்வதில் நாட்டம் கொள்வதில்லை.அங்கு விழா ஒரு பக்கம் நடக்க சபையோர் இரைச்சலுடன் கதைத்துக் கொண்டிருப்பர்.சிலர் நூலை விமர்சிக்காது ஏதோவெல்லாம் பேசிக்கொள்ள எழுத்தாளர் பாவமாய் உட்கார்ந்திருப்பார்.சில இடங்களில் நூலை விற்றுவிடுவதிலுள்ள ஆரவம்/அவசரம் மற்றவற்றில் கோட்டை விட்டிருப்பர். மாறாக, நூலுக்குள் நின்றபடியே நாடகம்,நடிப்பு,அரங்கியல் சார்ந்த விமர்சனக்களை நேர்த்தியாக திருமதி மாதவி.சிவலீலனும்,திரு.சாம் பிரதீபனும் செய்தனர். தமிழன்,மனம்பேசுது,ஈழகேசரி,புதினம் பத்திரிகைகளின் ஆசிரியர் திரு.ஈ.கே.ராஜகோபால் அவர்களின் வாழ்த்துரை நல்ல செய்திகளைச் சொன்னது.
அரங்கியல் சார்ந்த அனுபவமும்,பட்டப்படிப்பும் கொண்டவர் சாம் பிரதீபன். திருமறைக்கலா மன்றம் மூலமும்,பின்னர் தீபம் தொலைக்காட்சி ‘பிடிக்கல..பிடிக்கல மூலமும் நாடகங்களை ரசிகர்களுக்கென தந்து அசத்தியவர்.அவரின் நீதியின் இருக்கைகள் நாடக நூல் அவரின் நாடக அனுபவதிற்கு சான்றானது. எனவே அவரின் விமர்சனம் நம் போன்றோரின் தேடலுக்குத் தீனி போட்டன எனலாம். நாடகம், கவிதை, அரங்கியல் சார் நூல்களின் மூலம் அறிமுகமான/பரிச்சயமான அமரர். காரை.சுந்தரம்பிள்ளை அவர்களின் மகளான திருமதி.மாதவி சிவலீலனின் விமர்சனம் நூலைப் பல தடவை படித்து உள்வாங்கியது தெரிகிறது.அவரின் தந்தையின் நாடக அனுபவம் இவரின் இலக்கிய முயற்சிகளுக்கு பெரிதும் உதவுக்கின்றன.புலிக்குப் பிறந்தது பூனையாகாது.
பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “இலங்கையில் தமிழின அழிப்பு” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று, கடந்த செவ்வாய்க் கிழமை, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயட்பாட்டளர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி-பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான,தமிழ் மக்களுக்கும் – வேற்றின மக்களுக்கும், தனிநபர்களுக்கும்-அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.
(1) ‘ஞானம்’ தனது 15ஆவது அகவையில் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்ற மகுடத்தில் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது. படைப்பாளிகளிடமிருந்து இச்சிறப்பிதழுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் 01-10-2013க்கு முன்னர் பிரசுரமான தமது சிறந்த படைப்பு ஒன்றினை பிரசுர விபரங்களுடன் அனுப்பி வைக்கலாம். புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை 31-12-2013க்கு முன்னர் தமது புகைப்படத்துடன் மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறோம்.
பேராசிரியர் – ”சாகித்திய ரத்னா” சபா ஜெயராசா இலண்டன் மாநகரில் கடந்த சனிக்கிழமை மாலை (28 – 09 – 2013) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ”இணுவில் ஒலி” சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது. இலண்டன் தமிழ் இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் ஏற்பாட்டில் 28 -ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பிரபல எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணன் தலைமை வகித்தார். திருமதி வேலையா தமிழ்மொழி வாழ்த்தினையும் பக்திப் பாடல்களையும் பாடினார். திருமதி நிர்மலா விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மூத்த பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் பேராசிரியரது பணிகளைக் குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சபா ஜெயராசா தம்பதிகளுக்குப் பொன்னாடை போர்த்து – மாலை அணிவித்து – நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இரா. உதயணன் பேராசிரியரின் பல்துறை ஆளுமைகள் குறித்து விரிவாகத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827 HIGH STREET, EPPING, VIC 3076 – Melway :- 182 B10 ) இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு, ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் & ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய ஒரு கலந்துரையாடல், ‘பாரதம் தந்த பரிசு’, ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’, ’ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ நூல்கள் அறிமுகம். ’பாலகாத்தான்’ (காத்தவராயன்)கூத்து மற்றும் கானமழை (இன்னிசை நிகழ்ச்சி) என்பவை இடம்பெறும்.
அன்று நடைபெறும் ’அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியில்’ உங்கள் புத்தகங்களும் இடம்பெறவேண்டுமாயின் – நீங்கள் புலம்பெயர்ந்த்தன் பிற்பாடு எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் பிரதி ஒன்றை அனுப்பி வைக்கலாம். இந்தப்புத்தகங்கள் மீள உங்களுக்கு கையளிக்கப்படமாட்டாது. அவ்வப்போது நடைபெறும் புத்தகக்கண்காட்சிகளில் அவை காட்சிப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு
“ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது ஜேர்மனிய நாசிப் படைகள் குண்டுவீசி ஐயாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று ஒழித்த சற்றூரான ‘குவர்னிகா’, குண்டுகளுக்கு இரையான எல்லாத் தேசங்களுக்குமே பொருந்துகின்ற குறியீடாகும். ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு மிகப் பொருத்தமான முகப்புத் தலைப்பாக ‘குவர்னிகா’ என்ற தலைப்பைத் தாங்கி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்பு மலராக இந்த மலர் வெளிவந்திருப்பது ஒரு காலத்தின் தேவையை நிறைவு செய்யும் இலக்கிய முயற்சியாக நோக்கத்தக்கதாகும்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை(6.10.2013) வால்த்தம்ஸ்ரோவில் நடைபெற்ற ‘குவர்னிகா’ மலர் வெளியீட்டின்போது தலைமையுரை ஆற்றுகையில் தெரிவித்திருந்தார்: “பன்னிரெண்டு நாடுகளில் இருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான ஆக்கங்களைத் தாங்கி எண்ணூறு பக்கங்களில் மிகப் பாரிய தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘குவர்னிகா’ ஷோபாசக்தி, கருணாகரன, தமயந்தி போன்றோரின் மிகப்பெரும் உழைப்பில் உருவாகி உள்ளது. யுத்த மறுப்பையும், ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பு நிகழ்வுகளையும், சாதிய எதிர்ப்பையும், பெண்விடுதலையையும், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் பேசும் பெரும் தொகுப்பாக ‘குவர்னிகா’ மலர் அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் புகலிட நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்புக்களின்போது வெளியான சுகனின் ‘இருள்வெளி’, கலைச் செல்வனின் ‘இனியும் சூல்கொள்’ ஆகிய மலர்களை அடுத்து மிகப்பெரும் உழைப்பில் உருவாகியுள்ள ‘குவர்னிகா’ என்ற இந்த மலர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பின் மகுடமாக அமைகிறது” என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.
மனவெளி கலையாற்றுக்குழு வழங்கும் பதினாறாவது அரங்காடல் , இவ்வருடம் ஒக்டோபர் மாதம் பதின்மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மதியம் 1:00 மணி,மாலை 6:00 மணி…