பதிவுகள் விவாதம்: ‘படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல… ‘

[பதிவுகள் மே 2005 (இதழ் 65) இதழில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ என்னும் சிறுகதை பற்றி ஆதவண் தீட்சண்யா எழுதிய ‘படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல’ என்னும் கட்டுரை தொடர்பாக சிறு விவாதமே நடைபெற்றது. அதில் எழுத்தாளர்களான ரவிகுமார், யமுனா ராஜேந்திரன், R.P.ராஜநாயஹம் மற்றும் புதியமாதவி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு பதிவுக்காக அவ்விவாதம் இங்கே யூனிகோட்டில் மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளது.]

பதிவுகள் மே 2005; இதழ் 65.! தமிழ்நாடு!
படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல…  – ஆதவன் தீட்சண்யா –

ஆதவன் தீட்சண்யாபடைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே. தாயம்மாளின் கதையைச் சொல்பவன் தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின் முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின் உடை கௌபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை’. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும் தெளிவாகிறது.

Continue Reading →

சரித்திர வரலாறாகியவர் புலவர் அமுது

அமுதுப் புலவர்அச்சுப் போன்ற தமிழை அடக்கமாக உச்சரித்து,  நகைச்சுவை ததும்ப தமிழை ஈழமண்வாசனையுடன் சுவைக்கத்தந்தவர் புலவர் அமுது. லண்டனில் ‘மூதறிஞர்’பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு சரித்திர வரலாறாகிய புலவர் அமுது, ஈழத்தின் பாரம்பரிய பண்டித மரபையும் பல்கலைக்கழகத்தின் நவீன இலக்கிய மரபையும் இணைத்த ஒரு பாலமாகத் திகழ்ந்தவர். இத்தகைய ஒரு பெரிய தமிழ் அறிஞரை நான் அவருடைய இளைய மகள் ஜெயமதியுடன் இளவாலைக் கன்னியர் மடத்தில் சிறுமியாகப் படித்த காலம் தொட்டே அறிந்திருந்தேன். எமது பாடசாலையின் அனைத்து முக்கியமான வைபவங்களிலும் வெள்ளை வேட்டி சால்வையோடு மெல்லிய உயர்ந்த இந்த அறிவுச்சுடரின் தலை பளபளக்க, கழுத்தை பூ மாலைகள் அலங்கரிக்க, முதல் வரிசையில் இருந்ததைப பார்த்திருக்கிறேன்.  லண்டனில் ஆண்டுதோறும் இடம்பெறும் இளவாலைக் கன்னியர் மடத்தின் பழைய மாணவிகளின் ஒன்றுகூடலின்போதுதான் இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

Continue Reading →

‘புத்தகம் பேசுது’ சந்தா செலுத்த வேண்டுமா?

அன்புடையீர், வணக்கம், புத்தகம் பேசுது ஏப்ரல் இதழ் வெளிவந்துள்ளது.  புத்தகம் பெறுவதற்கு சந்தா செலுத்த விரும்புவோர் கீழ்க்காணும் முகவரிக்கு ரூ.75 அனுப்பவும் இச்சலுகை ஏப்ரல் 23, உலக புத்தகதினம்…

Continue Reading →

எண்ணப் பறவை சிறகடித்து …..

உலகம்

இனியும் ஆயிரம் நித்தியானந்தாக்கள் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்களின் பின்னால் ஆயிரமாயிரமாய் மக்கள் திரளத்தான் போகின்றார்கள்
ஓரிரு கிருஸ்ணமூர்த்திகளும் இனிமேலும் பிறக்கத்தான் போகின்றார்கள்
அவர்கள் யாரென்று அறியப்படாமலே மறையத்தான் போகின்றார்கள்

Continue Reading →