நாவல்: அமெரிக்கா! (8)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'– மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிக்கம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியததானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின, மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன் இன்றைய தலைமுறையினரும் , அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். இறுதி அத்தியாயம் மீளத்திருத்தி, எழுதப்பட்டுள்ளது.  – வ.ந.கி. –


அத்தியாயம் எட்டு: விஜயபாஸ்கரனின் வரவும்., விடிவும்!

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்வில் சுவையான சம்பவங்களும் இல்லாமலில்லை. வாழ்வு தொடர்ந்து கொண்டிருந்தது.  நம்பிக்கையை நாங்கள் இன்னும் முற்றாக இழக்கவில்லை.  ‘ஃபாதர்’ ஏபிரகாம் அடிக்கடி கூறுவார்: “ஒன்றிற்குமே கவலைப்படாதீங்க. இமிகிரேசனிலை இதைத்தான் சொல்லுறாங்க.” ஒவ்வொருமுறை அவருக்குத் தொலைபேசி எடுக்கும்போதும் இதைத்தான் அவர் கூறுவார். ஃபாதர் பாவம். அவருக்கு நல்ல மனது.  ஆனால் எங்களுக்குப்புரிந்திருந்தது ஃபாதரிக்கு நம்பிக்கை போய்விட்டதென்று. ஃபாதருக்கும் புரிந்திருந்தது எங்களுக்குச்சூழலில் யதார்த்தம்  தெரிந்து விட்டதென்பது.  இருந்தும் சுதந்திரம் மறுக்கப்பட்டு, கூண்டுக்கிளிகளாகவிருந்த நிலையில் எங்களுக்கும் அத்தகைய  ஆறுதல் வார்த்தைகளின் தேவையிருந்தது.  அதே சமயம் நம்பிக்கையை இழந்துவிட நாங்களும் விரும்பவில்லை.  நம்பிக்கையின் அடிப்படையில்தானே இருப்பே நிலைநிறுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இவ்விதமாக உப்புச்சப்பற்று போய்க்கொண்டிருந்த இருப்பினை மாற்றி வைத்தது விஜயபாஸ்கரனின் வரவு.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 138 : உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!! ; மின்னூல்கள் பற்றிய எழுத்தாளர் மாலனின் கூற்றும், அது பற்றிய சில எண்ணங்களும்….

உதித்தெழுந்தது அறிவென்னும் இரவி!

‘எழும் பசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவென்னும் இரவி!’ -பாரதியார் –

இத்தாரக மந்திரத்துடன் மே-யூன்1998, யூலை-ஆகஸ்ட் 1998 என இரு இதழ்கள் ,டொராண்டோ, கனடாவில், வெளிவந்ததொரு மாதப்பத்திரிகைதான் இரவி. அக்காலகட்டத்தில் தொடர்ந்தும் வெளிவராது நின்று போனாலும், என் ஆர்வம் இன்றுவரை நின்று விடவில்லை. என் ஆர்வத்தின் வெளிப்பாடுகள்தாம் ‘கணினி உலகம்’, ‘நமது பூமி’ ஆகிய செய்திக்கடிதங்களும், ‘குரல்’ கையெழுத்துச்சஞ்சிகையும், ‘இரவி’, ‘கல்வி’ ஆகிய பத்திரிகைகளும் பதிவுகள் இணைய இதழும்.

‘இரவி’ பத்திரிகையின் முதற் பக்கத்திலுள்ள இரவி என்னும் பத்திரிகையின் எழுத்துருவினை வடிவமைத்துத் தந்தவர் எழுத்தாளர் ‘அசை; சிவதாசன். அதற்காக அவருக்கு நன்றி. அவரும் அக்காலகட்டத்தில் மறுமொழி சஞ்சிகையினை வெளிக்கொணர்ந்தவர். இன்று வெளிவரும் ‘தாய் வீடு’ பத்திரிகையின் தாயான ‘வீடு’ பத்திரிகையினைத்தொடங்கி வெளியிட்டவர். சிறுகதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகளில் எழுதியவர். ‘தாயகம்’ சஞ்சிகையில் அவர் எழுதிய ‘அசை மறுபக்கம்’ பத்தியின் மூலம் ‘அசை’ சிவதாசன் என்று அழைக்கப்பட்டவர். தொலைக்காட்சி நிகழ்வுகளில் அரசியல் ஆய்வாளராக அடிக்கடி வலம் வருபவர்.

