கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20 வது ஆண்டு மலர்

அன்புடையீர், எமது இணையம், அடுத்த ஆண்டு தனது 20 வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் நினைவாக, மலர் ஒன்றை வெளியிட நாம் முடிவு செய்துள்ளோம். அதற்காக…

Continue Reading →

நூலக அறக்கட்டளை: ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்

நூலகத் திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களிலொருவரான புவனேந்திரன் ஈழநாதனின் மறைவுச் செய்தி கேட்டுத் துயருற்றோம். அவருடன் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் , ஆரம்ப  காலகட்டத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் கொண்டிருந்தோம். இவரது இழப்பு நூலகத் திட்டத்தைப் பொறுத்தவரையில் பேரிழப்பே. அவரது அகால மறைவால் துயருறும் நூலக அறக்கட்டளைக் குழுவினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் 'பதிவுகள்' தனது ஆழ்ந்த அநுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு பற்றிய நூலக அறக்கட்டளையினர் வெளியிட்ட செய்தியினையும் பதிவுகள் தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. - வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்[நூலகத் திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களிலொருவரான புவனேந்திரன் ஈழநாதனின் மறைவுச் செய்தி கேட்டுத் துயருற்றோம். அவருடன் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் , ஆரம்ப  காலகட்டத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் கொண்டிருந்தோம். இவரது இழப்பு நூலகத் திட்டத்தைப் பொறுத்தவரையில் பேரிழப்பே. அவரது அகால மறைவால் துயருறும் நூலக அறக்கட்டளைக் குழுவினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ‘பதிவுகள்’ தனது ஆழ்ந்த அநுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு பற்றிய நூலக அறக்கட்டளையினர் வெளியிட்ட செய்தியினையும் பதிவுகள் தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. – வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்] 

–  அக்டோபர் 2, 2012 – நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதன் அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்.

Continue Reading →

திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு நிகழ்வு!

தமிழர்விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உப தலைவியும், இலங்கை காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு…

Continue Reading →

கே.எஸ். பாலச்சந்திரனுக்குப் பாராட்டு விழா! அன்புடன் அழைக்கின்றோம்!

வாழும்போதே கௌரவிப்போம். வணக்கம், மூத்த கலைஞர் – தணியாத தாகம், அண்ணை ரைட் புகழ் கே.எஸ். பாலச்சந்திரனுக்குப் பாராட்டு விழா. எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் ‘பாலச்சந்திரன்…

Continue Reading →

இலண்டன் எழுத்தாளருக்கு தமிழியல் விருது!

இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு)  அனைத்துலக ரீதியில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களுக்குப் பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். அதில் 2010இல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களாக இருபது (20) ஆசிரியர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப்  பட்டுள்ளன. இந்த வகையில் லண்டன் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களின் 'பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்' என்ற நூல் தமிழ் மொழியில்   வெளிவந்த மிகச் சிறந்த இலக்கிய ஆய்வு நூலெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந் நூலின் ஆசிரியர் நுணாவிலூர் கா. விசய ரத்தினம் அவர்கள் கொழும்புக் கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent of Audit) கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றவர். அரசு, சபை, கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்து, அறிக்கைகளைச் சிறீலங்கா நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து, நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுக் கூட்ட விவாதங்களிற் பங்கேற்றிய அனுபவமும் உடைய இவர், ஒரு பட்டதாரியும் பட்டயம் பெற்ற கணக்காய்வாளரும் ஆவார்.[பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான திரு. நுணாவில் கா.விசயரத்தினத்தை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவரது கட்டுரைகள் பல பதிவுகளில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவரது ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்னும் நூலுக்கு இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு)  வழங்கும் 2011ஆம் ஆண்டுக்குரிய மிகச்சிறந்த இலக்கிய ஆய்வு நூலுக்கான விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகிறோம். – பதிவுகள்]  இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு)  அனைத்துலக ரீதியில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களுக்குப் பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். அதில் 2010இல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களாக இருபது (20) ஆசிரியர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப்  பட்டுள்ளன. இந்த வகையில் லண்டன் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்ற நூல் தமிழ் மொழியில்   வெளிவந்த மிகச் சிறந்த இலக்கிய ஆய்வு நூலெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந் நூலின் ஆசிரியர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் கொழும்புக் கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent of Audit) கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றவர். அரசு, சபை, கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்து, அறிக்கைகளைச் சிறீலங்கா நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து, நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுக் கூட்ட விவாதங்களிற் பங்கேற்றிய அனுபவமும் உடைய இவர், ஒரு பட்டதாரியும் பட்டயம் பெற்ற கணக்காய்வாளரும் ஆவார்.

