உலகெங்கும் பிரசுரமாகும் ஈழத்தவரின்; தமிழ் நூல்களைத் தேடிப் பதிவுசெய்யும் பணியை பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருபவர் நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஒரு தேசிய நூலகத்தின் கடமையை தன் இனத்தின் வரலாற்றுத் தேவைக்காகத் தன் தோளில் சுமந்து, நிறுவனரீதியான பொருளாதார உதவிகள் எவையுமின்றிச் செய்துவரும் செயல்வீரர். பிரபல எழுத்தாளரும், மூத்த நூலகவியலாளரும் பன்னூலாசிரியருமாக எம்மிடையே வலம்வருபவர் செல்வராஜா. 30க்கும் அதிகமான நூல்களைத் தமிழுலகிற்கு வழங்கிய போதிலும் இவர் தன்னை எழுத்தாளர் என்று கூறிக்கொள்வதில் கூச்சப்படுபவர். நூலகவியலாளராகவே நம் மத்தியில் வாழத்துணிந்தவர். இன்று ஈழத்து நூலகவியலாளர் என்றதும் அறிவுஜீவிகளின் சிந்தையில் உதிக்கும் முதல் பெயர் செல்வராஜாவினுடையதாகவே இருக்கும். நடராஜா-சிவபாக்கியம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வராக 20.10.1954இல் பிறந்த இவர், நீர்கொழும்பு விவேகானந்த வித்தியாலயம் (பின்னாளில் விஜயரத்தினம் மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது), நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.
19-ம் அத்தியாயம்: குருடன் ஸ்ரீதர்!
“உலகம் என்ன நிறம்” என்று யாராவது இன்னொருவரைக் கேட்டால் அது ஒரு விசித்திரமான கேள்வியாகவே இருக்கும். அது வானவில்லின் ஏழு வர்ணங்களையும், அவற்றின் எண்ணற்ற கலவைகளையும் கொண்டது என்று தான் யாரும் பதில் சொல்லியிருப்பர். பிறவிக் குருடனாயிருந்தால் “நிறமா? நிறமென்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?” என்று பதிலளித்திருப்பான். ஆனால் ஸ்ரீதரின் நிலை வேறு. அவன் நல்ல பார்வையுடன் பிறந்து, நல்ல பார்வையுடன் வளர்ந்து, காட்சிப் புலனின் திறனால் சித்திரக் கலைஞனாகி இரவும் பகலும் வண்ணங்களைப் பற்றிய எண்ணங்களில் தன் மனதை முற்றிலும் பறி கொடுத்து வாழ்ந்தவன். அப்படிப்பட்டவனுக்குக் கட்புலன் போனதும் ஒரே ஒரு நிறத்தைத்தான் அவன் காணக்கூடியதாயிருந்தது. குருடனாலும் காணக் கூடிய அந்நிறம் கறுப்பு நிறம்தான். ஆனால் கறுப்பென்பது ஒரு நிறம்தானா? எல்லோரும் அதை நிறமென்றே நினைத்துக் கொண்டாலும், கறுப்பு உண்மையில் ஒரு நிறமல்ல; நிறமெதுவுமற்ற வர்ண வெறுமையே கறுப்பு என்பர் விஷயம் தெரிந்தவர்கள்.
