அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.
[*பதிவுகள் இதழில் ஏற்கனவே பிரசுரமான குறிப்பு] மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல். அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன. கூத்தாடியென்றார்கள். மலையாளியென்றார்கள் . ஆரம்பகாலத்தில் எத்தனையோ பல வருடங்கள் சென்னையில் அவரது கால்களே படாத இடமில்லை என்னுமளவுக்கு அலைந்து திரிய வைத்தது காலம். தயாரிப்பாளர்களெல்லாரும் அவரை ஆரம்பத்தில் பல்வேறு வழிகளில் ஏளனம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் உடலைப் பதம் பார்த்தன. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் கொஞ்சமல்ல. இளமையில் வறுமை அவரை வாட்டியது. துயரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அவரை ஆட்கொண்டன. முதல் மனைவி வறுமை காரணமாகக் கேரளாவில் இறந்த பொழுது அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள வழக்கப்படி மனைவியின் இறுதிக் கிரியைகள் முடிந்து விட்டன. வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து இருபதாண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே”
இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் . கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல. மணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல். ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை ? .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள் பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
[எழுத்தாளர் சு.வெங்கடேசனின் நாவலான ‘காவல் கோட்ட’த்திற்கு 2011ற்கான ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்துள்ளது. இதனையொட்டி ‘காவல் கோட்டம்’ நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிய நீண்ட விமர்சனத்தின் முதற்பகுதி ஒரு பதிவுக்காக நன்றியுடன் மீள்பிரசுரமாகிறது. – பதிவுகள்] வரலாற்றுப் புனைக்கதை என்றால் என்ன என்பதை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன். வரலாறு என்பது ஒரு மாபெரும் மொழிபு (Narration) அந்த மொழிபு தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டமாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. அத்தனை மனிதர்களையும் அவர்களுக்குப் பொதுவானதாக இருக்கக்கூடிய ஒரு தர்க்க அமைப்பு உள்ளது. அந்தத் தர்க்க அமைப்பின் விதிகளின்படியே வரலாற்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன. வரலாற்று உண்மைகள் பொய்ப்பிக்கவும் படுகின்றன.
நாள்: டிசம்பர் 30, வெள்ளிகிழமை, 2011 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)
இடம்: திம்பம் & தெங்கு மரகடா
கட்டணம்: 2200/-
வணக்கம் நண்பர்களே, புது ஆண்டுக் கொண்டாட்டங்களில் நம்பிக்கை இல்லை என்பதாலும், ஆண்டின் எல்லா இரவுகளின் அமைதியையும் அந்த ஒரே நாள் இரவில் அதகளப்படுத்தும் மனிதர்களின் பேராற்றல் கண்டு நடுங்குவதைவிட, கடுங்குளிரில், வனவிலங்குகளைக் கண்டு அந்த அடர்த்தியான இரவில் நாம் நடுங்கிப் போவதே மேல். ஆதாலால் தமிழ் ஸ்டுடியோவின் நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி, வெள்ளிகிழமை இரவு தமிழகத்தின் மிக அடர்த்தியான வனப்பகுதியான சத்தியமங்கலத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திம்பம், மற்றும் தெங்கு மரகடா பகுதிகளில் தொடங்கவிருக்கிறது.
கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.
தமிழக முதல்வரும் அ இஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் எவரும் அவர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவேண்டாமென்றும் ஜெயலலிதா பெயரில் வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, அதிமுக ஆனால் ஏனிந்த நடவடிக்கை என்பது பற்றி அவ்வறிக்கையில் விளக்கமில்லை. வழக்கமாக நீக்கப்படும்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும். ஆனால் அது கூட இப்போது இல்லை.
-1-
டிஸ்கோ பண்டா, பேர்ளின் சுரங்கவண்டி நிலைய வாங்கொன்றில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் நிறை வெறியில் சில்வா! டிஸ்கோ பண்டாவின் வாயிலிருந்தும் அல்ககோல் நெடி வீசியது. அவன் போதையில் தடுமாறவில்லை. நிதானமாகவே புகையை உள்ளுக்கு இளுத்து வளையம் வளையமாக வெளியே ஊதிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரதும் வாழ்க்கை தடம்மாறி, தள்ளாட்டத்துடன் உருண்டு கொண்டிருப்பதை அவர்களுடைய தோற்றங்கள் வெளிப்படுத்தின. இருவரும் ஒரு காலத்தில் என்னுடன் படித்த கலாசாலை மாணவர்கள். ஜேர்மனியில் படித்த காலத்திலே டிஸ்கோ பண்டா எனக்கு அறிமுகமானான். ஜேர்மனி, கிழக்கும் மேற்குமாக இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்த காலத்தில் இது நடந்தது. பண்டா அப்போது கிழக்கு ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். இடையில் ஒரு வரலாற்றுக் குறிப்பு! 1949 ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி தொடக்கம், 1989 நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிவரை நாலு தசாப்தங்கள் ஜேர்மனியின் கிழக்குப்பகுதி, கம்யூனிச ஆட்சியின்கீழ், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயருடன் விளங்கிற்று. அந்தக் காலங்களில், வளர்முக நாடுகளிலுள்ள கம்யூனிசக் கட்சிகள,; தங்கள் ஆதரவாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசுகள் வழங்கி கம்யூனிச நாடுகளுக்கு அனுப்பிவைத்தன.
9-ம் அத்தியாயம் அதிகார் அம்பலவாணர்
[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]
காதலுக்கு இருக்கும் புதுமையான பண்புகளில் ஒன்று, அது ஆண்களைப் பெண்மை நிறைந்தவர்களாகவும், பெண்களை ஆண்மை நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிடுவது தான். காதலின் வயப்பட்ட ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் சிறு விஷயங்களைப் பற்றிக் கூட அதிகமாக எண்ணி எண்ணிக் கலங்குபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். பெண்களோ காதலின் உச்சத்திலே சத்தியவானை நேசித்த சாவித்திரியைப் போல் எமனையும் எதிர்த்துப் போராடத் துணிந்து விடுகிறார்கள். கல்கிசை என்னும் இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற மவுண்ட் லவீனியாக் கடற்கரையில்லே தன் காதற்கிளி பத்மாவைப் படமாக வரைய விரும்பிய ஸ்ரீதர் அடுத்த நாள் முழுவதும் அது பற்றிச் சிந்தப்பதிலேயே செலவிட்டான். அவளை எப்படி உட்கார வைக்க வேண்டும், என்ன உடையை அணியச் செய்ய வேண்டும்.