யாதும் ஊரே !யாவரும் கேளிர்!

முள்ளிவாய்க்கால் நினைவாக...

முள்ளிவாய்க்காலின் துயரம்

மடிந்தவர்தம் துயரம்

மட்டுமன்று. இம்

மண்ணின் துயரம்!

மணிபல்லவத்தின் துயரம்.

மாநிலத்தின் துயரம்.

மானுடரின் துயரம்.

Continue Reading →

‘கழுகும் குழந்தையும்’ ஓவியமும், புகைப்படக் கலையும் பற்றி…

கழுகும் குழந்தையும்அண்மையில் எழுத்தாளரும், ஓவிய, காணொளிக் கலைஞருமான தமயந்தியின் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா எழுதியிருந்த பதிவொன்றில் காணப்பட்ட வசனனங்கள்  என் கவனத்தை ஈர்த்தன. அது இதுதான்:  “ஒரு புகைப்படம் என்பது ஒரு புகைப்படக் காரனுக்கு தொழில் அல்ல. அது அவனது அரசியலைப் பேசுபவை” உண்மையில் நான் அறிந்த புகைப்படக் கலைஞர்கள் பலர் சிறந்த புகைப்படக் கலைஞர்கள். அவர்களில் பலருக்குப் புகைப்படம் என்பது தொழில். இது ஓவியர்களுக்கும் பொருந்தும்,  இவர்களெல்லாரும் தம் கலையை விற்றவர்கள்; விற்பவர்கள்.  இவர்கள் எல்லாரும் சிறந்த புகைப்படக் கலைஞர்கள்; ஓவியர்கள்.  இந்த வசனங்களைப்பார்த்ததும் முதலில் என் நினைவுக்கு வந்தவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த , வெள்ளையினத்தவரான கெவின் கார்ட்டர். உலகின் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர். உலகின் பல பகுதிகளிலும், தென்னாபிரிக்காவிலும் நடந்த மானுட துயரம் மிகுந்த மோதல்கள் பலவற்றின் மானுட துயரங்களைப் புகைப்படங்களாக்கியவர்.

Continue Reading →

கொரொனாக் கால முகநூற் குறிப்புகள் !

மொன்ரியால் மைக்கல்மொன்ரியால் மைக்கல்பதிவுகள் இணைய இதழ், திண்ணை இணைய இதழ் போன்றவை ஒரு காலகட்டத்தில் (முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் தோன்றியிராத காலத்தில், வலைப்பூக்கள் உருவாகாத காலத்தில்) உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பற்றும் முக்கிய களங்களாகவிருந்தன. அக்காலகட்டத்தில் இலக்கிய ஆளுமைகள் பலரின் தொடர்புகள் ஏற்பட்டன. மொன்ரியால் மைக்கல் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் ஜீவன் கந்தையா, சதுக்கபூதம் என்னும் புனைபெயர்களில் வந்து விவாதங்களில் பங்கு பற்றியிருக்கின்றார். பதிவுகள் இதழில் பல படைப்புகளை எழுதியுள்ளார். ‘ஏழாவது சொர்க்கம்’ என்றொரு நாவல் எழுதியுள்ளார். 

தற்போது மொன்ரியாலில் வயோதிபர்களுக்கான முதியோர் இல்லமொன்றில் தலைமைச் சமையற்காரராக (Chef)வேலை பார்க்கின்றார். கொரோனாவின் தாக்கத்தால் உலகே அலறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் இவரைப்போன்ற முன்னிலைப்பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது. முதலில் அதற்காக இவர்களுக்கு எம் நன்றியைத்தெரிவிப்போம். அவர் தற்போது தனது கொரோனா அனுபவங்களைச் சிறு சிறு முகநூற் குறிப்புகளாகப்  பதிவு செய்து வருகின்றார். அவை வெறு ம் குறிப்புகள் மட்டுமல்ல. இலக்கியத்தரமான குறிப்புகளும் கூட. அக்குறிப்புகள் கொரொனா மானுடர் மேல் ஏற்படுத்தும் உளவியல்ரீதியிலான தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதால் மேலும் முக்கியத்துவம் மிக்கவையாகவுள்ளன. அவற்றில் அண்மையில் அவர் எழுதிய குறிப்புகளை இங்கு தொகுத்துத் தருகின்றேன். அவை ஒரு  குறிப்பிட்ட கால மானுட அனுபவங்களாக இன்னுமொரு காலத்தில் விளங்கும் என்பதாலும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


உயில்(1): பெரு மழை.