மகாநதியின் இரு கரையிலும் இருந்த இரண்டு முகாம்களில், முதலில் ஹிராகுட்டிலும் பின்னர் புர்லாவிலும் நான் கழித்த, 1950 முதல் 1956 வரையிலான ஆறு வருடங்களில், நான் பழகி அறிந்த என்னிடம் அன்பு செலுத்திய நண்பர்களில் நான் மிகவும் வியந்த மனிதர் சீனிவாசன். ஹிராகுட் அணைக் கட்டில் இருந்த குத்தகைக் காரர் ஒருவரிடம் அக்கௌண்டண்ட் ஆக வேலை பார்த்து வந்தார். எப்படி அவருடன் பரிச்சயம் ஏற்பட்டது, எப்படி அவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது, என்பதெல்லாம் இப்போது என் நினைவில் இல்லை. முதலில் அவருடன் பரிச்சயம் ஏற்பட்ட போது, அவர் வேலை பார்த்து வந்த குத்தகைக் காரர், அணைக்கட்டின் தேக்கத்திலிருந்து தண்ணீரைப் பாசனத்துக்கு எடுத்துச் செல்ல இரு பெரிய கால்வாயகள் தோண்டிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு கால்வாய் குத்தகையை சீனிவாசன் வேலை பார்க்கும் குத்தகைக்கார எஞ்சினீயர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் புர்லா விலிருந்து இருபது முப்பது மைல் தூரத்திலிருந்த ஒரு கிராமத்தில், சிப்ளிமாவோ அல்லது பர்கரோ தெரியவில்லை, அந்த கிராமத்தில் இருந்து வந்தார். அவ்வப்போது புர்லாவில் இருந்த தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டியிருந்த சமயங்களில் தான் அவர் எனக்கு பரிச்சய மானார். இந்த பரிச்சயத்தால், அவர் புர்லா வருங்காலங்களில் என்னோடு தங்குவது என்ற பழக்கம் ஏற்பட்டது. மிகவும் சுவாரஸ்யமான மனிதராகவும் வித்தியாசமான சிந்தனைகளும் கொண்டவராகவும் என் அறை நண்பர்கள் அவரைக் காணவே, அவர் வரவும் எங்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப் பட்டது. பின்னர் அவர் வேலை பார்த்த குத்தகைக்காரர் புர்லாவிலேயே தன் அலுவலகத்தை மாற்றிக்கொள்ளவே, அவர் நிரந்தரமாக எங்களுடனேயே தங்கத் தொடங்கினார்
ஆண் பெண்ணை விரும்புவதுபோல், பெண்ணும் ஆணுக்கு அடுத்தபடியாகப் பொன்னை விரும்புகின்றாள். மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய மூவாசைகளை மனிதன் நாடித் தேடி ஓடுவது வழக்கமாகும். பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை எல்லாப் பெண்களும் விரும்பி அணிகின்றனர். பெண்களைக் குளிர வைக்க ஆண்கள் அணிகலன்களுடன் முந்தி முதல் வரிசையில் அணி வகுத்து நிற்கின்றனர். மகளுக்குப் பெற்றோரும், மனைவிக்குக் கணவனும், தாய்க்கு மகனும் வேண்டிய பொன்னாபரணங்களை வாங்கிக் கொடுத்து, அணிவித்துப் பார்த்து மகிழ்வர்.
தங்கம், பித்தளை, வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைப் பெண்கள் அணிகின்றனர். ஆனால் தமிழ்ப் பெண்கள் தங்கத்தினாற் செய்யப்பட்ட ஆபரணங்களைத்தான் விரும்பி அணிவர். உலோகங்களினாற் செய்யப்பட்ட அணிகலன்களில் உள்ள ஈர்ப்புச் சக்தி அணிபவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுவர். பித்தளையால் செய்யப்பட்ட வளையல்களை கீல்வாத நோயாளிகள் (arthritic) அணிவதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
யாழ்ப்பாண வரலாறு பற்றியும் நல்லூர் இராசதானி பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமலை, பரராசசேகரன் உலா, வையாபாடல், இராசமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சில நூல்கள் தற்போது வழக்கில் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும்.
கைலாயமாலை
கைலாய மாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவ மாலையை எழுதிய மயில் வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதல் நூல்களில் ஒன்றாக கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது.
