காலச்சுவடு.காம் – பயனுள்ள மீள்பிரசுரம் – குழந்தைகள் மீதான வன்முறை: கல்வி நிலையங்களில் கயமை இருள்

-2003 ஜூலை 8 அன்று செய்தித்தாள்களில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. சென்னைப் புறநகர் தனியார் (சுயநிதி) மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஒன்பது வயதான நான்காம் வகுப்பு மாணவி மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்கல்வி ஆசிரியரால் பள்ளி நேரத்திலேயே கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். நான் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இருந்த காலம். உடனே உண்மையறியும் குழு – சிறந்த குழந்தை மருத்துவ வல்லுநர், குழந்தை உரிமை ஆர்வலர், வழக்கறிஞர், ஆணையச் செயலர் ஆகியோர் கொண்ட என் தலைமையிலான குழு – ஒன்றினை நியமித்து, கள ஆய்வுக்குச் சென்றோம். அதற்குள் சென்னை மனித உரிமை நிறுவனம் (Human Rights Foundation) செய்தி சேகரித்து, ஆணையத்தின் தலையீட்டை வேண்டிற்று; ஆய்வில் பெரிதும் துணை நின்றது.  நடுத்தர வர்க்க வீடுகள் கொண்ட தெருவில் எதிரெதிரான இரு கட்டடங்கள்தான் பள்ளி. சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து வேறுபடுத்த முடியாத கட்டடங்கள். மூன்று கட்டடங்களுக்கு அப்பால் குற்றம் நடந்த விளையாட்டுத் திடல். திடலின் ஒரு பக்கம் பின்புறச் சுவரையொட்டி வரிசையாக அமைந்த கழிப் பறைகள். பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புவரையான பெண் குழந்தைகளுக்கும் ஒரே கழிப்பறைகள்தான்.

Continue Reading →

சிறுகதை: பூப்பும் பறிப்பும்

நவஜோதி ஜோகரட்னம்துரும்பு ஒன்று காற்றிலே பறக்கும்போது அது ஏன் பறக்குது என்பது  ஞானிக்குத் தெரியுமாம். அவர்கள் சகுனங்களை அறிவார்களாம். பிறர் வார்த்தைகளிலிருந்து அவர்கள் உள்ளத்தை அறிவார்களாம். முகச்சாடைகளிலிருந்து அவர்கள் சுபாவத்தை அறிவார்களாம் என்றுதான் அறிந்திருக்கிறேன். ஆனால் சாதாரண மனிதர்களாகிய எமக்கு இவை முடியாமற் போகின்றது. திருமணமாகி ஐந்து வருடங்களாகக்; காத்திருந்து கிடைத்த அழகான அருமை மகள். அக்குழந்தை மார்பில் வாய் புதைந்து கொடுத்த வலிகள் இன்னும்  மாறாது எடையற்ற மலர்களாக அந்தத் தாயுள் விரிவதுண்டு. இப்போது வயது ஒன்பது ஆரம்பித்திருக்கிறது அக்குழந்தைக்கு. பாடசாலைக்கு  கூட்டிச்செல்வது மட்டுமல்ல, சனிக்கிழமைகளில் இங்குள்ள தமிழ் பாடசாலைகளில் பரதநாட்டியம், வீணை போன்ற கலைகளையும் தன் குழந்தைக்கு  கற்றுக் கொடுப்பதற்காக ஓய்வின்றி அலைந்துகொண்டிருப்பவள் அந்தத்தாய்.

Continue Reading →

தனது தேசத்திற்கு என்றாவது ஒரு நாள் விடிவு கிடைக்கும் எனக் காத்திருக்கும் தலைவர் [ Kundum ‘குண்டும்’ ஆங்கில சினிமா ]

துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர்.  'மதம் ஒரு நஞ்சு' ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. 'மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.' அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.எம்.கே.முருகானந்தன்துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர்.  ‘மதம் ஒரு நஞ்சு’ ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. ‘மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.’ அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.

Continue Reading →