இந்த இடர்க்கால வாழ்க்கையை நான் எழுத விரும்புகிறேன் . நான் வேலை செய்யும் geriatric centerஇல் உண்மையான இடர் வெளிவரமுடியாது. ஆங்கு, 99வீதமாமான வயோதிபகர்கள் யூதர்கள். நிர்வாகம் ஏதோவொரு காரணத்திற்காக எல்லா உண்மைகளையும் மறைக்கிறார்கள். இன்று நான் பகிர்ந்தளித்த 564 சாப்பாடுகளுக்குள், முப்பத்தியாறு சாப்பாடுகள் தனிமைப்படுத்தியவை. அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதாக நம்புகிறேன்.

Continue Reading →

நூல் அறிமுகம்: பவானியின் ‘சில கணங்கள்’ கவிதைத் தொகுப்புப் பற்றி…

பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் சிந்தனைகள் பரிணமிக்கின்றன. கருத்தின் மீது ஆத்மா போய் உட்காந்து கொண்டு மனிதனின் மனதை விசாலிக்கும் ஒரு அழகியற்கலையாகக் கவிதையை என்னால் பார்க்க முடிகிறது. கவிதை என்பது எந்த வகைமைக்குள்ளும் அடங்காத உணர்வாக எண்ணுகின்றேன். கவிதையை வாழ்க்கையின் அனுபவங்கள் என்று வகுத்துக்கொண்டாலும் மனம் நிறைய சமூகத்தின்மீது பேரன்பு கொண்டவர்களால்தான் கவிதைகளைப் படைத்துவிட முடியும் என்று கருதுகின்றேன். கவிதை ஒரு பயணம். அந்த வகையில் பவானியின் ‘சில கணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு ‘கால ஓட்டத்தில் கிறுக்கி வைத்திருந்ததை தொகுப்பாக்கியிருக்கிறேன்’ என்கிறார் பவானி. ஈழத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். இலங்கையில் விவசாய விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்று அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பவானி நெதர்லாந்துக்கு வந்த பின்னர்; டச்சு மொழியிலும் ஆளுமை பெற்று மொழிபெயர்ப்பாளராகச் செயற்பட்டு வருபவர். ஈழத்தின் பிரபல கவிஞர் சேரனின் கவிதைகள் சிலவற்றை தெரிந்தெடுத்து ‘கடலின் கதை’ , ‘அன்பு திகட்டாது’ போன்ற நூல்களை டச்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டவர்.

‘சில கணங்கள்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பில் எண்பது கவிதைகள் எண்பத்தியேழு பக்கங்களில் அடக்கமான அழகான நூலாக வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொரு கவிதைக்கும் பவானி தான் எண்ணுவது போன்ற புகைப்படங்களுடன் இணைத்திருப்பது வாசிக்கத்தூண்டும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

Continue Reading →

பத்து நாட்களில் பத்துப் படங்கள் (4) – பாலு மகேந்திராவின் ‘வீடு’

இயக்குநர் பாலு மகேந்திராதமிழ்த்திரையுலகில் சத்யஜித் ரே போன்று யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணிப்பார்த்தால் முழுமையாக அவரைப்போன்றில்லாவிட்டாலும், ஒரளுக்காவது அவரைப்போன்ற ஒருவர் இருக்கின்றார். யார் அவர் என்று நீங்கள் கேட்கலாம். அவரும் சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். சத்யஜித் ரே இயக்கம், திரைக்கதை, கதை, இசை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் சில படங்களுக்கு இயக்கத்துடன் இசையினையும் வழங்கியிருக்கின்றார். இவரும் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். இயக்கம், ஓளிப்பதிவு, ‘எடிட்டிங்’, திரைக்கதை, கதை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர்தான்.


இருவருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளுள்ளன. இருவருமே எழுத்தாளர்கள். அது தவிர இருவருமே ‘பைசிக்கிள் தீவ்’ திரைப்படத்தைப்பார்த்து விட்டு , அதன் தூண்டுதலால் தரமான சினிமாவை எடுக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்கள். இப்பொழுது உங்களுக்கு அவர் யாரென்பது புரிந்திருக்கும். அவர்தான் பாலு மகேந்திரா. ஏன் பாலு மகேந்திராவை நூற்றுக்கு நூறு வீதம் சத்யஜித் ரேயுடன் ஒப்பிட முடியாது என்று கேட்கலாம். அதற்குக் காரணம்: ரே ஒருபோதுமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுத்தவரல்லர். ஆனால் பாலு மகேந்திரா விட்டுக்கொடுத்தவர். அதனால் அவரது திரைப்படங்கள் பல ரேயின் படங்களைப்போன்று உன்னத நிலையினை அடையவில்லை. அவரே இதனை உணர்ந்திருக்கின்றார். அதனால்தான் அவர் தான் எடுத்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்கள் வீடு மற்றும் சந்தியாராகம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார். இவையிரண்டிலுமே குறைந்தளவு விட்டுக்கொடுப்புகள் செய்ததாகவும் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

Continue Reading →

பத்து நாட்கள் – பத்து திரைப்படங்கள் திரைப்படம் -3 – சத்யஜித் ரேயின் ‘அபுர் சன்சர்’ , 1959, (The World of Apu – அபுவின் உலகம்)

இயக்குநர் சத்யஜித் ராய்திரைப்படம் – 3- சத்யஜித் ரேயின் ‘அபுர் சன்சர்’ , 1959, (The World of Apu – அபுவின் உலகம்)

வங்கநாவலாசிரியர் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் நாவலை வைத்து மூன்று திரைப்படங்கள் எடுத்துள்ளார் இயக்குநர் சத்யஜித் ராய். முன்றுமே அபு என்னும் சிறுவனின் வாழ்க்கையை வளர்ந்து பெரியவனாகி அவன் எதிர்கொள்ளும் மானுட வாழ்வுச் சவால்களை விபரிப்பது. முதலாவது பதேர் பாஞ்சாலி. மிகுந்த புகழை அவருக்குப் பெற்றுத்தந்தது. அடுத்தது அபராஜிதா. மூன்றாவது அபுர் சன்சர் ( அப்புவின் உலகம் – The World of Apu ). இத்திரைப்படம் இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதினைப்பெற்றுள்ளதுடன், சர்வதேச நாடுகளின் விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தி டைம்ஸ் சஞ்சிகை அபுவின் வாழ்வை விபரிக்கும் இம்மூன்று திரைப்படங்களையும் உலகளாவிய மிகச்சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் சேர்த்துள்ளதும் மேலும் பல ஊடகங்களும் இவ்வாறே இப்படத்துக்குக் புகழ்மாலை சூடியுள்ளதும் குறிப்பிடத்தக்கவை. தவிர பல மேலைத்தேயத்திரைப்படங்கள் சிலவற்றில் இதன் தாக்கமிருப்பதையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நான் பார்த்த சத்யஜித் ராயின் திரைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எதுவென்றால் (அனைத்துமே பிடித்தவை என்றாலும்) இதனையே குறிப்பிடுவேன். .வேலையில்லாப்பட்டதாரியான இளைஞன் அபுவின் கல்கத்தா நகர வாழ்க்கையை படத்தின் ஆரம்பம் மிகவும் தத்ரூபமாக விபரிக்கின்றது. எனக்கு கொழும்பு, நியூயார்க் என்று மாநகர்களில் வாழ்ந்த இளம்பருவத்து நகர் வாழ்வினை நினைவூட்டியது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய புகழ்பெற்ற நாவலான ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் நாயகனின் மாஸ்கோ நகர வாழ்க்கையை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எனக்கு இப்படத்தைப் பார்க்கும்போது அந்நாவலின் நினைவுகள் தோன்றின.

