நூல் மதிப்புரை: இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்புடென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ”விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்.

“இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

தமிழ்  ஸ்டுடியோ: ஐந்திணை – கலைப், பண்பாட்டிற்கான களம்.

வணக்கம் நண்பர்களே…. தமிழ் ஸ்டுடியோவின் ஐந்திணை மிகப் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருகிறது. திரைப்படம் பார்ப்பதையே ஒரு கலையாக மாற்றும் முயற்சியாக ஐந்திணை செயல்படவிருக்கிறது. மேலும் திரைப்படம் சார்ந்து நுணுக்கங்கள், திரைப்படம் இலக்கியம் இரண்டிற்கும் இடையேயான தொடர்பு, வெகுவாகக் குறைந்து வரும் மனித உறவு போன்றவற்றை உங்களுக்கு மீட்டுக் கொடுக்கும் களமாக இந்த ஐந்திணை செயல்படவிருக்கிறது.

Continue Reading →

சிறுகதை: இரண்டு மனமில்லை

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)என்னைக்கும் அப்படிப் பார்த்ததே இல்லை. குனிஞ்ச தலையோடுதான் காலடி வீட்ல படும். நேரா சமையக்கட்டுதான்.அங்கே வச்சிருக்கிற காசைப்பார்த்ததும் இன்னைக்கு என்ன சமைக்கிறதுங்கிறது முடிவாயிடும். மொவத்துல ஒரு அப்பாவிக் களையிருக்கும். சிரிச்ச மொவத்தோடு வீட்டுக்குள் வருவதும் போவதும் நடக்கும். ஒரு அலுப்புமில்லாம சலிப்புமில்லாம  வேலைசெய்யிற ஜீவன்தான் பாக்கியம். எவ்வளவுதான் வருத்தமிருக்கட்டுமே அதை மொவத்தில காட்டுனதேயில்லை. நானும் பாத்ததுமில்ல. முனு வருசமா பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்.

Continue Reading →

சிறுகதை: சிவப்பு விளக்கு எரியும் தெரு

டேசன்(அவுஸ்திரேலியா)“உலகம் சுருஙகிவிட்டது” என்று எல்லோரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அதை ஜெனிவாவுக்கு வந்தால் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும். பூகோளத்தில் உள்ள சகல நாட்டை சேர்ந்தவர்களும் வந்து போவார்கள். அந்த நாடுகளுக்கு  பொதுவான நிறுவனங்கள் இந்த ஜெனிவா நகரில் இருப்பதால் எப்பொழுதும் மகாநாடுகள் கருத்தரங்குகள் என நடைபெறுவதால் ஹோட்டல்கள் எல்லாம் நிரம்பியே வழியும். வெளிநாட்டவர்கள் தொகை உள்நாட்வர்களுக்கு சமமானது. இப்படியான ஜெனிவாவில் ஐந்து நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கி நாலு இரவுகள் அந்த ஹோட்டலின் உணவை அருந்தினார் சோலர் ரெக்னோலஜி பொறியிலாளர் சம்பந்தமூர்த்தி. அவரது நாக்குக்கு திருப்தியில்லை.

Continue Reading →