தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ( இலங்கை ) கவிதைகள்!

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா0

1. மரணத்தின் தேதி!

இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

Continue Reading →

– வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை ) கவிதைகள்!

- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை )

1. புதிய சட்டங்கள்!

வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்…
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

Continue Reading →

அண்ணா பேரவை

அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம். 15.03.2011 அன்று அண்ணா இணையதளத்தில் சேர்க்கப்பட்ட பக்கங்கள்பார்க்க   http://www.arignaranna.info நன்றி.இரா.செம்பியன்அண்ணா பேரவை(R.Sembian,Anna Peravai)Mob:- 09380552208

Continue Reading →

சிறுகதை – விதை –

ராம் பிரசாத் வானம் பிரகாசமாக இருந்தது. அத்தனை வெயில். வெம்மை அதிகமாயிருந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த சனமும் கிடைத்த நிழல்களில் பதுங்கிக் கொள்ள, அதையும் தாண்டி சிலர் வேகமாக பைக்குகளிலும், கார்களிலும் இடமும் வலமுமாக கடந்து போய்க்கொண்டிருந்தனர். கார்களில் சொல்வோர் பாடு பரவாயில்லை. ஏசி இருக்கும். பாவம், நடைராஜாக்கள் பாடி திண்டாட்டம்தான் என்று நினைத்துக்கொண்டே அன்னை பொறியியல் கல்லூரிக்கெதிரே இருந்த நிழற்குடையில் நின்றிருந்தார் வேதம்.

அவரைப் பற்றிய மேல்விவரங்கள் கொஞ்சம். அவர் ஒரு போலீஸ் அதிகாரி. வயது 42. உயரம் ஐந்தரை அடிக்கும் மேல். வாட்டசாட்டமான உடல்வாகு. கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில்  சப் ‍இன்ஸ்பெக்டர். அவர் அப்போது நின்றிருந்த இடத்துக்கு பக்கத்தில் தான் அவருக்கு வீடு. மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் ஆபீஸ் செல்வார். சாப்பிடும் நேரம் வரை, டிரைவர் ஜீப்பை பெட்ரோல் போல எடுத்துசெல்வார். சாப்பிட்டவுடன், வேதம் மெயின் ரோட்டிலுள்ள அந்த பேருந்து நிலைய நிழற்குடையில் காத்திருக்க, ஜீப் வந்ததும் ஏறிக்கொள்வார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி அவர் அன்று காத்திருக்கையில் தான் அதை கவனித்தார்.

Continue Reading →