தமிழ் ஸ்டுடியோ – திரைப்பட இரசனைப் பயிற்சி வகுப்பு!

வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. நாள்: 26-11-2011, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் (10 AM)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
பயிற்சிக் கொடுப்பவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
நன்கொடை: ரூபாய் – 250/-

Continue Reading →

நான்காம் ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ!

வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2008 ஆம் வருடம் தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ தமிழில் மாற்று ஊடகத்திற்கான களமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது மாற்று ஊடகங்களாக குறும்படங்கள் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அனைத்து தொலைக்காட்சிகளும் குறும்படங்களை தொடர்ந்து ஒளிப்பரப்புகிறது. உலகம் முழுவதும் குறும்படங்களுக்கான களம் விரிவடைந்துள்ளது. ஆனால் தமிழில் இன்னும் கவனிக்கத்தக்க அளவில், அதிக அளவில் குறும்படங்கள் வெளிவரவில்லை. எல்லாரும் தங்களின் இருத்தலுக்கான நியாயம் தேடவே குறும்படம் நோக்கி ஓடி வருகின்றனர். அல்லது திரைப்படத் துறையில் நுழைவதற்கான நுழைவு சீட்டாகவே குறும்படங்களை கருதுகின்றனர். இதில் எது சரி? எது தவறு என்கிற விவாதம் தேவையற்றது. பொதுவாக இவ்வுலகில் எல்லாவற்றிற்கும், எப்போதும் இரண்டு பக்கங்கள் இருந்தே தீரும். இதில் சரி தவறுகளை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லும் நாட்டாண்மை வேலையை செய்வதற்கு யாருக்கும் இங்கே அருகதை இல்லை.

Continue Reading →

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் ‘பாலை’ திரைப்படம் வெளியீடு!

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் 'பாலை' திரைப்படம் வெளியீடு! 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள  படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Continue Reading →