Continue Reading →

இணையத்தள அறிமுகம்: திசைகள் – வான் வழியே ஒரு வாசிகசாலை!

எழுத்தாளர் மாலன்– எழுத்தாளர் மாலனின் ‘திசைகள்’ மின்னிதழ் தற்போது ‘வான் வழியே ஒரு வாசகசாலை’ என்னும் தாரக மந்திரத்துடன் இணையத்தில் மின் நூலகமாகப் பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றது. ‘திசைகள்’ மின்னூலகத்தினை www.thisaigal.in என்னும் இணைய முகவரியில் பாவிக்கலாம். ‘திசைகள்’ மின்னூலகத்தில் எழுத்தாளர் மாலன் அதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ள அறிமுகக்குறிப்பினைப் பகிர்ந்து கொள்கின்றோம். –


திசைகள் என்பது எனக்கு ஒரு மந்திரச் சொல். எட்டுத் திக்கையும் குறிப்பது என்பது அதற்குச் சொல்லப்படும் வழக்கமான பொருள். ஆனால் என்னைப் பொருத்தவரை அது 360 பாகைகளை (டிகிரியை) குறிப்பது.

தமிழின் விளிம்புகளை இயன்றவரை விரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கும் சொல். அது.

தமிழ் வெகுஜன இதழ்களை வணிக வெறியும், இலக்கியச் சிற்றேடுகளை கோஷ்டிப் பூசல்களும், மொய்த்துக் கொண்டிருந்ததின் விளைவாக இளந்தலைமுறையினர் இடையே சோர்வும் கசப்பும் முளை கட்டத் தொடங்கியிருந்த நேரத்தில் முதியவர்களைத் தவிர்த்து விட்டு, முற்றிலும் இளைஞர்களைக் கொண்டு நம்பிக்கை விதைக்க முற்பட்ட முயற்சி அச்சுத் திசைகள்

நம்பிக்கையையும் உற்சாகமும் சந்தோஷமும்தான் மனிதர்களையும் பூக்க வைக்கிற விஷயம்… எண்ணற்ற பத்திரிகைகள் மண்டியிருக்கிற இந்த நேரத்தில் திசைகள் இவற்றுக்குத்தான் நாற்றுப்பாவ ஆசைப்படுகிறது…

இது முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், திசைகள் என்ற இளைஞர்கள் பத்திரிகைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது எழுதிய வரிகள். இத்தனை காலத்திற்குப் பின் திரும்பிப் பார்க்கும் போது, திசைகள் பாவிய நாற்றுக்கள் விளைந்து செழித்து அடுத்த தலைமுறைக்குக் கனிகளையும் கனிகளுக்குள் பொதிந்து வைத்த விதைகளையும் தந்திருப்பதைக் காணமுடிகிறது.

Continue Reading →

மூத்த எழுத்தாளர் பத்மஸ்ரீ சார்வாகன் மறைந்தார்!

தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளரும் தொழுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ ஸ்ரீநிவாசன் என்ற சார்வாகன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை  சென்னை திருவான்மியூரில் வால்மீகி நகரில் மறைந்தார்.…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 137: ஞானியின் ஞானச்செருக்கில் விளைந்த ஞானச்சிறுமை!

இசைஞானி இளையராஜா!அண்மையில் இசைஞானி என்றழைக்கப்படும் இளையராஜா அவர்கள் சென்னை வெள்ளப்பாதிப்பு உதவி சம்பந்தமாகக்கலந்துகொண்ட் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள வந்திருந்தபொழுது அவரிடம்  ஊடகவியலாளரொருவர் சிம்பு/அநிருத்தின் ‘பீப்’ பாடல் பற்றிக்கேட்டார். அதனைச்செவிமடுத்த உடனேயே இளையராஜா அந்த ஊடகவியலாளரைப்பார்த்து ‘உனக்கு அறிவிருக்கா?’ என்று எரிந்து விழுந்தார். இது சமூக ஊடகங்களிலும், வெகுசன ஊடகங்களிலும் பரபரப்பு மிக்க செய்திகளிலொன்றாக மாறிவிட்டிருக்கின்றது. இளையராஜா ‘சரி’யென்று ஒரு குழுவும், ‘சரியில்லை அது பிழை’ என்று இன்னுமொரு குழுவும் கோதாவில் இறங்கியிருக்கின்றன.

