அகராதிகள், கலைச்சொற்கள் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் அந்தந்தக் காலக்கட்ட மொழியின் இயல்பிற்கும் ஏற்ற வகையில் வளர்ந்து வரும் துறையாகும். மொழிக்கு இன்றியமையாதது அகராதிகள் என்று கூறினாலும் அதன் காலத்தை உணர்ந்து புதிய புதிய சொல்லாட்சிகளை உருவாக்கித் தொகுத்து நூலாக வெளியிட்டனர். இஃது ஒரு காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. இன்று கணிப்பொறி இணையம் காலத்தில் நாம் இருப்பதால் அதற்குத் தகுந்தாற் போல் வளர்ச்சியை நம் செம்மொழித் தமிழ் பெற வேண்டும் என்ற நல்ல நம்பிக்கையில் இணையத்தில் தமிழ் மின் அகராதி என்ற ஒரு பகுதியைத் தமிழ் ஆர்வலர்கள், நூலக உரிமையாளர்கள் தொடங்கி வைத்துள்ளனர். மின் உலகில் தமிழ்மொழி சார்ந்த மின் அகராதிகள் எழுபத்தைந்து (75) உள்ளன. இவைகளின் பணிகள், எந்தெந்த மின் அகராதிகள் தமிழில் உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.