பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா
‘முகநூல்’ நண்பர்களிடம் ஒரு கேள்வி. நான் அறிந்த வரையில் பாரதி ஒரு கருத்து முதல்வாதியா அல்லது பொருள் முதல்வாதியா என்னும் நோக்கில் குறிப்பாக அவரது ‘நிற்பதுவே நடப்பதுவே’ என்னும் கவிதை கூறும் பொருளின் அடிப்படையில் 1981/1982 வெளியான மொறட்டுவைப் பல்கலைகழகத்தமிழ்ச் சங்க வெளியீடான ‘நுட்பம்’ இதழில் நான் எழுதிய ‘பாரதி கருத்துமுதல்வாதியா அல்லது பொருள்முதல்வாதியா’ என்னும் கட்டுரையே முதன் முதல் எழுதப்பட்டதாகத் தெரிகின்றது. வேறு யாராவது இதே கவிதையினை , இதே நோக்கில் கட்டுடைத்துள்ளார்களா? அவ்விதம் யாராவது எழுதியிருந்தால் 1981ற்கு முன்னர் எழுதியிருக்கின்றார்களா? இந்நோக்கில் பாரதியை முதலில் அணுகியவர்கள் யார் யார் என்று அறிய ஆவலாயுள்ளேன். அறிந்திருந்தால் அறியத்தரவும். முற்கூட்டியே நன்றி பல நண்பர்களே. [என் முகநூல் நண்பர்களாக ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், இதழாசிரியர்கள், முனைவர்கள், நாடறிந்த எழுத்தாளர்கள்.. எனப்பலர் இருக்கின்றார்கள். அதனால்தான் நண்பர்களே உங்களிடம் கேட்கின்றேன்.]
‘பதிவுகள்’ இணைய இதழில்: பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ பாரதியின் பிறந்ததின நினைவுக் கட்டுரை: ‘பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!’ -வ.ந.கிரிதரன் -http://www.geotamil.com/index.php…
எழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.
எகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல புதிர்களையும், ஆச்சரியங்களையும் தொடர்ச்சியாக கொண்டிருக்கிறது. வரலாற்றாசிரியர்களால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக புதிர்களும், மர்மங்களும் கட்டுடைக்கப்பட்டுகிறது. இதனால் இந்த வரலாறு எகிப்தில் தற்காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து பெருகிக் கொண்டு வருகிறது.எகிப்திய நாட்டின் உருவாக்கம் கிறீஸ்துவுக்கு முன்பாக 3000 ஆண்டுகள் முன்பே தொடங்கியது.
ஹேரெடொரஸ் ( Herodotus) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர். இவரே வரலாற்றின் தந்தையாக கருதப்படுபவர். அவர் எகிப்து சென்று அங்கு கேட்டவை, கண்டவை என எழுதிய பல விடயங்கள் இக்காலத்தில் தவறாகிப் போய்விட்டது. தற்போதைய எகிப்தியலாளர்கள் விஞ்ஞானத்தின் பயனாக கிடைத்த பல கருவிகளின் துணைகொண்டு பல புதிய விடயங்களை அறிகிறார்கள் . அதே நேரத்தில் இன்றைக்கு அறிந்து கொள்ளும் விடயங்கள் பிற்காலத்தில் தவறாகவோ அல்லது மேலும் புதிய விடயங்களை இணைப்பதாகவோ மாறலாம். அப்பொழுது எகிப்தின் வரலாறு குறித்த பார்வை எமது இளம் சந்ததியினருக்கு மாறுபடலாம்.