நிகழ்வொன்றுக்குக் கலந்து கொள்ளவரும் கலை,இலக்கியவாதிகள் தொடக்கம் அரசியல்வாதிகள் வரை , எல்லாருமே இவ்விதமான சர்ச்சைகள் மிகுந்த சம்பவங்கள் பற்றிய கேள்விகளை எதிர்கொள்பவர்கள்தாம். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் என்னும் நிலையில் இவ்விதமான வினாக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் பண்பட்ட கலை, இலக்கியவாதிகளோ, அரசியல்வாதிகளோ இவ்விதம் இளையராஜா எரிந்து விழுந்ததைப்போன்று எரிந்து விழுவதில்லை. நிதானமாகக் கேள்விகள் எதுவானாலும் அவற்றை எதிர்கொண்டு பதிலளிக்கத்தவறுவதில்லை. உதாரணமாக மேற்படி நிகழ்வில், கலந்துகொண்ட நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற கேள்வியினை அந்த ஊடகவியலாளர் கேட்பது தனக்குப் பிடிக்கவில்லை என்று இளையராஜா அவர்கள் கருதியிருந்தால், அவர் அந்த ஊடகவியலாளரிடம் ஆத்திரப்படாமல், நிதானமாக தற்போது தான் கலந்துகொள்ள வந்துள்ள நிகழ்வுக்குச்சம்பந்தமற்ற எந்தவொரு கேள்வியினையும் தான் எதிர்கொள்ள விரும்பவில்லையெனவும், இன்னுமொரு உரிய நிகழ்வில் இது பற்றிப்பதிலளிப்பதாகவும் கூறியிருக்கலாம்.

இசைஞானிக்கு அந்த ஊடகவியலாளரின் மேற்படி கேள்வி ஏன் அவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்று நினைத்துப்பார்க்கின்றேன். தான் இசையமைத்திருந்த ‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்!’ பாடலை ஒருமுறை அவர் நினைத்திருக்கலாம். ‘நேற்று ராத்திரி யம்மா’வில் ஜானகியம்மாவின் முக்கல், முனகல்களில் வெளிப்படும் உணர்வுகளின் பாவங்களை எண்ணியிருக்கலாம். இவ்விதமான கேள்விக்குப்பதிலளிப்பது இறுதியில் தன் மீதே வந்து பாயுமென்று கருதியிருக்கலாம். ஒருவேளை அவர் சிம்புவின் ‘பீப்’ பாடலுக்கு எதிர்ப்பினைத்தெரிவித்திருந்தால், அடுத்த கணமே அந்த ஊடகவியலாளர் ‘அப்படியென்றால் ‘நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்’ பாடலின் இறுதியில் ஆண், பெண் உறவின் உச்சக்கட்ட உணர்வாக வெளிப்படும் ஜானகி அம்மாவின் குரலைப்பாடிக்காட்டியிருக்கலாம். அந்தச்சமயத்தில் இசைஞானி பதிலெதுவும் கூற முடியாமல் , திக்குமுக்காடிப்போயிருக்கலாம். கண்ணாடி வீட்டினுள்ளிருந்து கல்லெறிய இசைஞானி விரும்பவில்லை. அதனால்தான் அவருக்கு அந்த இளம் ஊடகவியலாளரின் அந்தக் கேள்வி ஆத்திரத்தை எழுப்பியதுடன் , அந்த ஊடகவியலாளரின் அறிவு பற்றி மட்டம் தட்டவும் தூண்டியிருக்க வேண்டும்.

Continue Reading →

நினைவுகளின் தடத்தில் (2)!

- வெங்கட் சாமிநாதன் -அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் ‘நினைவுகளின் சுவட்டில்..’ முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் ‘பதிவுகள்’ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் ‘பதிவுகள்’ இதழில் மீள்பிரசுரமாகும். – திவுகள் –


எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. ‘ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்” என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள். மாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. உடனே கூட்டிக்கொண்டு வா என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள். படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. விவரம் தெரிந்த பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள். அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 136 : அச்சில் வெளியான எனது முதற்சிறுகதை ‘சலனங்கள்’; மாணவப் பருவத்தில்: ‘கண்மணி’யில் எனது சிறுவர் கதை ‘அரசாளும் தகுதி யாருக்கு?’; வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை பற்றி…. ; மயக்கமா? கலக்கமா?; யானை பார்த்த குருடர்கள்

அச்சில் வெளியான எனது முதற்சிறுகதை ‘சலனங்கள்’

