ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை …

23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “…

Continue Reading →

மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதைத் தொகுதியின் மீதான பார்வை

மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக'- அஷ்ரஃப் சிஹாப்தீபுதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.

Continue Reading →

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

1. சிக்கலில் சிக்கிய வினாக்கள் மனசெனும் படகில் வினாக்களின் பயணம் துடுப்படிப்பாரின்றி தளும்பி… ததும்பி.. நகர்கிறது தொலைவில் புலப்படும் சஞ்சல சுழலில் சிக்கி தவித்தல் உறுதி செய்யப்பட்ட…

Continue Reading →

‎39வது இலக்கியச் சந்திப்பு!

39வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் (ரொறொன்டோவில்) ஒக்டோபர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல்…

Continue Reading →

சீன மரபு காட்டும் ஒருபால் உறவு: பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்

ஜெயந்தி சங்கர்ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த அந்தக்கனியை அரசருக்குக் கொடுக்க அவர் அதை வாங்கிச் சுவைத்தபடியே, “ஆஹா ! பழத்தை நான் ருசிக்க வேண்டும் என்பதில் உனக்குத் தான் எத்தனை அக்கறை ! உனது பசியை விட என் மீதான காதலே உனக்குப் பெரிதாக இருக்கிறதென்றறிந்து யாம் மிக மகிழ்ந்தோம்’, என்று கசிந்துருகுவார்.

Continue Reading →

சர்வதேச மகளிர் தினம் மார்ச் – 8: பத்திரிகைத்துறையில் ஓர் சாதனை மாது…

எழுத்தாளர் யாழ்நங்கை (அன்னலட்சுமி ராஜதுரை)சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து வருடங்களுக்கு முன்பு (2000) ‘ஞாயிறு தினக்குரல்” பத்திரிகையில் தோழர் ‘பாரதிநேசன்” வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்” என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன். அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோமினம்மா டானியல் ஆகிய மாதரசிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இம்மாதரசிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல்துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலேயே யானும் மேடையேறத் தொடங்கினேன். அறுபதுகளின் முற்பகுதியிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.

Continue Reading →

மூடுபனித் திரைக்கு அப்பால் என்ன உள்ளது?

“நமது உலகம் கதைகளால் நிறைந்துள்ளது” என்று சொன்னார் எம்.டி வாசுதேவன் நாயர். அந்த கதைகள் எவ்வளவு முக்கியமானவை, சுவாரஸ்யமானவை, கவனிக்கத்தக்கவை? எவை கதையாகின்றன? எம்.டியின் எழுத்து கலையில் இதற்கு விடை உள்ளது. எம்.டியை வாசிக்கையில் கதைக் கலை வாழ்வின் எளிமையை அதன் வசீகரத்தை உணர்த்துவதற்கான முயற்சியோ என்று வியக்கிறோம். குறிப்பாக, அவரது “மூடுபனி” எனும் குறுநாவலை படிக்கையில். வாழ்வு எத்தனை சாதாரணமானது என்பதை அதை மிக நுணுக்கமாக அணுகி சிந்திக்கும் கதைகள் உணர்த்துகின்றன. மிக மிக சாதாரணமான கவனிக்கவே அவசியமற்ற ஒன்றான வாழ்வின் வசீகரத்தன்மையை உணர்த்துவதில் கதையாளர்கள் பரவலாக மாறுபடுகிறார்கள். ஆய்வகத்தில் மரபணுக்களுக்கு நிறமூட்டி மாறுபடுத்தி ஆய்வது போல் இது நிகழ்கிறது.

Continue Reading →

தூய்மையும் தூமையும்

இப்பொழுதெல்லாம்புனிதம் பற்றிப் பேசுகிறாய்தூசுகளால் ஆன இந்த உலகுதூ(ய்)மை நிறைந்ததுதான் பட்டுப்போன மரக்கொட்டுக்கூடஉனக்குப் புனிதமென்றால்எனக்கென்னஇருந்து விட்டுப்போகட்டுமே!குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்என் வாழ்வழித்துபுதிதுபுதிதாய் வரைகிறாயேஇதை என்னவென்பது? முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்நாற்றத்தை மறைக்கவாசனைத் திரவியம்…

Continue Reading →

அ.ந.கந்தசாமியின் மனக்கண் (நாவல்)

[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ]

முதல் அத்தியாயம்பணக்கார வீட்டுப் பிள்ளை

அ.ந.கந்தசாமிஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. “ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?” என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு.

Continue Reading →