சரித்திர நாவல் அறிமுகம்: பழைய வேதக் கோயில்!

எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம்.- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -எமது வாழ்வின் அழிந்த தடங்களை பற்றி அறிந்து கொள்வதில் எவருக்குமே மகிழ்ச்சி ஏற்படவே செய்யும். கல்கி சாண்டில்யன் போன்றவர்களைப் படிப்பது இளம் பிராயத்தில் பிடித்திருந்தது. அதுவும் தமிழர் வாழ்வுதான். ஆனால் கந்தமுருகஞானி (முருகேசு ராஜவரோதயம்) எழுதிய பழைய வேதக் கோயில் நாவலானது எங்கள் கதை. எங்கள் சரித்திரம். எமது மூதாதையர்கள் பதித்த தடங்கள். எமது பிரதேச முன்னோடிக் குடிகளின் வாழ்கையை அவர்களது பிரச்சனைகளை பேசுகிறது. இதனால் மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது. மிகக் குறைந்தளவு சரித்திரத் தரவுகளை வைத்துக் கொண்டு நம்பத்தன்மை வாய்ந்த புனைவைப் படைத்துத் தந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். அவர் அச்சுவேலி தோப்பு அருள்நந்தி பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றுகிறார் என்பது குறிப்படத்தக்கது. நாவல் நம்பகத்தன்மையாக இருப்பதற்குக் காரணம் அந்த பகுதி பற்றிய புவியியல், பண்பாட்டு அம்சங்கள் பற்றிய கதாசிரியரின் நேரடி அனுபவங்களாகும் அத்துடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் ஊடாகப் பெற்ற வாய்மொழித் தகவல்களும் கைகொடுத்துள்தைக் காண முடிகிறது. அரசமரத்துக் கோயில், மரத்தின் கீழ் கற்சிலை, உரைகல், குடுவையில் திருநீறு, அரசமிலையால் தீர்த்தம் வழங்கல் போன்ற தகவல்கள் அந்த வாழ்வைப் படம் பிடிக்கிறன. அதே போல பனம் மரத்திலிருந்து கள் இறக்கல், பாளைக் கத்தி, சுரக் குடவையில் கள்ளு, அதை அருந்துவதற்கு வடலி ஓலையில் பிளா போன்ற சித்திரிப்புகள் சிறப்பாக மண்ணின் மறைந்த வாழ்வை நாவலில் அழகாக காட்டுகின்றன.

Continue Reading →

சிறுகதை: வழிப்பாதையின்…….

– சிவானந்த கக்கோட்டி, இந்திய  ஸ்டேட் வங்கியின் அதிகாரி. முக்யமான அஸ்ஸாமிய எழுத்தாளர். மறைந்து வரும் மனித விழுமியங்களையும் அதன் அக்கறையும் கிராம மக்களின் வாழ்வனுபவங்களோடு சொல்பவர். இவரின் கதைகள் . மூன்று சிறுகதைத் தொகுதிகளும், ஒரு நாடகமும் பதிப்பிததுள்ளார். 2000ம் ஆண்டில் மதிப்பிற்குரிய மும்மின் பர்கடகி விருதைப் பெற்றவர். –