Continue Reading →

அறிமுகம்: கலைஞர் டிலிப்குமாரும், ‘தாய்வீடு’ பத்திரிகையும் பற்றி….

திலிப்குமார்பொதுவாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து நூற்றுக்கணக்கில் இலவசப்பத்திரிகைகள் வெளியாகின்றன. இவற்றின் அடிப்படை நோக்கம் பணம் சம்பாதிப்பது. அதனையே அடிப்படையாகக்கொண்டு வெளியாவதால், எனக்குத்தெரிந்து கொள்கைகப்பிடிப்புள்ள எழுத்தாளர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் சிலர் கூட இவ்விதப்பத்திரிகைகளை வெளியிடத்தொடங்கியதும் வியாபாரிகளாக உருமாறியதைக் கண்டிருக்கின்றேன். இவ்விதமான இலவசப்பத்திரிகைகளில் எனக்குத்தெரிந்து ஒரு பத்திரிகை மட்டுமே இலவசப்பத்திரிகையாக வெளிவரும் அதே சமயம் தரமான சமூக, கலை, இலக்கியப் பத்திரிகையாகவும் வெளியாகின்றது. அதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது கொள்கைப்பிடிப்புள்ள கலைஞர் , எழுத்தாளர் ஒருவரிடமிருந்து அப்பத்திரிகை வெளியாவதுதான். இவரை நான் முதலில் அறிந்து கொண்டது நாடக நடிகராக. டொராண்டோ, கனடாவிலுள்ள தேடகம் போன்ற அமைப்புகளின் நாடகங்களில் நடித்த , நடிப்புத்திறமையுள்ள நடிகர்களிலொருவராகவே அறிந்திருக்கின்றேன். அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒருவராகவே அறிந்திருந்தேன். அவர்தான் தாய்வீடு மாதப்பத்திரிகையின் ஆசிரியரும் , வெளியீட்டாளருமான டிலிப்குமார் ஜெயரட்ணம். ஆரம்பத்தில் எழுத்தாளர் ‘அசை சிவதாசன்’ வீடுவிற்பனை முகவராக உருமாறியபோது வெளியிட்ட ‘வீடு’ பத்திரிகை நின்றுபோனபோது அதனைப்பொறுப்பெடுத்து “தாய்’வீடு'” மாதப்பத்திரிகையாக வெளியிடத்தொடங்கினார். இவரும் எனக்குத்தெரிந்த ஏனைய சிலரைப்போல் பணம் சம்பாதிப்பதையே அடிப்படையாகக் கொண்டு வழி மாறிச் சென்று விடுவாரோ என்று ஆரம்பத்தில் எண்ணியதுண்டு. ஆனால் அவ்விதமில்லாமல் தாய்வீடு பத்திரிகையைத் தரமானதொரு கலை, இலக்கிய, சமூக, அரசியல் பத்திரிகையாகவும் வெளியிட்டுக்கொண்டும், அதே சமயம் அதனையொரு வருமானம் ஈட்டும் சாதனமாகவும் நிலைநிறுத்திக்கொண்டு இன்றுவரை வெளியிட்டு வருகின்றார் டிலிப்குமார்.

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 30

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் முப்பது

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 30அவர்கள் தோணியில் ஏறியதும் முதல் வேலையாக ராஜா என்னை நோக்கி வந்தார். எனது மேல் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து உலுக்கியவாறே என்னிடம் கேட்டார்:

“எங்களை விட்டு ஓட முயன்றிருக்கிறாய், இல்லையா, பையா? எங்களின் நட்பு உனக்கு சலிப்புத் தட்டிவிட்டதா? ஹாஹ்?”

