கடந்த 29-10-2011, சனிக்கிழமை, ரொறன்ரோ 50, ஜாவேயிஸ் டிரைவில் உள்ள கலையரங்கில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் பெருமையுடன் வழங்கிய நட்சத்திர இரவு – 2011 இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்இந்தியா, இலங்கை போன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, கனடாவில் 24 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்து, பிரபல திரை உலக இசை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், மற்றும் இசை ஆர்வலர்கள் பலரின் பாராட்டையும், அபிமானத்தையும் பெற்று வெற்றி நடை போடும் பவதாரணியின் பாரதி கலைக் கோயில் இசைக் கலைஞர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து நடத்திய நட்சத்திர இரவு, இனிமை, புதுமை, குதூகலம் அனைத்தும் ஒன்றுகூடிய இசை நிகழ்ச்சியாக இசை ஆர்வரர்கள் பலராலும் பாராட்டத்தக்க வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
[ ஏற்கனவே எம்.ஏ.சுசீலா அவர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தணடனையும்’ நாவலை தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். அது தமிழ் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். அம்மொழிபெயர்ப்பு தற்போது நூலுருப் பெற்றுள்ளது. மேற்படி நாவலைப் பற்றி சுசீலா அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த குறிப்புகளை இங்கே மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்-] தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவலை ‘அசடனா’க மொழிமாற்றிய அற்புதமான கணங்கள்,என்றென்றும் நினைவு கூரத்தக்க வாழ்நாள் அனுபவமாக எனக்கு வாய்த்ததால் இந்நூல் வெளியாகும் இத் தருணம் என் மனதுக்கு மிகவும் நிறைவளிக்கிறது. முழுமையான தீமை என்றோ…முழுக்க முழுக்கத் தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.