சிறுகதை: பூப்பும் பறிப்பும்

நவஜோதி ஜோகரட்னம்துரும்பு ஒன்று காற்றிலே பறக்கும்போது அது ஏன் பறக்குது என்பது  ஞானிக்குத் தெரியுமாம். அவர்கள் சகுனங்களை அறிவார்களாம். பிறர் வார்த்தைகளிலிருந்து அவர்கள் உள்ளத்தை அறிவார்களாம். முகச்சாடைகளிலிருந்து அவர்கள் சுபாவத்தை அறிவார்களாம் என்றுதான் அறிந்திருக்கிறேன். ஆனால் சாதாரண மனிதர்களாகிய எமக்கு இவை முடியாமற் போகின்றது. திருமணமாகி ஐந்து வருடங்களாகக்; காத்திருந்து கிடைத்த அழகான அருமை மகள். அக்குழந்தை மார்பில் வாய் புதைந்து கொடுத்த வலிகள் இன்னும்  மாறாது எடையற்ற மலர்களாக அந்தத் தாயுள் விரிவதுண்டு. இப்போது வயது ஒன்பது ஆரம்பித்திருக்கிறது அக்குழந்தைக்கு. பாடசாலைக்கு  கூட்டிச்செல்வது மட்டுமல்ல, சனிக்கிழமைகளில் இங்குள்ள தமிழ் பாடசாலைகளில் பரதநாட்டியம், வீணை போன்ற கலைகளையும் தன் குழந்தைக்கு  கற்றுக் கொடுப்பதற்காக ஓய்வின்றி அலைந்துகொண்டிருப்பவள் அந்தத்தாய்.

Continue Reading →

தனது தேசத்திற்கு என்றாவது ஒரு நாள் விடிவு கிடைக்கும் எனக் காத்திருக்கும் தலைவர் [ Kundum ‘குண்டும்’ ஆங்கில சினிமா ]

துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர்.  'மதம் ஒரு நஞ்சு' ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. 'மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.' அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.எம்.கே.முருகானந்தன்துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர்.  ‘மதம் ஒரு நஞ்சு’ ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. ‘மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.’ அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.

Continue Reading →

நெடுங்கவிதைகளாய் உருமாறி வாழ்வியலைப் பாடும் சிறுகதைகள்

ஒரு தென்னைமரம்‘லௌகீகம் வியாபித்த வாழ்வியற்தளம் தனி  பொதுவாழ்வின் தரிசனங்களாய் விரிகின்றபோது நான் தரிசித்த, என்னைத் தட்டிவிட்ட நிகழ்வுகள் என் ஜீவனிலேறி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன’’ எனக் கூறும் கவிஞர் கிண்ணியா ஏ எம்.எம் அலியின் இரண்டாவது நூல்தான் ஒரு தென்னைமரம் சிறுகதைத் தொகுப்பு.  1974 இல் இலக்கிய உலகில் தடம் பதித்த  கவிஞர் கிண்ணியா ஏ.எம்.எம் அலி அவர்களின் ஆக்கங்கள் தாங்கி வராத தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். தேசிய சர்வதேச ரீதியில் நடாத்தப் பட்ட ஏராளமான இலக்கியப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும்  விருதுகளையும் பட்டங்களையும் அள்ளிக் குவித்ததோடு அண்மையில் இலக்கியத்திற்கான  கலாபூஷணம் அரச கௌரவத்தையும்பெற்றிருப்பது றிப்பிடத்தக்கது.

 இவரின்முதல்கவிதைத்தொகுப்பு குடையும் அடைமழையும். கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதைத் தொகுப்புக்குப்பின். கிண்ணியாவில் வெளியான கனதியான மரபுக் கவிதைத் தொகுப்பாக குடையும் அடைமழையும் தொகுப்பைத்தான்  கூறவேண்டும்.   உண்மையில் கவிஞர்களின் உரைநடைகள் கவித்துவம் மிக்கவை.வரிகளை விட்டும் விலக விடாது ஒரு காந்தம்போலே விழிகளை ஈர்த்துநிற்பவை.அதிலும் நாம் சார்ந்த சூழற்பின்னணியில் பின்னப்பட்டவையெனில் சொல்லவும் வேணுமா?

Continue Reading →

கனடா – ‘ரொரன்ரோ’வில் 28.08.2011 இடம்பெற்ற உலகத் தமிழ் பேரவையின் பொதுக்கூட்டம்!

தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமைää கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு  மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு  பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். தாயகத்தில் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமைää கனடா ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஆவணி 28ஆம் நாள் மாலை ஏழு  மணியளவில் ஆரம்பமானது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளாரும், உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களும் சிறப்பு  பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். ஆகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொதுக்சுட்டத்தில் முதலில் உரை நிகழ்த்திய அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகள் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை ஒன்றிணைப்பதன் மூலம் இப்பேரவையானது 2009 ஆம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் 14 நாடுகளிலுள்ள அமைப்புகளுடன் பிரதிநிதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, உலகத்தழிழ் பேரவைக்கான அரசியல் யாப்பும் உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் பேரவையை சம்பிரதாயபூர்வதாக 2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரித்தானிய நாடாள மன்றத்தில் பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர், மற்றும் பிரித்தானிய எதிர்க்கட்சிகளின் வெளிநாட்டுக்கொள்கைக்கு பொறுப்பான நாடாளூமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சர்வதேசமயமான சுயாதீனமான,  ஜனநாயகப்பண்புகளோடு அகிம்சாவழியில் இப்பேரவையின் கருத்துருவாக்கம் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை ஆரம்பிக்கப்பட்டதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

Continue Reading →

Australian Tamil Congress 2nd Annual General Meeting!

Australian Tamil Congress invites the members of the Australian Tamil Community to participate in their 2nd AGM. ATC Executives will provide an update on achievements to date and planned activities for the future.  Your participation will give ATC an opportunity to listen to your opinions to enhance the future of ATC.  அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கடந்த வருட செயற்பாடுகளும், வருங்காலச் செயல் திட்டங்களும் பற்றிய தகவல்கள் கலந்துரையாடப்படும்.இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை அழைக்கிறது.

Continue Reading →

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற அழகிய யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமாக நடைபெற்ற அழகிய யுத்தமொன்று. அது வெறி பிடித்த இனக் கலவரமொன்றல்ல. அரசர்கள் இருவர் தனது சேனையிலிருந்த உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள, நேர்மையாக யுத்தம் செய்து வெற்றி தோல்வியைத் தீர்மானித்தார்கள். தோல்வியுற்ற எல்லாளனுக்காக கல்லறையொன்றைக் கட்டி அதனை கௌரவப்படுத்தும்படி எல்லோருக்கும் கட்டளையிட்டார் துட்டகைமுனு மன்னன். அக் கட்டளையானது இன்றும் பின்பற்றப்படுகிறது. யுத்தத்தில் வென்ற துட்டகைமுனு மன்னன், அதன் பிறகு அமைதியாக வாழத் தீர்மானித்தார். அவர் இன்றும் கூட எங்கள் அனைவருக்கும் அமைதியாக வாழ வழி காட்டும் ருவன்வெலி மஹாசாயவைக் கட்டினார். அசோகமாலா காதல் வயப்பட்டு தனது புத்திரனை தாழ்ந்த குலத்தவருக்கே கொடுத்தார்.

Continue Reading →

British Tamils Forum (BTF) Meet Indian Political Leadership in India

British Tamil ForumA delegation from British Tamils Forum (BTF) met with dignitaries in India to apprise them of the plight of Tamil people in Sri Lanka and to urge them to support the call for an Independent International Investigation into the conduct of the genocidal war. Following on from the recent meeting in London, of senior BTF members with Bhathiya Janatha Party (BJP) delegation, headed by Nitin Gadkari the president of BJP, the BTF delegation visited India on invitation. The delegation met several key political leaders, representatives of human rights organisations, religious leaders, the Indian media and senior political advisors, in various states including Tamil Nadu, Karnataka and Delhi.

Continue Reading →

கனடா: குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு!

  செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் Scarborough Village Community Centre, 3600 கிங்ஸ்டன், ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் – கிங்ஸ்டன்) சிறப்புரை: ‘கல்வியும் சமூக…

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் – (74 & 75)

நினைவுகளின் சுவட்டில் – (74)

வெங்கட் சாமிநாதன் ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்போம். இடையில் ரஜக் தாஸ் ஏதாவது சொல்வான். அது மற்றவர்களுக்கு தெரியாத, அவர்கள் பங்கு பெற்றிராத சம்பவமோ, பேச்சோ இப்படி ஏதோ ஒன்று இருக்கும். ரஜக் தாஸ் சொல்லிக்கொண்டிருப்பான். நடுவில் சற்று நிறுத்தி எல்லோரையும் பார்ப்பான். இனி நடக்கும் நாடகத்தை தமிழில் எப்படி சரிவரச்  சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சாதாரண “ஹை” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு அவன் செய்யும் ரகளை அனுபவித்தால் தான் தெரியுமே ஒழிய சொல்லிப் புலப்பட வைக்கமுடியாது.  ”ஹை” என்ற வார்த்தையின் பொருளும் அது வெவ்வேறு கட்டங்களில் சொல்லும் தொனி மாற்றத்தில் பெறும் பொருள் மாற்றத்தையும் தமிழில் எப்படி சொல்வது? சரி, ஏதோ முடிந்தவரை சொல்லிப் பார்க்கவேண்டியது தான்.

Continue Reading →