எனது எகிப்திய பயணத்தின் நோக்கம் எகிப்தின் வரலாற்று சின்னங்களான பிரமிட், அக்கால மன்னர்களின் மம்மிகள் மற்றும் கோயில்களை நேரடியாக பார்ப்பதாகவே இருந்தது. காலம் காலமாக அங்கே சென்ற இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள்போலத்தான் நானும் அங்கு சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றவற்றைப் பார்த்ததும் – அவற்றின் தோற்றம், பின்புலம் என்பவற்றை வழிகாட்டி மூலம் அறிந்தபோது அவைகளின் மீது மீளமுடியாத காதல் தோன்றியது. எனது இந்தவயதில் எகிப்திய ஆராய்ச்சியாளனாகவோ அல்லது சிலகாலம் எகிப்தில் வாழ்வதாகவோ விரும்பினாலும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்தேன்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை வரையில் யாழ். மாவட்ட அரச செயலகத்தில் ( கச்சேரியில்) குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூடலை நடத்துகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர்கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர் கண்காணிப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மேற்குறித்த மாணவர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்l வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல், தகவல் அமர்வு என்பன இந்த மே மாதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். அரச செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரச அதிபர் திரு. என். வேதநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கல விளக்கேற்றலுடன் நீடித்த போரில் உயிரpழந்த மக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர்.
அம்மாவை (‘நவரத்தினம் டீச்சர்’) நினைத்ததும் நினைவுக்கு முதலில் வருவது குடும்பத்துக்கான அவரது அர்ப்பணிப்புத்தான். வவுனியாவில் அவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றிய சமயம் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த அந்தக்காலம்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். சமையல் அனைத்தையும் (காலை, மதியம்) சலிக்காமல் செய்வார். எங்கள் எல்லாருக்கும் மதிய உணவை வாழை இலையில் வைத்துக்கட்டி எடுத்து வருவார். சில நாள்களில் வெள்ளிப்பாத்திரங்களாலான உணவுத்தூக்கியில் மதிய உணவை எடுத்து வருவார். மதிய உணவைப் பாடசாலையில் ஒன்றாக இருந்துதான் உண்போம். மறக்க முடியாத பசுமையான நினைவுகள் அவை.
ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல , ஆண்டுக்கணக்காய் , காலையில் உதிக்கும் சூரியனைப்போல் அலுக்காமல், சலிக்காமல் இவ்விதமே அதிகாலையில் எழுந்து , நீராடி, உணவு சமைத்து, எல்லாருக்கும் உணவை வாழையிலைப் பொதிகளாக அல்லது வெள்ளியாலான உணவுத்தூக்கியில் எடுத்து வருவதை எப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பும், அவரது அர்ப்பணிப்பு மிக்க அன்பினை எண்ணிப் பெருமிதமும் ஏற்படும்.
அதிகாலைகளில் அப்பொழுதெல்லாம் அவருடன் கூடத்தான் செல்வோம். வயல்களும், வனங்களும், குளங்களும் மலிந்த வவுனியாவின் தெருக்களினூடு அதிகாலைகளில் அவ்விதம் நடந்து செல்வதே நெஞ்சில் பசுமரத்தாணியாகப்பதிந்து விட்ட அனுபவம்.
அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாக எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி செல்வார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் ‘என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்’ என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் ‘இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்’ என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘வாயெல்லாம் பல்’. 🙂 இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.
எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல, சங்க மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபங்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் குறிக்கும் நாலடி வெண்பா ஒன்றையும் காண்போம்.
‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.’
மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி கூறும் 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.
1. நீதி கூறும் 11 நூல்கள் – திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது,
இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு,
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.
2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் – ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.
3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் – களவழி நாற்பது.
இனி, மேற்கூறிய நீதி கூறும் நூல்களில் ஒன்றான திரிகடுகம் என்ற நூல் கூறும் செய்திகளை ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்காகும். இந் நூலை நல்லாதனார் (நல் 10 ஆதனார்) என்னும் புலவர் இயற்றினார். இவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர். இவர் திரிகடுகத்தில் காப்புப் பாடலைத் தவிர, நூறு (100) பாடல்களைப் பாடியுள்ளார். திரிகடுகம் ஸ்ரீ திரி 10 கடுகம். திரி ஸ்ரீ மூன்று. கடுகம் ஸ்ரீ மருந்து. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயைத் தீர்ப்பன. அதேபோல், இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப் பெறும் மூன்று கருத்துக்கள் உள்ளன. அவை நோயைப் போக்கும் தன்மை கொண்டன.