ஈரலிப்பைச் சுமந்தபடி வானலையும் மென்முகில்கள் கறுத்தொடுங்கித் தூறலாகிப் பின் சாரலாகிப் பூமி குளிர்த்துமோர் மழைப் பொழுது. சில்லிடும் அம்மழைப் பொழுதினை இளஞ் சூட்டுக் குருதி வெப்பநிலையும் போர்வையாய் மெல்லியமயிர் பூத்த தோலுந் தாங்கிய ஓர் மனிதஉயிரி எங்கனம் எதிர்கொள்ளும்? தன்னுடலுக்கும் புறச்சுழலுக்கும் இடையேயான வெப்பச் சீராக்கத்திற்காய் உரோமங்களை நிமிர்த்தியபடி நடுநடுங்கிக் கொள்ளும். இதுதானே காலங்காலமாய் நாம் உணரும் உயிரியல் யதார்த்தம். ஆனாலும் இங்கே எதிர்மறையாய் ஒரு மழைப் பொழுது. அதில் சுற்றுச்சுழலை விடவும் அதிகரிக்கும் உடல்வெப்பநிலை குருதிக் கலங்களையெல்லாம் விரிவடையச் செய்தபடியும் வியர்வைச்சுரப்பிகளைத் தூண்டிவிட்ட படியுமாய் வியர்த்தொழுகுகிறது. இது சாத்தியமா? சிறுபான்மை மீதான நியாயப்படுத்த முடியாத வன்முறைகளும் வெறிகொண்ட பேரினவாதம் வளர்த்துவிட்ட போர்க்காலம் இழைத்துச் சென்ற துரோகங்களின் தீராக் காயங்களுமே மழைப் பொழுதிலுங்;கூடக் கவிஞரின் உணர்வுகளைக் கொதிநிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன போலும். வியர்த்தொழுகும் மழைப்பொழுது என்ற சகோதரர் சபருள்ளாவின் முரண்சுவையோடு கூடிய இத்தலைப்பே இத்தொகுதி மீதான ஈர்ப்பினை அதிகப்படுத்தியது எனலாம்.
‘புத்தன் யேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?’ பாடல் பதிவுக்கான கருத்து…
அப்துல் மஜீத்: ஒரு சிறுகுழந்தையும் ஒரு கிழவரும் இந்தப்பாட்டில் எம்ஜிஆரிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு என்னை நான் MGR ரசிகனாயிருந்த சிறுவயதிலேயே உறுத்தியிருக்கிறது. பிறகு பலரிடம் சொல்லியுமிருக்கிறேன். does anybody agree?
கிரிதரன்: நண்பரே, அந்த ஆட்டுக்குட்டியை விட்டு விட்டீர்களே 🙂 நிச்சயமாக அந்த ஆட்டுக்குட்டிக்குச் சில வேளைகளில் விருப்பமில்லாமலிருந்திருந்தாலும், மனிதர்களுக்கு வாத்தியாருடன் திரைப்படத்தில் நடிக்கிறோமென்ற சந்தோசம்தான் நிறைந்திருக்குமென்று நினைக்கின்றேன். பாட்டும், டி.எம்.எஸ்ஸின் குரலும், கூறும் பொருளும், வாத்தியாரின் ஆளுமையும்தாம் பார்ப்பவர்கள். கேட்பவர்களுக்கு இருந்திருக்குமென்று நினைக்கின்றேன். மேலும் வாத்தியார் ரசிகனாயிருந்தேன் என்று இறந்த காலத்தில் அடிக்கடி பல ஆளுமைகள் , கலாப்பிரியா முதல், கூறுவதைக் கேட்டு வருகின்றேன். இதன் மூலம் அவர்கள் என்ன கூற வருகிறார்களென்றால்.. தங்கள் அறிவு இப்பொழுது கூடிவிட்டதென்பதை மறைமுகமாக அவர்கள் கூறுவதாகத்தான் நான் உணர்ந்துகொள்கின்றேன். இவ்விதமான கூற்றுகள் எனக்கு எப்பொழுதுமே புன்னைகையினைத்தான் ஏற்படுத்துவது வழக்கம்.
தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது. இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன. இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று – முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள் இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன.
