‘பதிவுகள்’/ ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!

ஆதவன் தீட்சண்யாஅலர்மேல் மங்கை[‘பதிவுகள்’ மற்றும் நந்தா பதிப்பகத்தாரின் (கனடா) ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுடன் 2004இல் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தியது. அப்போட்டியின் நடுவர்களாக பிரபல எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் ஆகியோர் இருநது பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அது பற்றிய விபரங்களையும், பரிசுக் கதைகளையும் ஒரு பதிவுக்காக மீள் பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]

Continue Reading →

சிறுகதை: துக்கத்தின் உச்சம்!

செகாவ்வின் சிறுகதை: துக்கத்தின் உச்சம்!.அன்டன் செகாவ்[கதாசிரியர் பற்றி: மணிமேகலை சதீஷ்குமார் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். அவர் மொழிபெயர்த்த (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து)  அன்டன் செகாவ்வின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான இச்சிறுகதை மகனை இழந்த குதிரையோட்டி ஒருவரின் துயரத்தினை விபரிப்பது.] அது ஒரு மங்கலான மாலை நேரம். அப்பொழுதுதான் ஏற்றப்பட்டிருந்த தெரு விளக்குகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது ஈரமான பனி. வீடுகளின் மேற்பகுதியிலும் குதிரைகளின் பின்புறத்திலும் மெல்லிய பனி அடுக்குகள் படர்ந்திருந்தன. அந்தப் பகுதி மக்களின் தோள்களையும் தொப்பிகளையுங் கூடப் பனிப்படலம் விட்டு வைக்கவில்லை. குதிரை வண்டியோட்டி ஐயோனா பொட்டாப்பாவ் வெளுத்திருந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பேயைப் போலிருந்தார். ஒரு மனித உடலை எவ்வளவுக்கெவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தன் உடலை வளைத்திருந்தார் ஐயோனா. அவர் தன் பெட்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் எந்த அசைவும் இல்லை. பனிக்குவியலே அவர்மீது நிறைந்தாலும் அதை அசைத்து உதிர்த்து விடத் தேவையில்லை என்பது போல் அமர்ந்திருந்தார். அவருடைய சிறிய குதிரையும் வெண்மையாயிருந்தது.

Continue Reading →