” புத்தாண்டின் முன்னிரவுப்பொழுது. வறண்ட கோடையின் மத்தியில் வெக்கையானதொரு இரவு. திசையெங்கும் திணறடிக்கும் கும்மிருட்டு..! காய்ந்த ஓடைப்பாதையின் புதர்மூடிய வரப்புகளும் கண்ணுக்குத்தென்படாத காரிருள். வானைக் கருமேகமெதுவும் சூழ்ந்திருக்கவில்லை. வறண்ட நிலத்தின் புழுதிப்படலமும் தொலைதூரத்தில் எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையுமே அந்த இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன.” இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி என்ற சிறுகதை.
யார் இந்த ஹென்றி லோசன்…? அவுஸ்திரேலியாவின் மகத்தான சிறுகதையாசிரியர் எனக்கொண்டாடப்படும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி ஹெட்ஸ்பார்க் லோசன் 1867 ஆம் ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் க்ரென்ஃபெல் பிரதேசத்தில் ஒரு தங்கச்சுரங்க வயற்பகுதியில் பிறந்தவர். இந்தத்தேசத்திற்கு நாம் சூட்டியபெயர்கள்: கங்காரு தேசம், கடல் சூழ்ந்த கண்டம், புல்வெளிதேசம். கைதிகள் கண்ட கண்டம். இங்கு தங்க வயல்களும் இருந்திருக்கின்றன. மனிதன் மண்ணை அகழ்ந்தான், மரங்களை வெட்டினான். இயற்கையை அழித்தான். ஜீவராசிகளையும் கொன்றான். மண்ணிலிருந்த தங்கத்தையும், வைரத்தையும் உலோகங்களையும் சுரண்டி எடுத்தான்.
இயற்கைக்கும் கோபம் வருமா..? என்பதை அதன் எதிர்பாராத சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்தே பார்க்கின்றோம்.
” கோடையில் ஒருநாள் மழைவரலாம்” என்று கவிஞர்கள் பாடலாம். ஆனால், கவிஞராகவும் வாழ்ந்திருக்கும் ஹென்றி லோசன், ஒரு கோடைகாலத்தை கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவே வர்ணித்திருப்பதையே தொடக்கத்தில் சொன்னேன்.
150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில் பிறந்து, 95 வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்ட ஒரு இலக்கியமேதை எழுதியிருக்கும் சிறுகதைகளை எமக்குத் தமிழில் தந்திருப்பவர், ஹென்றிலோசன் பிறந்த அதே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் லிவர்ஃபூல் நகரத்திலிருக்கும் கீதா மதிவாணன். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா, திருச்சியில் பத்தாம் வகுப்புவரையில் தமிழ் வழிக்கல்வி முறையில் படித்தவர். பின்னர் மின்னணு மற்றும் தொடர்பியல் பட்டயப்படிப்பை முடித்தவர். தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர். இயற்கையின் மீதும் பறவைகள் மீதும் எப்போதும் ஆர்வம்கொண்டவர். அத்துடன் சிறந்த ஒளிப்படக்கலைஞர். பறவைகளை படம் எடுத்து, அவற்றினைப்பற்றிய நுண்மையான தகவல்களையும் திரட்டி, தொடர்ச்சியாக எழுதிவருபவர். அவுஸ்திரேலியாவில் வாழும் தனித்துவ குணங்கள் கொண்ட அதிசய விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய தொடரை எழுதிக்கொண்டிருப்பவர். அதனை கலைக்களஞ்சியமாகவே வெளியிடும் தீராத தாகத்துடன் இயங்கும் கீதா மதிவாணன், கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகின்றார். இயற்கையையும் பறவைகள் மற்றும் உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிக்கும் கீதா மதிவாணன், அவரைப்போன்றே இந்த மண்ணையும், இங்கு வாழ்ந்த ஆதிக்குடி மக்களையும், புதர்க்காடுகளில், கோடையில் வாடிய காடுறை மனிதர்களையும் நேசித்த ஹென்றி லோசனின் கதைகளை தெரிவுசெய்து அழகிய மொழிபெயர்ப்பில் தமிழுக்குத்தந்திருப்பது வியப்பானது.
பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களை அவமானப்படுத்தும் அவரது எதிரிகள் அவரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார்கள். சட்டசபையில் ஒருமுறை அவருக்கும் ஒரு நடிகைக்குமிடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டியதாகவும் அப்பொழுது அவர் \அண்ணாவின் பதில்:
‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை’ என்று குறிப்பிட்டதாகவும் குறிப்பிடுவார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கு மொழிகளைக்கொண்டு வசனங்களை உருவாக்கிப் பதிலளிப்பதில் பெயர் போனவர். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்’ என்று ‘ம’வில் வரும் அடுக்கு மொழிகளைக் கொண்டு ஒரு முறை அவர் கூறியிருக்கின்றார். அதுபோல் யாரோ ஒருவர் சினிமாக்காரர்களைப்பற்றி வரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் அவ்விதம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவர் அண்ணாவும் வேடிக்கையாக ‘நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’ என்று கூறியிருக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அவர் ‘அவள் ஒன்றும் படி தாண்டாப் பத்தினியும் இல்லை’ என்று கூறியிருந்தால் தவறு. ஆனால் அப்படி அவர் கூறியிருப்பாரா அல்லது இதுவும் அவரைப்பற்றி உலாவிய கிசுகிசுக்களிலொன்றா என்பது தெரியவில்லை.
யாராவது அறிஞர் அண்ணாவைப்பற்றிக் குற்றஞ் சாட்டுவதாகவிருந்தால் ஆதாரம் இல்லாமல் கிசுகிசுக்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டாதீர்கள். சட்டசபையில் இவ்விதம் விவாதம் நடந்திருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன் வையுங்கள். அறிஞர் அண்ணா உட்படப் பல திமுகவினர் தமிழ் சினிமாவில் இயங்கியவர்கள். சினிமாக்காரர்களைப்பற்றி கிசுகிசுக்கள் எழுதுவதற்கென்றேயொரு கூட்டம் இருக்கிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தி அவற்றின் மூலம் ஒருவரைக் களங்கப்படுத்துவதென்பது கீழ்த்தரமானது.
வவுனியாவின் எல்லையில் மடுக்கந்தை என்ற அந்த அழகிய கிராமத்தில் வசித்த மக்கள் துயில் எழுந்திருக்காத புலராத பொழுதிலே, அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக சுமார் 6 மைல் தூரம் ஒற்றையடிப்பாதையிலும் வயல் வரப்புகளிலும் நடந்து சமணங்குளம் தமிழ்ப்பண்டிதரிடம் வருவான். அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும் சிங்களம். ஆங்கிலம் படிக்க சரியான வசதி வாய்ப்புகள் இல்லை. அயல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அதனால், அவர்களுடன் பழகி உறவாடும் சந்தர்ப்பங்களும் அச்சிறுவயதில் அவனுக்கு கிடைக்கிறது. தமிழைப்பேசவும் புரிந்துகொள்ளவும் பழகிவிடுகின்றான். ஆங்கிலம் அந்நிய தேசத்திலிருந்து வந்த மொழி. அருகிலேயே தொன்மையான தமிழ் மொழி வாழ்கிறது. இதனைவிட்டு விட்டு எதற்காக அந்நியமொழிக்காக ஏங்கவேண்டும் என்ற சிந்தனை அந்த இளம் உள்ளத்தில் பிறக்கிறது. அயலில் சமணங்குளத்தில் பண்டிதர் கந்தையா என்றொருவர் ஆசிரியராகவும் அதேசமயத்தில் விவசாயியாகவும் வசிப்பதாக அறிந்துகொள்கின்றான். அவரைத்தேடி நடந்த சென்று, தனக்கு தமிழ் சொல்லித்தரும்படி கேட்கின்றான். அவர் ஒரு நிபந்தனை வைக்கிறார். “என்னிடம் தமிழ் படிக்கவருவதாயிருந்தால், அதிகாலை 4 மணிக்கு முன்பே வந்துவிடவேண்டும். நான் காலை 6 மணிக்கெல்லாம் வயலுக்குப்போய்விடுவேன். அதன் பின்னர் பாடசாலைக்குச்செல்வேன். மாலையில் வீடு திரும்பினாலும் உனக்கு தமிழ்ப்பாடம் சொல்லித்தருவதற்கு எனக்கு நேரம் இல்லை. மீண்டும் வயல், தோட்டம் என்று போய்விடுவேன். அதனால் உனக்கு தமிழ் சொல்லித்தருவதற்கு அதிகாலை வேளைதான் உகந்தது. அதற்கு சம்மதமாயிருந்தால் நாளை முதல் வந்துவிடு.” அதிகாலைக்குளிரில் வீட்டில் போர்த்திப்படுத்திருக்கவேண்டிய அச்சிறுவன் தமிழ் மீது கொண்டிருந்த காதலினால், ” காலை எழுந்தவுடன் படிப்பு” என்று பாடிக்கொண்டே காடு, மேடு, குளம், குட்டை கடந்து ஒற்றையடிப்பாதையால் வந்து பண்டிதர் கந்தையா அவர்களிடம் தமிழ் எழுதவும் பேசவும் கற்றுக்கொள்கின்றான்.
