பிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர். லெவியின் எழுத்துக்கள் பன்முகம் வாய்ந்தவை. சுயசரிதைக் குறிப்புகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் அவர் தடம் பதித்திருக்கிறார். ஒரு இரசாயன விஞ்ஞானியாக படித்துப் பட்டம் பெற்று பணி புரிந்த காரணத்தினால், அவரின் மொழிப்பயன்பாடு சுயப்பிரக்ஞை மிக்கதாயும் கச்சிதத்தன்மை கொண்டதாகவுமிருக்கிறது. அதிகபட்சமான, அவசியத்திற்கு மேற்பட்ட அலங்காரமான வரிகளை அவர் எழுத்துக்களில் காண்பதற்கு முடியாது. முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவருடைய அறுபதாம் வயதில் என்கிற தகவல் இன்னும் வியப்பளிக்கிறது. நவீன ஐரோப்பிய-யூத எழுத்தாளர்கள் வரிசையில் லெவி தனித்துத் தெரிகிறார். எனினும் நாஜிகள் ஏற்படுத்திய சாவு முகாம்களில் இருந்து தப்பித்து வெளியே வந்து பின்னர் தற்கொலை செய்து கொண்ட வகையில் போலந்தின் நவீன யூத எழுத்தாளரான Tadeusz Borowski யுடன் ஒப்புமைப்படுகிறார். ஆனால் Borowski யின் மொத்தப் படைப்பே his Way For the Gas, Ladies and Gentlemen என்ற ஒற்றை நூலில் அடங்கிவிடுகிறது. மேலும் Borowski தனது 33 வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது அவரது எழுத்து சாதனைகளை திடீரென நிறுத்திவிட்டது.
புகலிட இலக்கியம் என்றால் என்ன? புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? இவற்றிற்கிடையே வேறுபாடு இருக்கும் என்பதை பலர் சிந்திப்பதே இல்லை. அவற்றிடையே மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. அரசியல் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் படைப்பதே ‘புகலிட இலக்கியம்’ (Diasporic literature) எனலாம். தொழில் நிமித்தமான ஈழத்தமிழர் புலப்பெயர்வு செய்தோர் எழுதுவது புலம்பெயர் இலக்கியம் (Expatriate literature) இந்த வேறுபாட்டை முதலில் தெளிபடுத்திய பின் “புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு” என்ற தனது நினைவுப் பேருரையின் முக்கிய பகுதிக்குள் நுழைகிறார் செ.யோகராசா.பருத்தித்துறை வேலாயும் மகாவித்தியாலய ஸ்தாபகரான அமரர் உயர்திரு.வை. வேலாயுதம்பிள்ளை அவர்களின் முன்னோடிப் பணியை கெளரவப்படுத்தப்படும் நிகழ்வான ‘நிறுவனர் தின நினைவுப் பேருரை’ சென்ற 07.08.2011 ஞாயிறு மாலை கொழும்பு தமிழ் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த உரை சிறு கைநூல் நூலாக அன்று வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
One of the notable Lankan writers in Tamil is S Ponnuthurai who is also known as Es Po by his initials. One of his creative writing is a short fiction titled Sadangu. This has been translated into English by Prof Chelva Kanaganayakam of the University of Toronto in Canada. The English title of the book is ‘Ritual’. The book is published by The Three Wheeler Press – The Gratiaen Trust, c/o Marga Institute, Jayanthi Mawatha, Etul Kotte, Kotte. Prof Walter Perera, the Chairman of the Trust, the translator, Prof Chelva Kanaganayakm and the writer S Ponnuthurai have given the background regarding the publication. Es Po lives Chennai and alternatively in Sydney. He is a phenomenal figure in contemporary Tamil Literature. He is both a creative writer and a critic. He is deemed a controversial figure in literary circles especially when he takes the role of a critic, but as a creative writer he has shown his talents as an innovative, imaginative and realistic writer with a unique literary style.
முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும். இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும், காளை விரட்டு என்றும், வடமாடு என்றும், மஞ்சுவிரட்டு என்றும், எருதுகட்டு என்றும் பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். வேறு சங்க நூல்களில் காணப்பெறாத ஏறுதழுவலைக் கலித்தொகை மட்டுமே குறிப்பிடுகின்றது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.
பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து குறும்படம் / இலக்கியம் என இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது நாடக உலகில் தனது பங்களிப்பாக பதிற்றுப் பத்து எனும் நாடக அமைப்பை தொடங்க இருக்கிறது. திரைப்படத்தின் குறுகிய வடிவமான குறும்படம் போல நாடகத்தின் மிக குறுகிய வடிவமான குறு நாடகங்கள் தமிழ் ஸ்டுடியோ மூலம் தொடர்ந்து நிகழ்த்தப்படவிருக்கிறது. பதிற்றுப் பத்து எனும் இந்த அமைப்பு வீதி நாடகத்திற்கான களமாகும். இதில் பத்து நாடகக் கலைஞர்கள் பத்து நிமிடத்திற்குள் ஒரு சமூக பிரச்சனையை அல்லது விழிப்புணர்வு சார்ந்த விடயங்களை வீதிகளில் கலைத்தன்மையோடு நடத்திக் காட்டுவர்.இதற்காக பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு வீதி நாடகம் தொடர்பாக சில மாதங்கள் பயிற்ச்சியளித்தப் பின் அவர்கள் வீதி நாடகங்களை அரங்கேற்றுவர். இதில் நீங்களும் பங்கேற்கலாம்.