சிறுகதை: ஓட்டம்

ஓட்டம் - கடல்புத்திரன்பெண்கள் மாத்திரமில்லை,  ஆண்களும் … தம்மவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். ஆனால்,அவர்களுடையது போல ஆழமான போக்குடையதில்லை. விமலுக்கு சுரேசின் தலை வாருதல் கண்ணைக் குத்துகிறது. மாலையில் கூட அப்படியே குலையாமல் இருந்து.. விமலைப் பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்க்கிறது. ‘நான் என்ன நேரத்தில் பிறந்து தொலைத்தேனோ.. எனக்கு எல்லாமே தலைகீழ்!’அவனும் வீட்டிலே இருந்து வெளீக்கிடுகிற போது நீரைத் தெளித்து வாரித் தான் பார்க்கிறான். சைக்கிளில் ஏறி உழக்க,ஈரம் காய்ய.. பிடிவாதமாக பரட்டையாக நிற்கிறது.அவனுக்கு தேங்காய் எண்ணெய்யும் நீரும் சரியாய் கலக்கிற பக்குவம் பிடிபடவில்லை.அதோடு வேர்க்கிறதும் அதிகம்.அதிக எண்ணெய் தடவி வலிச்சு இழுத்தான் என்றால் கடிக்கிறது.உடம்பு மெசினும் நல்லாய் இல்லை.’தோல்வி தனை எழுதட்டும் வரலாறு’ரகம்.சலிச்சுக் கொள்வான்.

Continue Reading →