தொடர்நாவல்: மனக்கண் (29, 31 & 32)

29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!

29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -சுரேசும் தாயும் சொன்ன விவரங்களால் ஸ்ரீதரின் உள்ளம் இப்பொழுது சுசீலாவைச் சுற்றிப் படர்ந்தது. “என்னே அவள் தியாகம், அவள் அன்பு. முறிந்து சரிந்த என் வாழ்க்கைக்கு அன்று அவள் மட்டும் துணிந்து முட்டுக் கொடுக்க முன் வந்திருக்காவிட்டால், நான் இன்று உயிருடன் இருப்பேனா? அப்பா நினைத்தது போல் பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து எனக்கு மனைவியாக்கியிருந்தால்… சீ அதுவும் ஒரு கல்யாணமா? அதை விட எனக்கு வேறு நரகம் வேண்டியிருந்திருக்குமா?” என்று பல விதமான சிந்தனைகள் சங்கிலித் தொடர் ஒன்றின் பின்னொன்றாக நகர்த்து வந்தன. அன்னையின் பேச்சுகளைக் கேட்ட ஸ்ரீதர் “அம்மா நான் சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்துவிட்டேன். மோசக்காரி – உன்னை நான் வெறுக்கிறேன் என்று அவளைப் பார்த்து நான் எத்தனை தரம் வாய் கூசாது கூறியிருக்கிறேன். பொறுமைக்குப் பூமாதேவியை உதாரணம் சொல்வார்கள். ஆனால் அம்மா சுசீலாவைப் போல் பொறுமைக்காரியை நீ கண்டதுண்டா?” என்றான்.

Continue Reading →

‘எதுவும் பேசாத மழைநாள்’-ஒரு பார்வை

'எதுவும் பேசாத மழைநாள்'-ஒரு பார்வைமுல்லைஅமுதன்ஈழத்துக் கவிதை உலகில் தமிழ் பேசும் முஸ்லிம் கவிஞர்களின் பங்களிப்பு மகத்தானது.மரபு,நவீனம் என தங்கள் கவிதைகளை சிறப்புறவே நமக்குத் தந்துள்ளனர். அன்பு ஜவகர்ஷா, அன்பு முகைதீன், பஸீல்காரியப்பர், மருதூர் வாணன், அண்ணல், இக்பால்(தர்காநகர்)மேமன்கவி, இப்னுஅஸ்மத், கலைக்கமல், கவின்கமல், சோலைக்கிளி, உ.நிசார், பைசால், ரியாஸ் குரானாகெக்கிராவை. சஹானா,  வசீம் அக்ரம்,  நாச்சியார்தீவு பர்வீன், கே.எம்.எம்.இக்பால்(கிண்ணியா)ஒலுவில் அமுதன், ஒட்டமாவடி அஸ்ரப், ஜின்னாசெரிப்புத்தீன், புரட்சிக்காமால், கலைமகள் ஹிதாயா, நளீம், நற்பிட்டிமுனை பளீல், அனார், ரிஷான் செரிப், பஹீமா ஜெகான்,ழ்ரஷ்மி, பௌசர், இப்படி பட்டியல் மிக மிக நீண்டது. அவ் வகையில் இன்று நமக்குக் கிடைத்திருப்பது நபீல் எனும் கவிஞனின் இந் நூல். உயிர் எழுத்துப் பதிப்பகம் அழகுற எழுபது பக்கங்களில் அச்சிட்டுள்ளது. ஏற்கனவே’காலமில்லாக் காலம்’ எனும் கவிதை நூலை தந்தவர். அபரிமிதமான நம்பிக்கைகளை அந் நூலின் மூலம்விதைத்தவர். அவர்களும் யுத்த ரணங்களைச் சுமந்தவர்கள். இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர்கள். பிரிக்க முடியாத படி அவலங்களுடனும், நெருக்கடிகளுக்குள்ளும் வாழ்பவர்கள். ஒரு இனத்தின் விடுதலை இவர்களையும் இணைத்தது தான். அதுவே முழுமையானதுமாகும்.

