கனடா: சுயாதீன – கலை திரைப்படக் கழக விருது 2010 பெறும் வசந்தாதேவி டானியல்!

வசந்தா டானியல்கனடாவில் இயங்கும் சுயாதீன – கலை திரைப்படக் கழகம் வருடந்தோறும் மாற்று ஊடக முயற்சிகளில் தீவிர பங்களிப்பவர்களுக்கு விருது வழங்கி வருகின்றது. பி.விக்கினேஸ்வரன், பாலேந்திரா, டொமினிக் ஜீவா வரிசையில் இவ் வருடம் திருமதி வசந்தா தேவி டானியல் இவ் விருதைப் பெறுகின்றார். அனைவராலும் வசந்தா டானியல் என அறியப்பட்ட இவர் தனது ஒன்பவாவது வயதில் பரத நாட்டியத்தை கற்க ஆரம்பித்தார். திரு. ஏரம்பு சுப்பையா, திருமதி. திரிபுரசுந்தரி யோகானந்தன் ஆகியோர் இவரது ஆரம்ப கால குருக்கள். இடையில் திருமதி. வஜீரா சித்திரசேனா கண்டிய நடனமும் கற்றார். பின்னர் இவர் இந்தியாவில் பத்மஸ்ரீ கே. என். தண்டாயுதபாணி பிள்ளையிடம் முறையாக பரத நாட்டியம் கற்றார். நாடு திரும்பியவர் 1968ம் ஆண்டில் இருந்து பரதநாட்டிய ஆசிரியராக உள்ளார். தமிழ் மக்கள் பல இன்னல்களை சந்தித்த நேரங்களில் மக்களது அவலங்களை நாட்டிய நாடகமாக வெளிப்படுத்தினார். பாரதியார் பாடல்களை மையப்படுத்திய பல நாட்டிய நாடகங்களை இவர் படைத்துள்ளார். இக் கால கட்டத்தில் இவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டது. 

Continue Reading →