சிரித்திரனில் வெளியான என் முதற் கதை.அச்சில் வெளியான எனது முதலாவது சிறுகதை ‘சலனங்கள்’. 1975 பங்குனி மாதச் ‘சிரித்திரன்’ இதழில் வெளியானது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். முள்ளியவளையைச்சேர்ந்த முல்லைத்திலகன் என்னும் மாணவர் அப்பொழுது யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவராகப்படித்துக்கொண்டிருந்தார். நடிப்புத்திறமை மிக்கவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீரபாண்டியக்கட்டப்பொம்மன், ராஜாராணி ( ‘சோக்கிரடிசு’) வசந்தமாளிகை திரைப்பட வசனங்களை அழகான , உச்சரிப்புடன் பேசிக்காட்டுவார். ‘ ஏதென்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே’ என்று ராஜாராணி சோக்கிரடிசு வசனங்களை, கட்டப்பொம்மன் வசனங்களை மீண்டும், மீண்டும் அவரைப்பேசச்சொல்லிக் கேட்டு இரசிப்பதுண்டு. அவற்றை மாணவர்களாகிய நாம் இரசிப்பதுண்டு.

ஒருமுறை அவரது ஊரான முள்ளியவளைக்கும் சென்று ஒரு வாரமளவில் அவர் வீட்டில் தங்கியிருந்து திரும்பியிருக்கின்றேன். அப்பொழுது ஆழநடுக்காட்டினுள் ‘கள்ளூறல்’ என்னும் எப்பொழுதும் வற்றாத நீர்நிலையினைத்தேடி அலைந்து, திரிந்ததை இப்பொழுதும் மறக்க முடியாது. எனது வன்னி மண் நாவலில் அந்த ஆழ்நடுக்காட்டின் அனுபவங்களைச்சிறிது கற்பனையையும் கலந்து பதிவு செய்திருக்கின்றேன். அவரது கையெழுத்தும் அழகானது. அவரைக்கொண்டு எனது முதற்சிறுகதையான ‘சலனங்கள்’ சிறுகதையினைப் பிரதியெடுத்து, ‘சிரித்திரன்’ சஞ்சிகை நடாத்திய ‘அறிஞர் அ.ந.கந்தசாமி’ சிறுகதைப்போட்டிக்கு அனுப்பியிருந்தேன். அது பாராட்டுக்குரிய சிறுகதைகளிலொன்றாகத்தெரிவு செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. அச்சிறுகதை வெளியான சிரித்திரன் பக்கத்தின் ஒரு பகுதியினையே இங்கே காணுகின்றீர்கள். இது அச்சில் வெளியான முதற் சிறுகதையான போதிலும், கதைகள், நாவல்களென்று பாடசாலை அப்பியாசக் ‘கொப்பி’களில் எனது பத்தாம் வயதிலிருந்து நிறையவே எழுதி, எழுதிக் குவித்திருக்கின்றேன். இந்தச்சிறுகதை மூலமே எனக்குச் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்துடனான அறிமுகமும், நட்பும் ஆரம்பமானது. அப்பொழுது அவர் யாழ் ஐயனார் கோயிலருக்கில் வசித்து வந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் இடம் மாறி வந்திருந்தார். பின்னர் எண்பதுகளின் ஆரம்பத்தில்தான் யாழ் கே.கே.எஸ்.வீதியில் வீடு கட்டிக் குடிபுகுந்திருந்தார். அவரது அந்த வீட்டினை வடிவமைத்திருந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குணசிங்கம் ஆவார். நான் அக்காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தேன். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்றிருந்தபொழுது அவரை அவ்வீட்டில் சென்று சந்தித்தேன். அப்பொழுதுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டினை எனக்குச் சுற்றிக்காட்டினார். அப்பொழுதுதான் அதனை வடிவமைத்தவர் குணசிங்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதுவே நான் அவரை இறுதியாகச் சந்தித்தது.

Continue Reading →

பத்தி 1: இணைய வெளியில் படித்தவை

அன்பு ‘பதிவுகள்’ வாசகருக்கும் உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுக்கும் வணக்கம். அச்சில் மற்றும் இணைய வெளியில் வெளியாகும் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை யாவுமே நம் வாசிப்பை வளப்படுத்துபவை. ஒரு விமர்சகராக மற்றும் வாசகராக அவற்றுள் சிலவற்றைப் பகிர விரும்புகிறேன்.வாய்ப்பளித்த வ.ந.கிரிதரன் அவர்கட்கு நன்றிகள். அன்பு சத்யானந்தன்.


