எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ‘பதிவுக’ளில் அவ்வப்போது எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளில் சில!

திரைப்படம்: அமெரிக்க பூதமும்,  கம்யூனிச பிணமும்! – சுப்ரபாரதிமணியன் – 
 
சுப்ரபாரதிமணியன்[எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ‘பதிவுக’ளில் அவ்வப்போது எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளில் சில ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. – பதிவுகள்] போலந்து திரைப்படம் ஒன்று . ஸ்டாலின் காலம் பற்றினதில் கம்ய்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு சிறுவன் ஒரு படத்தை பாதுகாத்து வருகிறான். அவனை வேறொரு   கம்யூனுக்கு மாற்றுகிறார்கள். கம்யூன் தலைவன்  கெடுபிடியான ஆசாமி. குரூரமானவன். சிறுவன் வேறொரு கம்யூனுக்குப் போவதற்காக் தனது பொருட்களை தேடி எடுத்து அவசர கதியில் புறப்படுகிறான். அவன் பாதுகாத்து வைத்திருந்த படம் எதெச்சையாய் கீழே விழுகிறது.  கம்யூன் தலைவன் கால் ப்ட்டு கிழிகிறது. கம்யூன் தலைவன் கேட்கிறான். ” யார் இந்த வயதானவன் ” பையன்  அதிர்ந்து போய் சொல்கிறான்.  ” லெனின்” லெனின் படம் கிழிவுறுவது அவனை வெகுவாக பாதிக்கிறது.  கம்யூனிசத்தில்  அக்கறை கொண்ட அய்ம்பது வயது பெண் ஒருத்தி இதே போல் லெனின் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைவதை “குட்பை லெனின் ” என்ற செர்மன் படத்தில் பார்க்கலாம். ” லெனின் பிறப்பு ரஸ்யாவிற்கு ஏற்ப்பட்ட  துர்பாக்கியம்.  அந்த நாட்டின் அடுத்த துர்பாக்கியம் அவர் மரணம் ” என்று சர்சில் எழுதினாராம். ஸ்டாலின்  ஆட்சியின் கொடுமைகள் சர்ச்சிலின் கருத்திற்கு முன்னுரையாக இருந்திருக்கிறது.

Continue Reading →

முல்லைப்பெரியாறு அணை (கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து..)

முல்லை பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்.முல்லைப்பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட ஆணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசயப்பணிகளுக்கு பயன்படுத்திகொள்ளும் பொருட்டு ‘பெரியார் திட்டத்தின்’ கீழ் அப்போதை மெட்ராஸ் மகாநாதிற்கும் திருவிதாங்கூர் மகாராஜவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

Continue Reading →

நடிகை செளகார் ஜானகிக்கு வயது எண்பது!

செளகார் ஜானகிபழம்பெரும் நடிகையான செளகார் ஜானகிக்கு 12.12.2011 அன்று வயது எண்பது. சிறந்ததொரு குணசித்திர நடிகையாக விளங்கிய செளகார் ஜானகி அமைதியாகச் சாதனைகள் பலவற்றைப் புரிந்துவிட்டிருக்கின்றார். தற்போது பெங்களூரில் வசித்துவரும் செளகார் ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 385 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பது பிரமிப்பைத் தருகின்றது. இது தவிர 300 தடவைகள் மேடையேறியுமிருக்கின்றார். சிறுவயதிலிருந்தே செளகார் ஜானகி அவர்கள் கலையுலகில் நுழைந்து விட்டார். தனது 11 வயதில் தெலுங்கு வானொலிக் கலைஞராக விளங்கிய ‘செளகார் ஜானகி’  மூன்று மாதக் கைக்குழந்தையுடன் விளங்கிய தாயாகத் திரையுலகில் காலடியெடுத்து வைத்துச் சாதனைகள் படைத்தார். நாகிரெட்டியாரின் விஜயா கம்பைன்ஸ்ஸாரினால் தயாரிக்கப்பட்ட செளகார் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ‘செளகார் ஜானகி’ என்று அழைக்கப்படத் தொடங்கினார்.  அப்படத்தில் அவர் என்.டி.ராமராவுடன் நடித்திருப்பார்.  அவரது முதல் படமான ‘செளகார்’ படத்திற்காக அவர் பெற்ற வருமானம் ரூபா 2500 மட்டுமே.

Continue Reading →