பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!

- வி. ரி. இளங்கோவன் -பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..! ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 – ம் திகதி (11 – 12 – 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் ((50, Place de Torcy, 75018 Paris –  Métro:  Marx Dormoy) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை ‘மண் மறவா மனிதர்கள்” நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Continue Reading →

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தமிழ்மொழித்திறன் போட்டி – 2011 / 12

ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தமிழ்மொழித்திறன் போட்டி - 2011 / 12!கனடிய ஒன்ராறியோ அரசைச் சார்ந்த கல்விச்சபைகளில் தமிழ்மொழி கற்றுவரும் மாணவர்களின் நலனை நோக்காகக் கொண்டு இச்சங்கம் உருவாக்கப்பட்டது. பல்பண்பாட்டுச் சூழலில் தாய்மொழிக்கல்விக்கு அரசு சார்ந்த கல்விச்சபைகள் முதன்மை கொடுத்து வருகின்றன. அந்த வாய்ப்பினை மாணவர் முழுமையாகப் பயன்படுத்தவும் தாய்மொழி கலை பண்பாடு போன்றவற்றில் மாணவர் தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் இச்சங்கம் உதவி வருகின்றது. அத்துடன் ஆண்டுதோறும் இச் சங்கம் மாணவர்களுக்கிடையேயான மொழித்திறன் போட்டிகளையும் ஆசிரியர் கருத்தரங்குகளையும் நடத்திவருகின்றது.

Continue Reading →

உயிர்மை 100ஆவது இதழ் வெளியீட்டு விழா

உயிர்மை 100ஆவது இதழ் வெளியீட்டு விழா அருமை நண்பர்களே! ‘உயிர்மை’ இதழ் தனது நீண்ட பயணத்தின் இன்னொரு கட்டத்தை எட்டுகிறது. வரும் டிசம்பர் 1 ஆம்தேதி ‘உயிர்மை’யின் 100ஆவது இதழ் வெளிவருகிறது. டிசம்பர் 1 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் (மாவட்ட மைய நூலகம், (LLA BUILDING),735, அண்ணா சாலை, சென்னை-2) நடைபெறும் இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பிதழின் முதல் பிரதியை இந்திரா பார்த்தசாரதி வெளியிட, எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக் கொள்கிறார். எங்களது இந்தப் பயணத்தை வலிமையும் அர்த்தமும் உள்ளதாக்கிய ‘உயிர்மை’- ‘உயிரோசை’ வாசகர்கள் இந்த நிகழ்வில் நேரடியாகவோ மானசீகமாகவோ பங்கேற்க வேண்டுமென விரும்புகிறேன். நீங்களின்றி இந்தப் பயணத்தின் ஓரடியும் சாத்தியப்பட்டிருக்காது.

Continue Reading →