சுப்ரபாரதிமணியன்நிலாவெளிச்ச முற்றத்தில் மெல்ல வினோதமான  மெளனம் விரைவாகப் பரவியது. முற்றத்தின் மத்தியில் வலது புறத்தில் பரவியிருந்த பாயின் கடைசிப் பகுதியிலிருந்து அய்டா மட்டும் பேசிக்கொண்டிருந்தான். பராமா, டெய்து ராஜன்,  பகுல், மைனா மற்ற  பக்கத்து வீட்டு சிறுவர்கள் அய்டாவை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டியின் உதடுகளிலிருந்து இந்த நேரத்தில் கதைகள் கசிந்து கொண்டிருக்கும். இருட்டின கொஞ்ச நேரத்திற்குப்பிறகு விலாசமான முற்றத்தில் பெரும்பாலும் எல்லா  குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விடுவர்.  பராமா அவனின் மூத்த சகோதனுடன் கொஞ்சம் தாமதமாக வருவான். அவர்களின் தினசரி படிப்பு வேலைகள் முடிந்தபின் அவர்கள் வருவர். அவர்கள் வெகு ஆர்வத்துடன் வருவர். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளித்தான் இருந்தனர்.. அவள் அவர்களுடைய சொந்த பாட்டியல்ல. ஆனால் குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் பொதுவாக கடைபிடிக்கப்படும் குழுவைச் சேர்ந்தவள். அவர்கள் அவசரப்படுவதில்லை.அய்தா எப்போதும் பாராமாவுக்குக்காக மற்ற குழந்தைகளுக்காகவும் காத்திருப்பான். சில வருடங்களுக்கு முன்பு வரை பாராமா  பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டே இந்த முற்றத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பான். வளர்ந்தபின்னும் கூட அவள் மடியிலேயே அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருப்பான்.  இந்த கதி பிகு திருவிழா நாளில் அவனுக்கு பனிரெண்டு வயது நிறைவடைந்தது பதிமூன்று வயது தொடங்கியது. அந்நாள் அம்மா பிராத்தனைகள் செய்து கடவுளுக்கு பிரசாதம் சமர்ப்பிப்பாள். அவன் வளர்ந்தாலும் அய்தாவின் கதைகள் தொடர்கின்றன.  அனைத்திற்கும் மேலாக, அவள் கதைக் களஞ்சியமாக இருந்தாள்.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—5

“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” –  கண்ணதாசன்

- பிச்சினிக்காடு இளங்கோ கும்மிப்பாடல்கள்,நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள்,நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள்,மாலையில்,இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை;இசையை; கலையை; அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக்குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள். அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன்.  எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள்.அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன். எங்களூர் ஏகலைவன் உறவினர்,கவிதை நண்பர் திரு பெ.அண்ணாமலை யார் பாடுறது? இளங்கோவா? என்று கேட்டது காதில் விழுந்தது. அடுத்த நொடியே நல்லாயிருக்கே என்றார். அதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற முதல் பாராட்டு. அது இன்னும் என்னோடு இருக்கிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 49: கவிதை நயம், கவிதை, Two Women & குட்டிக்கதை!

கவிதை நயம் மற்றும் கவிதைத்தொகுப்பு பற்றி….
 

வாசிப்பும், யோசிப்பும் - 49

கவிதையை நயப்பதற்குக் கடுமையான பயிற்சி வேண்டும். கவிதையிலுள்ள உவமை, உருவகம், குறியீடு, கற்பனை வளம், சொல் வளம் இவையெல்லாவற்றையும் அறிந்து , உணர்ந்து, சுவைப்பதற்குக் கடுமையான பயிற்சி இருந்தால் மட்டுமெ சாத்தியம்.  எனவேதான் கவிதைகளைத் தொகுப்பவர்களுக்குக் கவிதையைச் சுவைக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பதென்ன? கவித்துவமில்லாத கவிதைகளெல்லாவற்றையுயும் தொகுத்திருப்பார்கள். இதற்குக் காரணம் இவ்விதமாகக் கவிதைகளைத் தொகுப்பவர்கள், தொகுக்கப்படும் கவிதைகளின் நயத்தை அறிந்து , சுவைக்கத்தெரியாதவர்களாக இருப்பதுதான்..
 