மொழிபெயர்ப்பு சிறுகதை அவள் நகரம், அவள் ஆடுகள் ( ஜப்பான் : ஹாருகி முரகாமி; ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம் )
மலைகள் இணைத்தில் வெளிவந்திருக்கும் முரகாமியின் அற்புதமான சிறுகதைக்கான இணைப்பு  இது.  மொழிபெயர்ப்பு நம் தமிழில் எழுதப்பட்ட கதை இது என்னுமளவு நம்மை முரகாமிக்கு அண்மைப்படுத்துகிறது.

கதையின் இந்தப் பகுதி முத்தாய்ப்பானது மட்டுமல்ல நம் சிந்தனையைத் தூண்டுவது:

‘சப்போரா விடுதியில் என்னுடைய சிறிய அறைக்கு மீண்டு வந்த நான், அந்தப் பெண்ணின் வாழ்க்கையோடு எனக்கும் தொடர்பு இருப்பதைத் திடீரென்று கண்டுணர்ந்தேன். அவளின் இருத்தலை என்னோடு பொருத்திப் பார்த்தேன். பெரும்பகுதி ஒத்திருந்தாலும் ஏதோ ஒன்று இடறுகிறது. எனக்குச் சரியாகப் பொருந்தாத ஆடையைக் கடன் வாங்கி அணிந்திருப்பதுபோல ஒரு உணர்வு. நான் இயல்பான இருப்பமைதி இல்லாததாக உணர்கிறேன். என் கால்கள் கட்டப்பட்டுள்ளன. முனை மழுங்கிய கைக்கோடாரி போன்ற ஒரு கத்தியால் அந்தக் கயிற்றை அறுப்பது குறித்து நினைக்கிறேன். அப்படி அறுத்துவிட்டால், நான் எப்படித் திரும்பி வருவேன்? அந்த நினைப்பு என்னைக் குலைக்கிறது. எப்படியானாலும் நான் அந்தக் கட்டை அறுத்தேயாகவேண்டும். அதிகமாக பீர் குடித்துவிட்டேன், அதனால் இப்படித் தோன்றலாம். பனியும் அந்த உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் அவ்வளவுதான். மெய்ம்மையின் இருண்ட சிறகுகளுக்கடியில் மீண்டும் நழுவி விழுந்தேன். என் நகரம். அவள் ஆடுகள்.’

Continue Reading →

வன்னி வரலாறும் பண்பாடும்- கட்டுரைத் தொகுதி கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கத்தின் அரும்பெரும் முயற்சி

