வில்லியம் ஃபாக்னர் (1897-1962) சீற்றமும் ஓலமும் [ The Sound And The Fury By William Faulkner ]

வில்லியம் ஃபாக்னர் நவீன அமெரிக்க நாவலாசிரியர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950ஆம் ஆண்டு ஃபாக்னருக்கு வழங்கப்பட்டது. பத்து நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது Royal Air Forceஇல் விமான ஓட்டுனராகப் பணியாற்றினார். எழுத்தின் மூலம் பணம் வருவது தட்டுப்பட்ட போது, ஹாலிவுட்டில் எம். ஜி. எம். நிறுவனத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதினார். சினிமாவுகாக அவர் செய்த வேலைகள் அவரது இலக்கியத் தரத்தைப்  பாதிக்கவில்லை. விமானம் ஓட்டுதல், வீடுகளுக்கு வாணம் பூசுதல், படகு ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து, தனக்கு வேண்டிய சிறிது விஸ்கி, புகையிலை, எழுதுதாள்கள், உணவு ஆகியவற்றைப் பெறுவதற்கான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.வில்லியம் ஃபாக்னர் நவீன அமெரிக்க நாவலாசிரியர்களில் மிக உயர்ந்த இடத்தைப் பெறுபவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950ஆம் ஆண்டு ஃபாக்னருக்கு வழங்கப்பட்டது. பத்து நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். முதல் உலகப் போரின் போது Royal Air Forceஇல் விமான ஓட்டுனராகப் பணியாற்றினார். எழுத்தின் மூலம் பணம் வருவது தட்டுப்பட்ட போது, ஹாலிவுட்டில் எம். ஜி. எம். நிறுவனத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதினார். சினிமாவுகாக அவர் செய்த வேலைகள் அவரது இலக்கியத் தரத்தைப்  பாதிக்கவில்லை. விமானம் ஓட்டுதல், வீடுகளுக்கு வாணம் பூசுதல், படகு ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து, தனக்கு வேண்டிய சிறிது விஸ்கி, புகையிலை, எழுதுதாள்கள், உணவு ஆகியவற்றைப் பெறுவதற்கான பணத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் ‘இருப்பதிகாரம்’: இருப்பு பற்றிய தேடல்!

வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்' : இருப்பு பற்றிய தேடல்!நான் எழுதிய கவிதைகளில் பல இப்பிரபஞ்சத்தில் நமது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் ‘இருப்பதிகாரம்’ என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது. ஏற்கனவே ‘பதிவுக’ளில் வெளிவந்தது.

Continue Reading →

குறும்பட வட்டம் – தொடக்கமும் முடிவும்

வணக்கம் நண்பர்களே, குறும்பட வட்டம் தொடர்ந்து 34 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஒரே மாதிரி இல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஒரு புதுப் பகுதி, புதிய எண்ணம், புதிய முயற்சி என போய்க் கொண்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மூன்று வருடங்கள் ஒரே இடம், அதே நாள், அதே நேரம் என கொஞ்சம் சலிப்பு தட்டத்தான் செய்கிறது. தவிர்த்து தமிழ் ஸ்டுடியோவில் இருந்து ஒரு மாதத்திற்கு நான்கைந்து நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. குறும்பட வட்டம், பௌர்ணமி இரவு, குறுந்திரைப் பயணம், ஆவணப் படங்கள் திரையிடல், இலக்கிய நிகழ்வுகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.

Continue Reading →

நியுயோர்க்: நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி!

Sept 8, 2011 – அன்புடையீர்! மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பு நடவடிக்கை! ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.வட அமெரிக்காவிலுள்ள அத்தனை அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை வெற்றிகரமாகச் செய்ய உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Continue Reading →

சிறுகதை: நாசிலெமாக்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்கோப்பையைத் தூக்கிப்பிடித்து, மேலே அண்ணாந்து காப்பி குடிக்க முயன்றதில் இந்த முறையும் தோல்விதான். பழக்கமின்மையால் காப்பி சிதறி, டீ ஷர்ட்டெல்லாம் நனைந்து வேறு உடை மாற்ற அறைக்குள் ஓடும்  பூங்கொடியைப் பார்க்கப் பார்க்க, தனலெட்சுமிக்குப் பற்றிக் கொண்டு வந்தது கோபம். என்னாச்சு இந்தப் பெண்ணுக்கு? கொஞ்ச நாட்களாகவே மகள்  அடிக்கும் லூட்டி, சில சமயங்களில் எரிச்சலைக் கூடக் கொடுத்தது. காப்பியை உறிஞ்சி, மிடறு மிடறாய்க் குடிப்பது தான் பூங்கொடிக்குப் பிடிக்கும். அப்படி ரசித்துக் குடிப்பது பார்க்க என்னமோ தியானம் போல் இருக்கும். அப்படி மெய்ம் மறந்து  காப்பி குடிக்கும் பெண் இப்ப கொஞ்ச நாட்களாய்  தான் இப்படி அண்ணாந்து  குடிக்கிறாள். வெறும் தண்ணீரை[ பச்சைத்தண்ணீரை ]அப்படி குடிப்பதில்  சிரமமில்லை. ஆனால் சூடு காப்பியையும், அப்படி சர்க்கஸ் வேலையாய் குடிக்க முற்பட்டு, பிறகு உடையெல்லாம் சிதறி, அசடு வழிய அறைக்குள் ஓடுவதைப் பார்க்கும் போது தான்,கோபம் வருகிறது.

Continue Reading →