இவ்விதம் தொகுக்கப்படும் கவிதைத்தொகுப்புகளை அவர்களது குழுவினருக்கு ஆதரவாக இயங்கும் திறனாய்வுப் பெருந்தகைகளை அல்லது தமிழகத்து இலக்கிய ஆளுமைகளை அழைத்துச் சிறப்பித்து நூல்களை வெளியிட்டு வைப்பார்கள். அவ்விதம் அழைக்கப்பட்ட ஆளுமைகளும் தம் பங்குக்கு ஏதாவது கூறி வைப்பார்கள். அத்துடன் சரி. ஒரு சில மாதங்களில் மறக்கடிக்கப்பட்ட தொகுப்புகளாக அவை மாறிவிடும்.

Continue Reading →

கதை பிறந்த கதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.

கதை பிறந்த கதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.

எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான ‘கிழவனும், கடலும்’ நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான ‘புளூ மார்லின்’ மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது ‘கிழவனும், கடலும்’ நாவலின் அடிப்படை.

இச்சமயத்தில் எனது சிறுகதையொன்றான ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’ உருவான விதம் பற்றிச் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கின்றேன். கனடாவுக்கு வந்த காலகட்டத்தில் என் வேலை காரணமாக டொராண்டோவின் மேற்குப் புறத்திலிருக்கும் ‘கீல்’ வீதியும், ‘சென்ட் கிளயர் மேற்கு’ வீதியும் சந்திக்கும் சந்தியை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் சந்தர்ப்பமேற்பட்டது. இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ள பகுதியாக விளங்கும் அப்பகுதியில் அன்று கனடா பக்கர்ஸ் நிறுவனத்தின் கசாப்புக் கூடம் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை அக்கசாப்புக் கூடத்தைக் கடக்கும்போதும் மூக்கைத்துளைக்கும் மணமும், அங்கு வெட்டுவதற்காக அடைப்பட்டுக் கிடக்கும் மாடுகளின் நிலையையும் மனதில் பல்வேறு சிந்தனைகளை உருவாக்கும்.  மனம் அக்காலகட்டத்தில் இலங்கைச் சிறைக்கூடங்களில் அடைப்பட்டுக்கிடக்கும் தமிழர்களின் நிலையுடன் அக்கசாப்புக்கூடத்தில் அடைபட்டுக்கிடக்கும் மாடுகளின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்.

Continue Reading →

தீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு

- என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -ஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கும் ஆரம்பகால உலக வரலாற்று நூல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும்ää காலனித்துவ ஆட்சியாளர்களாலும்,  அவர்களின் சிந்தனைப் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சுதேசிகளாலும் எழுதப்பட்டனவாகவே பெருமளவில் இருப்பதை அவதானிக்கலாம். ஆளும்வர்க்கத்தின்  பார்வையில் அமைந்த இத்தகைய வரலாற்று நூல்கள்  எதிர்காலம் எதைத் தெரிந்துகொள்ளவெண்டுமென அவர்கள் தீர்மானித்தார்களோ அவற்றையே உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது வழமை. தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நியாயங்கள்ää தியாகங்கள் எல்லாம் அவற்றில் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் இருந்தால் தோற்றுப் போனவர்களும் இருக்கவே செய்வர். இது இயற்கையின் விதி. அப்படியாயின், வரலாற்றில் அடக்கப்பட்டவர்களின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் வரலாறுகள் எங்கே புதையுண்டு போயின என்று தேடும்போது எமக்கு அவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களே பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன. அது நாட்டாரிலக்கியமாகலாம், கவிதையாகலாம், நாவலாகலாம்ää சிறுகதையாகலாம், ஏன் கடிதங்களாகவும்கூட இருக்கலாம். அந்த இலக்கிய வரிகளுக்குள் கூர்ந்து பார்த்தால் சொல்லப்படாத செய்திகளாக வரலாற்றுத் தகவல்கள் பல உருமறைப்புச் செய்யப்பட்டு ஒரு வரலாற்று மாணவனின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

Continue Reading →

அ.ந.க.வின் ‘மனக்கண்’