Continue Reading →

மீண்டும் வாசிக்கையில் தெணியானின் “காத்திருப்பு”

மீண்டும் வாசிக்கையில் தெணியானின் "காத்திருப்பு"எழுத்தாளர் தெணியான்‘காத்திருப்பு’ என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் முக்கியமாகக்  குறிப்பிட வேண்டிய ஒரு படைப்பாகும். அது பேசும் பொருள் காரணமாக இங்கு அவதானிப்பைப் பெறுகிறது. பல நாவல்களையும் குறுநாவல்களையும் தந்தது மட்டுமின்றி, சிறுகதை, விமர்சனம், மேடைப் பேச்சு எனப் பரந்த படைப்பாளுமை வீச்சுக் கொண்டவர் தெணியான். இந்தப் படைப்பு ஒரு வித்தியாசமான படைப்பனுபவமாக அவருக்கு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. படைப்புலகில் தனது வழமையான பாதைகளில் நடந்து சலிப்புற்று புதிய பாதைகளை அவாவும் கலைஞனின் உள்ளார்ந்த தேடலை உணர்த்துகிறது எனலாம். ஏனெனில் இது ஒரு பாலியல் நாவல். பாலியல் நாவல்கள் எமக்குப் புதியன அல்ல. பதின்மங்களில் நான் படித்த எஸ்.பொ வின் எழுத்துக்கள் சில கிளுகிளுப்பூட்டின. கணேசலிங்கன், டானியல் போன்றோரும் பாலியல் பிரள்வுகளை அங்காங்கே தொட்டுச் சென்றுள்ளார்கள். சட்டநாதனின் பல சிறுகதைகள் அற்புதமானவை. பெண்களின் உணர்வுகளை, பாலியல் பிரச்சனைகளை அழகாகாத் தொட்டுள்ளார். கலைப் பிரக்ஞையுடனும்,  மொழி மீதான அக்கறையோடும் எழுதுபவர்களில் என்னைக் கவர்ந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் மிக நாசுக்காகவும் அழகாகவும் கையாண்டவர் தி.ஜானகிராமன் இவரின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் மறக்க முடியாதவை. அதேபோல ஜெயகாந்தனின் ரிஷிமூலம் குறிப்பிட்டுக் கூற வேண்டிய படைப்பாகும். கவித்துவ மொழி நடை அழகும், ஆன்மீகத் தேடலும் கொண்ட லா.சா.ரா காதலும் பாலியலும் இழையோடத் தந்த ‘அபிதா’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று.  இவர்கள் அனைவருமே பாலியல் உறவுகளையும், பிறழ்வுகளையும் யதார்த்தமாக எடுத்துச் சொன்னவர்களாவர். உண்மையில் அவர்கள் ஏதோ நடக்காத காரியத்தைப் புதிதாகச் சொன்னவர்கள் அல்ல. சமூகத்தில் ஆங்காங்கே மறைவாக நடக்கும் விசயங்களை, வெளிப்படையாக இலக்கியத்தில் கலை நயத்தோடு சொன்னார்கள்.

Continue Reading →

‘சிதைவுகளோ’டு ‘தேம்பி அழாதே பாப்பா’

ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு இந் நாவல்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்த எழுத்துக்களை, அவை சொல்லவரும் அதே உணர்வுகளோடு புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் 'சினுவா ஆச்சுபி'யின் 'சிதைவுகளை' தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் என்.கே. மகாலிங்கம், 'கூகி வா தியாங்கோ'வின் 'தேம்பி அழாதே பாப்பா'வை தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஆகியோரை நன்றியோடு நினைவு கூரவேண்டும்.எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை‘அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தடுத்து வைத்திருந்தது….அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். ‘நியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.

முதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.

Continue Reading →

கனடாத் தமிழ் இலக்கியம்: எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூலை (Canadian Tamil Literature: Writer V.N.Giritharan’s Corner)

எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் படைப்புகள் சிலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், அவை பற்றி வெளிவந்த ஆய்வு மற்றும் விமர்சனக் கட்டுரைகளையும் Canadian Tamil Literature: Writer V.N.Giritharan’s Corner என்னும்…

Continue Reading →

கவிதை: அ.ந.க

[ ஏ.இக்பாலின் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய கவிதையொன்று அ.ந.க என்ற தலைப்பில் மல்லிகை சஞ்சிகையின் ஆகஸ்ட் 1969 இதழில் வெளிவந்திருந்தது. அதனை எமக்கு அனுப்பிய எழுத்தாளர் மேமன்கவி அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி. – பதிவுகள்]

