தமிழ் ஸ்டுடியோ – திரைப்பட இரசனைப் பயிற்சி வகுப்பு!

வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. நாள்: 26-11-2011, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் (10 AM)
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
பயிற்சிக் கொடுப்பவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
நன்கொடை: ரூபாய் – 250/-

Continue Reading →

நான்காம் ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ!

வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. வணக்கம் நண்பர்களே!, தமிழ் ஸ்டுடியோ தொடங்கி இன்றோடு (23-11-2011) மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2008 ஆம் வருடம் தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ தமிழில் மாற்று ஊடகத்திற்கான களமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்போது மாற்று ஊடகங்களாக குறும்படங்கள் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அனைத்து தொலைக்காட்சிகளும் குறும்படங்களை தொடர்ந்து ஒளிப்பரப்புகிறது. உலகம் முழுவதும் குறும்படங்களுக்கான களம் விரிவடைந்துள்ளது. ஆனால் தமிழில் இன்னும் கவனிக்கத்தக்க அளவில், அதிக அளவில் குறும்படங்கள் வெளிவரவில்லை. எல்லாரும் தங்களின் இருத்தலுக்கான நியாயம் தேடவே குறும்படம் நோக்கி ஓடி வருகின்றனர். அல்லது திரைப்படத் துறையில் நுழைவதற்கான நுழைவு சீட்டாகவே குறும்படங்களை கருதுகின்றனர். இதில் எது சரி? எது தவறு என்கிற விவாதம் தேவையற்றது. பொதுவாக இவ்வுலகில் எல்லாவற்றிற்கும், எப்போதும் இரண்டு பக்கங்கள் இருந்தே தீரும். இதில் சரி தவறுகளை ஆராய்ந்து தீர்ப்பு சொல்லும் நாட்டாண்மை வேலையை செய்வதற்கு யாருக்கும் இங்கே அருகதை இல்லை.

Continue Reading →

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் ‘பாலை’ திரைப்படம் வெளியீடு!

2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் 'பாலை' திரைப்படம் வெளியீடு! 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை சித்தரிக்கும் “பாலை” திரைப்படம் நவம்பர் 25 அன்று தமிழகம் முழுவதும் வெளியாகின்றது. இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள  படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Continue Reading →

சிறுகதை: “தப்பிப் பிழைத்தல்”

கே.எஸ்.சுதாகர்கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தை, தட்டிப் பறிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு அலைந்து திரிகின்றது.  இந்திரன் மிகவும் கடின உழைப்பாளி. இரண்டு வேலைகளுக்குப் போகின்றார். பகலில் முழு நேர வேலை. இரவில் பகுதி நேர வேலை. உழைக்கும் பணத்தை நாட்டுக்கு அனுப்புகின்றார். வீட்டுக்கு அனுப்புகின்றார். அத்தோடு தனது குடும்பத்தை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொள்கின்றார். வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் அவருக்கு தூக்கக் கலக்கத்திலேயே கழிகின்றது.

Continue Reading →

இந்தியப் பே(போ)ரரசு

“மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்…..” இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல. இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது. பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி  புரியும் காவல்துறைக்கு வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு… அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.

Continue Reading →

மீள்பிரசுரம்: தஸ்தாயெவ்ஸ்கியின் ‘அசடன்’

தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர். இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன். தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய  நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை ஒரு சேர ஒருமுறை வாசித்திருக்கிறேன், நான்கும் ஒரு பெரிய இதிகாசத்தின் தனிப்பகுதிகள் போலவே இருக்கின்றன. நான்கின் முக்கியக் கதாபாத்திரங்களும் தீவிரமான மனப்போராட்டமும் நெருக்கடியும் கொண்டவர்கள். தனிமை தான் அவர்களது முக்கியப் பிரச்சனை, மேகத்தில் மறைந்துள்ள சூரியனைப் போல அவர்கள் இருப்பு பிறர் கண்ணில் படாதது, நிலவறை உலகம் தான் அவர்களுக்குப் பிடித்தமானது, பகல் வெளிச்சத்தை அவர்கள் விரும்புவதில்லை, சக மனிதர்களோடு இயல்பாகப் பேசிப்பழக முடியாமல்  ஒதுங்கியேவாழ்கிறார்கள். அதேவேளை உலகின் சகல குற்றங்களுக்கும் தாங்கள் ஒரு விதத்தில் பொறுப்பாளர்களாக கருதுகிறார்கள். அதன் பொருட்டு இடையுறாத மனவருத்தம் கொள்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்து வாசிக்க வாசிக்க ஈரக்களிமண்ணைப் போல பிசுக்கென நம் உடலோடு ஒட்டிக் கொள்ளக்கூடியது.

Continue Reading →

‘ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)’ என்னுமொரு தீர்க்கதரிசனக் கவிதை பற்றி ….