நான் கூறினேன் “அப்படி இல்லை அரசே! நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தயை கூர்ந்து அப்படி நினைக்காதீர்கள், மாட்சிமை பொருந்திய மன்னரே!”

“நல்லது. அப்படியானால், நீ என்ன செய்ய முயற்சித்தாய் என்று கூறி விடு. இல்லாவிட்டால், உன் உடலில் உள்ளிருக்கும் அனைத்தையும் வெளியே உருவி விடுவேன்.”

“சத்தியமாக என்னவெல்லாம் நடந்ததோ அதை அப்படியே கூறிவிடுகிறேன், மேன்மை பொருந்திய ராஜாவே! என் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த மனிதன் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தான். கடந்த வருடம் என் வயதில் ஒரு சிறுவன் இறந்து போனது பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதே போன்றதொரு பயங்கரமான ஆபத்தில் இன்னொரு சிறுவன் இப்போது இருப்பதைப் பார்க்க அவனுக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினான். தங்க மூட்டையைக் கண்டதும் அனைவரின் கவனமும் சிதறி சவப்பெட்டியை நோக்கி ஓடிய சமயம், அவன் என் கையை விடுத்து, “ஓடிச் செல். இல்லாவிடில், அவர்கள் உன்னைத் தூக்கில் போடுவது நிச்சயம்.” என்று என் காதில் கிசுகிசுத்தான். எனவேதான் நான் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.”

“அங்கேயே நிற்பது எனக்கு நல்லதல்ல என்று தோன்றியது. என்னால் எதுவும் செய்ய முடியாது. தப்பிக்காமல் அங்கேயே இருந்து தூக்கில் தொங்குவதை நான் விரும்பவில்லை. கண் மண் தெரியாது ஓடி இங்கே வந்து தோணியைக் காணும் வரை நான் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இங்கே வந்து சேர்ந்ததும் ஜிம்மை அவசரமாகத் தோணியை செலுத்தச்சொன்னேன். இல்லாவிடில், நான் பிடிபட்டு தூக்கில் தொங்க நேரிடும் என்ற பயத்தால்தான். நீங்களும், பிரபுவும் இறந்திருப்பீர்கள் என்று நான் அஞ்சினேன் என்றும் கூறினேன். உங்களின் பரிதாப நிலைக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். ஜிம்மும் அப்படியே வருந்தினான். இப்போது நீங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் நாங்கள் இருவரும் கட்டுக் கடங்காத மகிழ்ச்சியை அடைந்தோம். இது உண்மையா என்பதை ஜிம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 29

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் இருபத்தி ஒன்பது

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 29நேர்த்தியான தோற்றம் உடைய ஒரு முதிய கனவானையும், கூடவே காயம்பட்ட வலது கையை தாங்கி நிறுத்தும் ஒரு தூக்கி மாட்டியுள்ள இன்னொரு இளம் வாலிபனையும் அந்தக் கூட்டம் கூட்டி வந்தது. ஓ! என்ன ஒரு காட்சி அது! கூட்டம் கொக்கரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துத் தீர்த்தது. அங்கே வேடிக்கையாய் சிரிக்க என்ன உள்ளதென்று எனக்குப் புரியவில்லை. ராஜாவும், பிரபுவும் என்னைப் போன்றுதான் யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் முகம் வெளுத்துப் போயிருக்கும் என்று நினைத்து அவர்களை நோக்கினேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை. அவர்கள் பயத்தில் வெளுத்துப் போகவில்லை. சந்தேகிக்கும் நிலையை பிரபு அங்கே உண்டு பண்ணவேயில்லை. பதிலாக வாயில் வெள்ளை நுரை தள்ளியவாறு கூ கூ என்று இன்னும் அதிகமாக சத்தமிட்டார்.