(35) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
இப்போதும் நினைவிலிருந்து இன்னும் இரண்டு படங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். இம்மாதிரி படங்கள் தயாரிக்கவேண்டும், தம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையை, மனிதர்களைப் பற்றிச் சொல்லவேண்டும், அதுவும் சினிமாவாக உருப் பெறவேண்டும் என்ற நினைப்பு தமிழில் இது வரை எவருக்கும் வராத காரணத்தால், நம்மிலிருந்து அதிகம் வேறுபடாத, அதாவது வாழ்க்கை அம்சங்களில், சினிமா உலக வசதிகளில் அதிகம் வேறுபடாத என்று அர்த்தப் படுத்திக்கொள்கிறேன், அப்படி வேறுபடாத, நாமும் நம் வாழ்க்கை போலத்தான் இவர்களதும், நம்மைப் போன்றவர்கள் தான் இவர்களும் என்று நாம் இனம் காணக்கூடிய கன்னட, மலையாள படங்களிலிருந்தே உதாரணம் எடுத்துக்கொள்கிறேன். நான் ஏதும் இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் போகவில்லை. நமக்குள்ள சுதந்திரம் தரப்படாத, மதக் கெடுபிடிகளும், அரசியல் கெடுபிடிகளும் நிறைந்த, அரசு ஏற்றுக்கொள்ளாத (அப்படி ஏற்றுக்கொள்ளாத அம்சங்கள் படத்தில் என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை) படங்களைத் தயாரித்ததற்காக சிறைவாசம் செய்யும் இயக்குனர்களைக் கொண்ட இரான் நாட்டிலிருந்தும் கூட நான் உதாரணங்களைத் தேடவில்லை. நமக்கு நயனதாராவையும் அசீனையும் பிரித்வி ராஜையும், இன்னும் பல டஜன் கனவுக் கன்னிகளையும் நக்ஷத்திர நாயகர்களையும் தந்த மலையாளத்திலிருந்தும், நம் உலகத் தமிழினத் தலைவரும் புராணப் படங்களில் மூழ்கித் தோய்ந்திருந்த தமிழ் சினிமாவை மீட்டெடுத்து பகுத்தறிவுப் பாதைக்கு இழுத்து வந்து விமோசனம் அளித்த கலைஞர் அவர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று அழைத்து மகிழ்ந்திடும் சரோஜா தேவி, கனவுக்கன்னி ரம்யா, இப்படி நாயகிகளும், பிரகாஷ் ராஜ், ஆக்ஷன் கிங், அர்ஜுன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம், நூற்றுக் கணக்கீல் உள்ள இவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நம் தமிழ் சினிமா என்னவெல்லாம் சாத்தித்துள்ளது, அதே மலையாளமும் கன்னடமும் வளர்க்கும் சினிமா கலாசாரம், நமக்குத் தெரியாத, அல்லது நமக்கு வேண்டாத, தெரிந்து கொள்ள விருப்பமுமில்லாத அந்த கலாச்சார உலகத்திலிருந்து சில உதாரணங்களைத் தரலாம் என்று எனக்கு எண்ணம்.
உனக்கான பாடல் என்ற கவிதைத் தொகுதி சரா பதிப்பகத்தினூடாக கவிஞர் எஸ். ரபீக் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. 60 பக்கங்களை உள்ளடக்கி அழகிய அட்டைப் படத்துடன் இத்தொகுதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலி மற்றும் பிறை எப். எம். ஆகியவற்றில் அறிவிப்பாளராகக் கடமையாற்றும் இந்த நூலாசிரியர் ஏற்கனவே அவளில்லாத குளிர், எழுத மறந்த கவிதைகள் ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இத்தொகுதியில் காதல் கவிதைகளே முழுவதுமாய் இடம்பிடித்துள்ளன. மறைந்த வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் ஷஷஇலங்கை மணித் திருநாட்டின் இளம் கவிஞர்களில் ஒருவர் எஸ். ரபீக். ஆனால் நாடறிந்தவர். கடலில் முத்துக் குளிப்பது சுகம். அந்த சுகத்தை இவரின் கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. புதுமையும், மென்மையும் இணைந்து நிற்கும் இவரது கவிதைகளை ரசித்து மகிழ்ந்தவள் நான். புதுக் கவிதையின் தாத்தா மு. மேத்தாவுக்கே பிடித்திருக்கிறது இவரது கவிதைகள்|| என்கிறார்.