அண்மையில் அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக இத்தாலிய விஞ்ஞானிகள் அறிவித்திருந்தார்கள். இன்னும் இம்முடிவு முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு முன்னர் மேலும் பல பரிசோதனைகள் மேலும் பலரால் செய்யப்பட வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையில் மார்ச் 6, 1983. இல் நான் குறிப்பேட்டில் எழுதிவைத்த கவிதையொன்றான ‘ஐன்ஸ்டைனும் நானும் (ஒரு பிதற்றல்)’ என்னும் கவிதையினை ஒருகணம் நினைவு கூர்தல் பொருத்தமானது. இக்கவிதை ஏற்கனவே ‘பதிவுகள்’, ‘திண்ணை’ ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. அத்துடன் அண்மையில் பதிவுகளிலும் ‘ஒருங்குறி’ எழுத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட கவிதையாகும். மேற்படி பரிசோதனை முடிவுகளான அடிப்படைத் துகள்களிலொன்றான நியூட்டிரினோக்கள் ஒளியை விஞ்சும் வேகத்தில் செல்வது நிரூபிக்கப்பட்டால் , மேற்படி கவிதையை ஒரு தீர்க்கதரிசனமிக்கதொரு கவிதையாகவும் கொள்வதற்கு சாத்தியமுண்டு என நீங்கள் கூறினால் அதிலெனக்கு ஆட்சேபனையேதுமில்லை.’

Continue Reading →

ஈழத்தின் தமிழ் இசைத்துறை : காந்தள் பூக்கும் தீவிலே – புதிய பாடல்

காந்தள் பூக்கும் தீவிலே – புதிய பாடல் (2011)
இசை:கே.ஜெயந்தன் ; வரிகள்:கவிஞர் அஸ்மின்; பாடியோர்: கே.ஜெயந்தன் & கே.ஜெயப்பிரதா

ஈழத்தின் தமிழ் இசைத்துறை மிகவேகமாக வளர்ந்து வருகின்றது.ஈழத்திலும் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகரான கலைஞர்கள் இருக்கின்றனர்.நாங்கள்தான் அவர்களை கண்டுகொள்ளாது  இருக்கின்றோம்.இன்று வெளியாகியுள்ளது ஈழக்கலைஞர்களின் புதிய பாடல்.இதனை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் ஈழத்து கலைஞர்களின் திறமை எந்தளவுக்கு உலகத்தரத்திற்கு வளர்ந்து வருகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

Continue Reading →

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில்: ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை. சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன் இருபது வருடகாலமாக மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் இருந்த, இங்குள்ளவர்களே மறந்திருந்த, யாரென்று தெரிந்து கொள்ள விரும்பாத என்னை வழிமறித்து சினேகம் கொள்வார் என்ற எதிர்பாராத ஆச்சரியம்.வெங்கட் சாமிநாதன்சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை. சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன் இருபது வருடகாலமாக மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் இருந்த, இங்குள்ளவர்களே மறந்திருந்த, யாரென்று தெரிந்து கொள்ள விரும்பாத என்னை வழிமறித்து சினேகம் கொள்வார் என்ற எதிர்பாராத ஆச்சரியம்.

Continue Reading →

பவதாரணியின் பாரதி கலைக்கோயிலின் நட்சத்திர இரவு – 2011

கடந்த 29-10-2011, சனிக்கிழமை,  ரொறன்ரோ 50, ஜாவேயிஸ் டிரைவில் உள்ள கலையரங்கில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் பெருமையுடன் வழங்கிய நட்சத்திர இரவு - 2011 இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்இந்தியா, இலங்கை போன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, கனடாவில் 24 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்து, பிரபல திரை உலக இசை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், மற்றும் இசை ஆர்வலர்கள் பலரின் பாராட்டையும், அபிமானத்தையும் பெற்று வெற்றி நடை போடும் பவதாரணியின் பாரதி கலைக் கோயில் இசைக் கலைஞர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து நடத்திய நட்சத்திர இரவு, இனிமை, புதுமை, குதூகலம் அனைத்தும் ஒன்றுகூடிய இசை நிகழ்ச்சியாக இசை ஆர்வரர்கள் பலராலும் பாராட்டத்தக்க வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 29-10-2011, சனிக்கிழமை,  ரொறன்ரோ 50, ஜாவேயிஸ் டிரைவில் உள்ள கலையரங்கில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் பெருமையுடன் வழங்கிய நட்சத்திர இரவு – 2011 இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்இந்தியா, இலங்கை போன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, கனடாவில் 24 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்து, பிரபல திரை உலக இசை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், மற்றும் இசை ஆர்வலர்கள் பலரின் பாராட்டையும், அபிமானத்தையும் பெற்று வெற்றி நடை போடும் பவதாரணியின் பாரதி கலைக் கோயில் இசைக் கலைஞர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து நடத்திய நட்சத்திர இரவு, இனிமை, புதுமை, குதூகலம் அனைத்தும் ஒன்றுகூடிய இசை நிகழ்ச்சியாக இசை ஆர்வரர்கள் பலராலும் பாராட்டத்தக்க வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Continue Reading →