த.சிவபாலுநீண்ட பெரும் முயற்சி, உழைப்பு, பணச்செலவு, நேர அர்ப்பணம் எனத் தன்னியல்பின் வழி நின்று அர்ப்பண சிந்தையோடு செயற்பட்டதன் விளைவாக எமது கைகளில் இன்று வன்னியபற்றிய தாக்கம் மிக்க ஆவணத்திரட்டு ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது. இந்த முயற்சியைச் செய்தவர் நோர்வேயில் வாழ்ந்துவரும் வவுனிக்குளத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம். வவுனிக்குளம் 2ம் படிவத்தைச் சேர்ந்தவர். அங்கு கிராமசேவையாளராகப் பணியாற்றியதோடு திடீர்மரண விசாரணை அதிகாரியாகவும் சமாதான நிதவானாகவும் கடமையாற்றிய பெரிய தந்தையாரின் மகன் கந்தையா பரமநாதனுக்கும் வவுனிக்குளத்தில் 1958ம் ஆண்டு குடியேறியதிலிருந்து அப்பிரதேச மக்களின் அனைத்து நலன்களிலும் அயராது உழைத்த தனது தாயார் திருமதி கந்தையா வள்ளியம்மைக்கும் இந்நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணையும் மக்களையும் ஆத்ம சுத்தியோடு நேசிக்கும் ஒருவராலேயே இத்தகைய ஒரு ஆக்கத்தைச் செய்த தரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் கந்தையா சுந்தரலிங்கம். “நாம் வாழும் வன்னிமண் ஒரு நீண்ட பாரம்பரியத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் தன்னுள் புதைத்துக் கொண்டு அடுத்த சந்ததிகளையும் வாழவைப்பதற்காக பரந்து விரிந்கிடக்;கிற, புதைந்து கிடக்கும் அந்த மண்ணின் வரலாற்றையும் வாழவைப்பாதற்காக அடுத்த சந்ததிகளுக்காகச் சொல்லவேண்டிய கடமையுணர்வை ஏநோ நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம். ஒரு பெரம் நீண்ட வரலாற்றின் வாரிசுகள் கதைபேசி உறவாடிய வாழ்க்ககை ஒன்றும் ஒரு குறுநிலத்தின் கதையல்ல. ஒவ்வொரு வீட்டு முற்றத்தின் கதையும் கூட. இது ஐரோப்பய காலனிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான வன்னியரின் போராட்டக்களம். விருந்து படைத்த மருதம், நெய்தல், முல்லை மண்கள் கூடிக்கலந்த பண்பாடு துளித்த தாய் மண்வன்னி” எனத்தனது பதிப்புரைக்கு முத்தாரம் இடும் அவர், “அநதத் தாய் மண்ணும் மரபும் ‘சார்ந்து நாம் முன்னோர்கள் சந்தித்த எழுச்சிகளும் வீழ்சசிகளுட், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு சிலிப்பபான புதிய அனுபவத்தைத் தரக்கூடும், வயல், காடு, குளம், கடல் பறவை, விலங்குகள் என எங்கள் முன்னோர்கள்சந்தித்த இயற்கைச் சூழல் நம்கண் மன்னே விடைபெறுகின்றது. மரபுகளிலும் சூழல்களிலும் நாம் கொண்டிருக்கும் உணர்ச்ியற்ற போக்கு எதிர்காலச் சந்ததியினரை மேலும் மண்ணில் இருந்து அந்நியப்படுத்திவுடும். வரலாறு கிழித்துப்போடப்பட்ட இந்நொரு ஓவியமாகவே இன்று வன்னியைப்ப ◌ார்க்கமுடிகிறது. வரலாற்றின் நிகழ்வகளையும் மரபுகளையும் மாத்திரமின்றிகூழலையும் சேர்த்து கோர்வைப்படுத்துவது ஒரு சமூக வழிப்புணர்வனை உருவாக்கும். அது ஒரு மிக அமைதியான, அறிவுபூர்வமான சந்ததிகளின் வளர்ச்சிக்கு உதவும்” எனக்குறிப்பிட்டுள்ள அவர்என தனது பதிப்புரையில் மண்ணின் பெருமையையும், அங்கு புதையுண்டுள்ள தொன்மை வரலாற்றையும் வெளியே கொண்டுவரவேண்டும் என்னும் ஆதங்கத்தையும் தன்னுள்ளத்துள் கொண்டதன் பயனாக பதிவாக்கப்பட்டதே இந்த ஏடு.

Continue Reading →

நாவல்: அமெரிக்கா! (7)

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது ‘அமெரிக்கா’ என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே ‘பொந்துப்பறவைகள்’ மற்றும் ‘மான் ஹோல்’ தவிர , கனடாவிலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் ‘அமெரிக்கா’ என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். – வ.ந.கிரிதரன் –


அத்தியாயம் ஏழு: நைஜீரியனைப் பிடித்த பேயும், தடுப்புமுகாம் கணக்கெடுப்பும்!

இவ்விதமாக எங்கள் தடுப்பு முகாம் வாழ்க்கை வரவேண்டிய விருந்தாளிகள் வராத நிலை, எதிர்பாராத விருந்தாளிகளின் வரவு ஆகிய சந்தர்ப்பங்களை எதிர்கொண்டு தொடர்ந்தபடியிருந்தது. இதே சமயம் உலக நடப்பிலும் குறிப்பிடும்படியான சம்பவங்கள் சில நிகழ்ந்தன.  பிரயாணிகளுடன் சோவியத் நாட்டு எல்லைக்குள் அத்து மீறிப்பறந்த கொரிய விமானமொன்று ரஷ்யப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  இச்செயல் சர்வதேசரீதியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  பெரும்பாலான நாடுகள் மத்தியில் ரஷ்யாவுக்கெதிரான உணர்வுகளைக்கிளர்ந்தெழ வைப்பதற்கு இச்சம்பவம் பெரிதும் துணையாக இருந்தது. இதே சமயம் எம் நாட்டைப்பொறுத்தவரையில் கொழும்பு சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் தாக்கப்பட்டதும், வவுனியாவில் இரு தமிழ் இளைஞர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடும்படியான செய்திகள்.

Continue Reading →