அறிமுகம்
தொடர் நாவல்: அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்'அ.ந.கந்தசாமிஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியெனக் கருதப்படுபவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஈடுபட்டு ஆழமாகத் தன் தடத்தினைப் பதித்தவரிவர். இவர் எழுதிய ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’. இந்த ‘மனக்கண்’ நாவல் பற்றிய எனது விமர்சனக் குறிப்புகளே இவை. எனக்குத் தெரிந்த வரையில் அ.ந.க.வின் ‘மனக்கண்’ நாவல் பற்றி வெளிவந்த விரிவான, முதலாவதான,   விமர்சனக் கட்டுரை இதுவாகத்தானிருக்கும். அந்த வகையில் இக்கட்டுரைக்கொரு முக்கியத்துவமுண்டு. இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று: நமது விமர்சகர்களுக்கு நூலாக வெளிவந்த நூல்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதிப்பழக்கம். இன்னுமொரு காரணம் பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தேடுதல் மிகவும் குறைவு. தமக்கு அனுப்பி வைக்கப்படும் நூல்களுக்கு மட்டுமே அவர்களது கவனம் திரும்பும். அவ்விதம் கிடைக்கும் நூல்களைத் தம் புலமையினை வெளிப்படுத்துவதற்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாயைப்போல் பாவித்துக்க்கொள்வார்கள்.  மிகச்சிலர்தாம் நூலாக வெளிவராத பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான தொடர்கதைகளுக்கும் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.இவர்களை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும். [ தனது இறுதிக்காலத்தில் இவர் மலையகத்தமிழர்களை மையமாக வைத்து கழனி வெள்ளம் என்றொரு நாவலினை எழுதிக்கொண்டிருந்தார். அந்த நாவல்  எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், அது 1983 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் அறியப்படுகிறது]. ‘மனக்கண்’ ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்து இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர்களின் ஆதரவினைப் பெற்றதொரு நாவல். இதற்கு முக்கியமான காரணங்களிலொன்று அ.ந.க நாவலில் வரும் பாத்திரங்களுகிடையிலான உரையாடல்களில் பேச்சுத்தமிழைக் கையாளுவதற்குப் பதில் , பல்வேறு பகுதிகளிலுமிருந்து வாசிக்கும் அனைவருக்கும் புரியவேண்டுமென்பதற்காகச் ‘சரளமான ஒரு செந்தமிழ் நடையினைப்’ பாவித்திருப்பதுதான்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் – கறுப்பு ஜூலை 83 நினைவு தினக்கட்டுரை: இலக்கிய திறனாய்வாளர் கலா. பரமேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று

 

” ஞாயிற்றுக்கிழமை  போய்விடுவேன்  என்றார் – அவ்வாறே  போய்விட்டார் இரண்டு  நாள்  இடைவெளியில் சஞ்சரித்த காலமு (னு)  ம்  கணங்களும் “

1_kalaparameswaran.jpg - 12.09 Kbமுருகபூபதிமுப்பத்தியொரு  ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை   மாதம்   22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு    யாழ்ப்பாணம்    பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்தியில்  வந்துகொண்டிருந்த  இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதல்    நடந்தது.  அச்சம்பவத்தில்  13   இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியை  தமிழர்கள்  இன்றும்  கறுப்பு  ஜூலை  என்று அனுட்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இலங்கையின்  அரசியலிலும்  அங்கு வாழ்ந்த   பூர்வகுடி தமிழ் மக்களினதும்  வாழ்வில்    பெரும்    மாற்றத்தை ஏற்படுத்திவிட்ட அந்த  1983   ஜூலை   மாதத்தில் யாழ்ப்பாணம் பலாலிவீதியில் ஒரு  இல்லத்தில்  அந்த    கறுப்புஜூலை   ஆழமாகவே பதிந்துவிட்டது. அந்தவீட்டிலிருந்த   முதியவர்    மற்றும்    குடும்பத்தலைவர்    தவிர்ந்த ஏனையவர்களை    வேரோடு    பிடுங்கி    எறிந்து    தேசாந்தரிகளாக்கியது. அப்படியென்றால்  –  அந்த    முதியவரும்    குடும்பத் தலைவரும்    என்ன ஆனார்கள்?    அவர்களின்    உடல்களை    குண்டுகள்    துளைத்து    அவர்கள் பரலோகம்    பயணித்தார்கள். எனது   இனிய    நண்பர்   கலா. பரமேஸ்வரன்   இன்று (24-07-1983)    யாழ்ப்பாணம்   பலாலிவீதியில்    கொல்லப்பட்ட   31    ஆவது    ஆண்டு நினைவு  தினம்.  அந்தத்துயரமே  இந்தக்கறுப்பு ஜூலையில்    இன்றைய  நாளில் எனது துயர்பகிர்வு. அன்று  24  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை   ஆடி  ஆமாவாசை – போயாதினம்.    தென்னிலங்கையில்   நாட்டின்    ஜனாதிபதி   உட்பட பௌத்தர்கள்    அனைவரும்   சில்   அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.