அறிஞர் அ.ந.கந்தசாமி
இன்று இலங்கையி லேறிப் பொலிந்திடும்
இலக்கியம் யாவினுக்கும்
நன்று தெளிவினை நாட்டிலாக்கிடும்
நற்றமிழ்ப் பத்திரிகைத்
தொண்டுட னேறிய தீரபுருஷராய்த்
திகழ்ந்து தமிழ் வளர்த்த
பண்டிதனல்லன்; பட்டமே பெற்றிடாப்
படித்தவன் கந்தசாமி.

Continue Reading →

‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan.

அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது நாவலான ‘குடிவரவாளன்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘An Immigrant’ நாவலுக்காக முனைவர் தாரணி அவர்கள் நல்லதொரு விமர்சனமொன்றினை எழுதியிருக்கின்றார். மின்னூலாக வெளிவந்துள்ள ‘An Immigrant’ நாவலுக்கான, அந்த விமர்சனத்தினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.


“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested” -Sir Francis Bacon English author (1561 – 1626)

‘An Immigrant’: A poignant autobiographical sketch of  V.N. Giritharan.

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

- R.  Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for WomenAn Immigrant is a giant leap in fiction for the Canadian writer of Sri Lankan Tamil origin  V.N. Giritharan. Thiis is a book to be read with utmost “diligence and attention”, as it deals with the existential crisis of a desperate soul in an alien land. The story is inspiring and lights up the spirit of every heart. Although the emphasis of this work is more on the survival struggle of a man known as Ilango, the protagonist, it bears a strong testimony to the brutal genocide of Sri Lanka, which is still infuriating to people across the world. The author V.N. Giritharan has presented in his book, his first hand experience of how the Tamil people are being victimized by the brutalities of the Sinhalese hoodlums who harrass the Tamil. It is also a unique tribute to those Tamil people who lost their lives, families, belongings, nationality and even the identity of being a human in the 1983 July riot that took place in Sri Lanka. In the first few chapters of the book, the author vividly illustrates the plight of the young man, Ilango, who is caught in the riot. In his own land, Ilango feels trapped by the racists and tries his best to escape the monsters. It is a heartrending narration of the author of the riot through the eyes of Ilango.

To the casual reader, this book will be exciting because of its straightforwardness both in the theme as well as in the style. However, it is so astonishing that the book carries multiple layers of meanings, dynamic profundity in the description of the details and critical complexity of notions. It is not just the story of Ilango who escapes the riot in 1983 to reach Canada.  But, the author discusses various challenging issues like the illegal immigrant status forced on an innocent man, denial of the Human Rights in a developed country like the USA, the horrible life in the detention camp, job-seeking crisis of a man without a Social Insurance Card, the tricks of the road side vendors, like Haribabu and Henry, the exploitation of agents like Peter and Pablo, the cowardice of Anisman, the advocate, and most of all, the denunciation of the so-called illegal immigrants who live in the City of New York. The other side of the fascinating City jolts not only the protagonist, but also the readers.

Ilango is seen as a simple innocent youth of Sri Lanka in the initial chapters of the book, who, then, develops into an extraordinary man with impressive qualities even amidst of his adversities. He is a poet, pragmatist, writer, idealist, humanist and an optimist too. In a somber state of affairs in his life, he recalls his readings of the poems of Bharathiar, the renowned poet of Eelam, V.I.S.Jeyabalan and another Eelam poet ‘Kavindran’ (A.N.Kandasami). These renderings provide him with immense strength. When Ilango is not certain about the resolution of the unbalanced predicaments of his life, he gets himself transformed to a philosopher. He considers his life like a tree log that swims along the current of water. Ilango’s positive approach to life is another trait that needs to be appreciated, which is very rare in most human beings.