இன்று காலை நண்பர் கனகவரதா (கட்டடக்கலைஞர்) அலைபேசியில் அழைத்திருந்தார். அதனை நான் தவற விட்டு விட்டேன். ஞாயிற்றுக்கிழலைக் காலைப்பொழுதில் யாருடைய அலைபேசி அழைப்பையும் எதிர்பார்த்திராததே அவ்வழைப்பினைத் தவற விட்டதற்குக் காரணம். ‘என்ன காரணமாகவிருக்கலாம்? என்றொரு சிந்தனையோட அவரை அலைபேசியில் அழைத்தேன்.
கன்கவரதா (மறுமுனையில்): “என்ன் விசயமென்றால்… உமக்கு எங்களோடை ‘ஹின்டு கொலிஜ்’ஜில் படித்த விக்கியை ஞாபகமிருக்குதா?”
நினைவுக்குருவி காலவெளியில் சிறகடித்துப் பின்னோக்கிச் சிற்கடித்துப் பறந்தது. மெல்ல மெல்ல ஞாபகத்தில் அந்தவுருவம் புலப்பட ஆரம்பித்தது. சராசரி உயரம். எப்பொழுதும் சிரிப்பு பூத்திருக்கும் முகம். நெற்றியில் புரளும் தலை முடி. விக்கினேஸ்வரனின் உருவம் ஞாபகத்தில் அன்றைய கோலத்தில் மலர்ந்து சிரித்தது.
நான் கேட்டேன்: “கனகவரதா, யார் அந்த இணுவில் விக்கியையாச் சொல்லுறீர்?”
கனகவரதா: “பார்த்தீரா நீர் சொன்ன உடனேயே பிடித்து விட்டீர்?”
எப்படி மறகக முடியும்? பாடசாலைக் காலத்து நண்பர்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். ஆனால் அப்பிரவுகளில் இரு பிரிவுகள் முக்கியமானவை. ஒரு பிரிவு ந்ண்பர்களின் சகவாசம் பாடசாலையுடன் நின்று விடும். பாடசாலையில் அவர்களுடனான நட்பு கொடிகட்டிப் பறக்கும். பெரும்பாலும் இவ்விதமான நண்பர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருவதால், பாடசாலைக்கு வெளியில் அதிகம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருக்கும். மேலும் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வமாகவிருப்பவர்கள். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்கள் போன்ற சமூகச்செயற்பாடுகளில் வீணாக நேரத்தைச் செலவிட விரும்பாதவர்கள். அடுத்த வகையினருடனான நண்பர்களுடனான நட்பு பாடசாலையிலும், வெளியிலும் தொடரும். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்களில் கும்மாளமடிப்பதில் வல்லவர்கள் இவ்விதமான நண்பர்கள். இவர்களில் இணுவில் விக்கினேஸ்வரன் முதற் பிரிவைச்சேர்ந்தவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அமைதியானவர். இவர் ஆத்திரமடைந்து நான் பார்த்ததில்லை.