Continue Reading →

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது- 2012

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும், நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும் இணைந்து ஆண்டு தோறும் சிறந்த படைப்புக்களை தேர்வுசெய்து விருது வழங்கிவருகிறது. சென்ற ஆண்டு வெளியான பதின்னான்கு நூல்கள்…

Continue Reading →

‘கலைஞர்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்’.. லண்டனில் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தில் டாக்டர் லக்ஷ்மி ஜெயான்!

‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’ என்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள், லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன் அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதம உரையில் தெரிவித்திருந்தார்.

‘மிருதங்கக் கலையைப் பயின்று தான் முதன்முதலாகச் செய்யும் அரங்கேற்றம் போலன்றி மிகுந்த அனுபவம் கொண்ட ஒரு கலைஞனாக பக்க வாத்தியங்களோடு இணைந்து மிருதங்கத்தினை வாசித்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது’ என்று இந்திய வானொலியின் சிறந்த கலைஞராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீமதி வாசுன்றா ராஜகோபால் அவர்கள்,  லண்டன் வொட்ஸ்சிமித் தியேட்டரில் இடம்பெற்ற ஸ்ரீ கந்தையா ஆனந்தநடேசன்; அவர்களின் மாணவனான செல்வன் ஹரிஷன் ஸ்ரீகாந்தனின் மிருதங்க அரங்கேற்றத்தின்போது தனது பிரதம உரையில் தெரிவித்திருந்தார். இந்தியாவில் இருந்த வருகை தந்திருந்த ஸ்ரீ சன்டீப் நாராயணனின் கணீரென்ற குரலில் அமைந்த பாடல்களுக்கு, மாறுகின்ற தாள லயத்தோடு பின்னிப் பிணைந்து ஈடுகொடுத்து செல்வன் ஹரிஷன்  மிருதங்கத்தினை வாசித்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார். கலை ஞானம்கொண்ட ஹரிசனை வழிநடாத்தி அரங்கேற்றத்துக்கு வழி சமைத்த குரு ஸ்ரீ.ஆனந்தநடேசன் அவர்களையும்,  ஊக்கப்படுத்திய பெற்றோரான ஸ்ரீகாந்தன் வத்ஷல்யா தம்பதிகளையும் வாழ்த்தி தனது பாராட்டை மேலும் தெரிவித்திருந்தார்.     

Continue Reading →

தமயந்தி நூல்கள் அறிமுகம்

தமயந்தி நூல்கள் அறிமுகம் 30 – 09- 2012   * ஞாயிறு மாலை 6 மணி.,ஓசோ பவன்,எம்.ஜி.புதூர் , திருப்பூர்.தலைமை: சுப்ரபாரதிமணியன் பங்கேற்போர்: சுப்ரபாரதிமணியன்,சுகன்யா, சுபமுகி,சாமக்கோடாங்கி ரவி, வெங்கடேசன், சிவதாசன்,…

Continue Reading →

வெற்றிமணி மாணவர் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கை மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டி முடிவுகள்.

பரிசளிப்பு நிகழ்வு
 
காலம்: 21-09-2012.  (மாலை 3:30)

இடம்: நாவலர் கலாச்சார மண்டபம். நல்லூர். யாழ்ப்பாணம்.
போட்டியில் பரிசு பெற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Continue Reading →

ஜெய் பீம் காம்ரேட் – திரையிடல் (தமிழில்) – நாள்: 23-09-2012, ஞாயிற்றுக் கிழமை

ஜெய் பீம் காம்ரேட் - திரையிடல் (தமிழில்) - நாள்: 23-09-2012, ஞாயிற்றுக் கிழமைஜெய் பீம் காம்ரேட் – ஆவணப்படம் திரையிடல் & டி.வி.டி. வெளியிடல்
திரைப்படம் : JAI BHIM COMRADE, மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் ஓடக்கூடியது.
நண்பர்களே ஆனந்த் பட்வர்தன் இயக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம் (தமிழ் சப் டைட்டிலோடு), திரையிடப்பட உள்ளது.
டி.வி.டி. வெளியிடுபவர்: வழக்கறிஞர் சத்யசந்திரன்
பெற்றுக்கொள்பவர்: பேராசிரியர் இளங்கோவன்
திரைப்பட அறிமுகம்: ஆர். ஆர். சீனிவாசன்

Continue Reading →