Continue Reading →

வளர்பிறை அனுபவங்கள்

கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை  மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு.தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை அவர் கவிதைகள்  எப்போதும் கொண்டிருக்கிறது.கவிஞர் கதிர்பாரதிசுப்ரபாரதிமணியன்கதிர்பாரதியின் திறந்த கவிதைகள் புதிய மொழி, புதிய உணர்வு, புதிய நடையுடன் இருப்பதை அவரின் கவிதைகள அவ்வப்போது படிக்கிறபோது அறிந்திருக்கிறேன். பெரும்பாலும் புதியமொழியும், புதிய உணர்வும், புதிய நடையும் கொண்டவை  மூடுண்டு கலவரப்படுத்துவதுண்டு.தொடர்ந்த வாசிப்பில் உள்ள வாசகன் மனம் விரும்பும் பங்களிப்பை அவர் கவிதைகள்  எப்போதும் கொண்டிருக்கின்றன. இத்தொகுப்பில் கவிதைகளில், கவிஞன் பற்றி நிறையவே எழுதியுள்ளார். கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி என்கிறார். எப்படியாகினும் கடத்தி விட வேண்டும் என்கிற ஆசையைச் சொல்கிறார். துப்பாக்கிக்குள் நிரம்புகிறது சிரிப்பென்று.  துப்பாக்கிக்குள் ரவை நிரப்பியதைப் போலாகிறது. அழவைத்து விட்ட நிறைவும் வந்து விடுகிறது. நவகவிஞனின் தினப்படி வாழ்க்கையின் அவலத்தை “  மகாகவி கவிதை எழுதுகிறான்”என்று குறிப்பிட்டு அவனின் எதிர்வினையையும் சொல்கிறார். கதிர்பாரதியின் கனவுகளை கொள்முதல் செய்து கொண்டு போன வாசகனின் கண்களில் ஒளி பெருகத் தொடங்கச் செய்கிறார். இவரின் பாழடைந்த வீட்டை கடந்து செல்பவனின் அனுபத்தை  வாசகன் கவிஞனை கடந்து செல்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மேல் அவன் என்ன செய்து விட முடியும் என்பதில் ” ஆவல் ”கவிதையில் கூடக் குறிப்பிடுகிறார்.வாழ்க்கையே கொலைக்களமாகி வருவதைச்  சொல்லும் அனுபவங்கள் உண்டு.  வாழ்க்கையில் கவிதைக்கு இடமில்லாமல் போய் விடுகிற துயரத்தையும் மேலிட்டு எடுத்துக் காட்டுகிறார்.யாருடைய அனுபவங்களோ, வார்த்தைகளோ கூட  தனக்குள் வரித்துக் கொண்டதாகி பின் கவிதை வரிகளாகின்றன்.

Continue Reading →

செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (7)

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -செல்லப்பா, தன் சிஷ்யர்கள் எல்லோரையும் தன் அச்சில் வார்க்கப் பார்க்கிறார் என்று க.நா.சு. சொன்னாலும், அப்படிச் சொல்வதில் ஒரு சந்தோஷம் அவருக்கு இருந்தாலும், அதற்கு ஆதாரம் ஏதும் யதார்த்த நிகழ்வுகளில் இல்லை. அவர் எழுத்து பத்திரிகையில் வெளித்தெரிந்த, அவருக்கு மிக சந்தோஷம் அளித்த எவரும் அவரவர் தம் தனி வழியில் சென்றார்களே தவிர அவர் அடிச்சுவட்டில் சென்றவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தம் இலக்கிய ஜீவிதம் எழுத்து இதழில் தான் பிறந்தது என்பதில் மாறுபட்ட எண்ணம் இல்லை.  தருமு சிவராமு ஒருவர் தவிர. எழுத்து பத்திரிகையில் வெளிவந்த தம் கவிதைகளைப் பார்த்துத்தான் தான் சி.சு. செல்லப்பாவுக்கு  புதுக்கவிதை பற்றிய ஞானமே செல்லப்பாவுக்கு சித்தித்தது என்று பேச எழுத ஆரம்பித்தார். அன்றைய சிற்றிதழ் சூழலின் கவனம் அவர் பக்கம் திரும்பியதும் தம் பின்னால் ஒரு ஒளிவட்டம் பிரகாசிக்கத் தொடங்கியதாக அவர் நம்பினார். 

Continue Reading →

எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி ‘நானா’ மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா!

எமிலி ஸோலா: - அறிஞர்  அ.ந.கந்தசாமி -[14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான ‘நானா’வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் ‘நானா’வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம் – பதிவுகள்].   உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. ‘பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!’ என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.

Continue Reading →