Continue Reading →

ரேமண்ட் கார்வருடனோர் அறிமுகம்

- வெங்கட் சாமிநாதன் -ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும்   செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு  ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர். ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார். சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது  இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.

Continue Reading →

இலங்கை – கறுப்பு ஜூன் 2014: முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !

இலங்கை - கறுப்பு ஜூன் 2014: முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !இலங்கை - கறுப்பு ஜூன் 2014: முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் !இலங்கையில் வாழும் தமிழின மக்களின் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையானது, 2009 ஆம் ஆண்டு பாரிய யுத்தத்திற்குப் பின்னர் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர் பேரினவாதிகளின் பார்வையானது, இலங்கையில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம் மக்கள் மீது திரும்பியிருக்கிறது. இது குறித்து நான் ஏற்கெனவே காலச்சுவடு ( இதழ் – 159, பக்கம் – 26) இதழில் ‘எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள்’ எனும் தலைப்பிலும், உயிரோசை (இதழ் – 156, ஆகஸ்ட் 2011) இதழில் ‘ ‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?’ எனும் தலைப்பிலும் விரிவாகத் தந்திருந்தேன். எனவே இக் கட்டுரையில் நான் பழையவற்றை விடுத்து கடந்த ஜூன், 2014 இல் இலங்கையில் இடம்பெற்ற இனக் கலவர வன்முறை குறித்த உண்மைச் சம்பவங்களையும் அண்மைய நிலவரங்களையும் முழுமையாகத் தருகிறேன்.

கடந்த ஜூன் மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவர வன்முறைகளின் நெருப்புக்கு திரியைக் கொளுத்திவிட்டது ஜூன் மாதத்திலல்ல. அது இலங்கையின்  யுத்த முடிவுக்குப் பின்னர் படிப்படியாகத் திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித் திட்டமாகும். பேரினவாத வன்முறையாளர்களின் ‘பொதுபலசேனா’ எனும் இயக்கமானது, ஊர் ஊராக கூட்டங்கள் நிகழ்த்தி ‘இலங்கையானது புத்தரின் தேசம், இந் நாட்டிலுள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது’ என்ற கொள்கையைப் பரப்பி ஆள் திரட்டியது. பௌத்த போதனைகளை பல விதமாக துவேசத்தோடு பரப்பியது. எவ்வாறெனில், ‘ஒரு பௌத்தனை வளர்த்தெடுப்பதே உங்கள் கடமையாகும். எனவே தமிழ், முஸ்லிம் இனத்தவர்களது வர்த்தக நிறுவனங்களுக்குச் செல்லாதீர். அவர்களது வாகனங்களில் பயணம் செய்யாதீர். அவர்களது பொருட்களை வாங்காதீர்’ என்பது போன்ற மோசமான விடயங்களைப் பரப்பியது.

Continue Reading →