புதிதாக வந்த மனிதர்களை ஏதோ நயவஞ்சகர்கள் இந்த உலகத்தில் மோசடி செய்ய வந்தது தனது இதயத்தை வேதனைப் படுத்துவது போல ராஜாவோ மிகவும் சோகமாக அவர்களை நோக்கிக் கொண்டிருந்தார். ஓ! ரசிக்கும்படியான நடிக்கும் தொழிலை அவர் அங்கே செய்தார், தெரிந்து கொள்ளுங்கள்! ஊரில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தாங்கள் ராஜாவின் பக்கம் என்பதைக் காட்டிக் கொள்வது போல அவர் பக்கம் கூடி நின்றார்கள்.

புதிதாக வந்த முதிய கனவானோ குழப்ப மிகுதியால் மண்டை உடைந்துவிடும் நிலையில் இருந்தார். இறுதியாக அவர் பேசத் தொடங்கியதும், அவரின் பேச்சில் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை என்னால் உணர முடிந்தது. ராஜாவும் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை அப்படியே பின்பற்றி நடித்து வந்தாலும், இந்த புதிய மனிதனின் உச்சரிப்பு ராஜா பேசுவது போன்று இல்லை. அந்த முதிய கனவான் என்ன வார்த்தைகள் சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. அவர் போன்று நான் பேசிக் காட்டவும் முடியாது. ஆனால் அவர் கூட்டத்தை நோக்கி பின்வருமாறு கூறினார்:

Continue Reading →

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) – 28

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’


அத்தியாயம் இருபத்தி எட்டு

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 28வெகு சீக்கிரமே நான் விழித்தெழும் காலைவேளை வந்து விட்டது. ஏணியில் இறங்கி கீழ்தளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் போது அந்த பெண்களின் அறைக் கதவு திறந்திருப்பதை எதேச்சையாக நான் காண நேர்ந்தது. அறையினுள் திறந்திருந்த பழைய ட்ரங்க் பெட்டியருகே மேரிஜேன் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அந்தப் பெட்டியில் தன் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். அந்த வேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு, தன் மடியில் ஒரு நீண்ட மேலங்கியை மடித்து வைத்துக் கொண்டு, தனது இரு கரங்களையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். அது என் மனதைக் கரைத்தது. யாருக்குமே அதைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்யும். எனவே, உள்ளே நான் சென்றேன்.

“மிஸ். மேரிஜேன்! சக மனிதர்களின் துன்பத்தை நீ பொறுத்துக் கொள்ளக் கூடியவள் அல்ல. நானும் அப்படிதான். என்னிடம் உன் துன்பத்தைப் பற்றிக் கூறு.” அன்புடன் நான் வினவினேன்.

எனவே, அவள் கூற ஆரம்பித்தாள். நான் சந்தேகித்தது போலவே அவள் அந்த நீக்ரோக்களைப் பிரிந்த வேதனையிலேயே அழுது கொண்டிருந்திருக்கிறாள். அவள் செல்லவிருக்கும் இனிமையான இங்கிலாந்து பயணத்தையே இந்த வேதனை குலைத்து விடும் என்று அழுது கொண்டே கூறினாள். அந்த நீக்ரோ குழந்தைகளும் அவர்களின் அம்மாவும் இனி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே முடியாது என்று தெரிந்த கொண்டபின் அவளால் எப்படி அவளது வாழ்வில் சந்தோசத்துடன் இருக்க முடியும் என்று கேட்டாள். பின்னர் முன்பை விட அதிக தீவிரத்துடன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

“ஓ! அன்புக்குரியவனே! அவர்கள் ஒருபோதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள் என்பதை எண்ணும்போது.” கைகளை வேகமாக அசைத்துக்கொண்டே கூறினாள்.

“ஆனால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்- அதுவும் இன்னும் இரண்டு வாரங்களுக்குளாகவே. எனக்குத் தெரியும்.” நான் கூறினேன்.

Continue Reading →