பழம்பெரும் நடிகையான செளகார் ஜானகிக்கு 12.12.2011 அன்று வயது எண்பது. சிறந்ததொரு குணசித்திர நடிகையாக விளங்கிய செளகார் ஜானகி அமைதியாகச் சாதனைகள் பலவற்றைப் புரிந்துவிட்டிருக்கின்றார். தற்போது பெங்களூரில் வசித்துவரும் செளகார் ஜானகி இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 385 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார் என்பது பிரமிப்பைத் தருகின்றது. இது தவிர 300 தடவைகள் மேடையேறியுமிருக்கின்றார். சிறுவயதிலிருந்தே செளகார் ஜானகி அவர்கள் கலையுலகில் நுழைந்து விட்டார். தனது 11 வயதில் தெலுங்கு வானொலிக் கலைஞராக விளங்கிய ‘செளகார் ஜானகி’ மூன்று மாதக் கைக்குழந்தையுடன் விளங்கிய தாயாகத் திரையுலகில் காலடியெடுத்து வைத்துச் சாதனைகள் படைத்தார். நாகிரெட்டியாரின் விஜயா கம்பைன்ஸ்ஸாரினால் தயாரிக்கப்பட்ட செளகார் என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ‘செளகார் ஜானகி’ என்று அழைக்கப்படத் தொடங்கினார். அப்படத்தில் அவர் என்.டி.ராமராவுடன் நடித்திருப்பார். அவரது முதல் படமான ‘செளகார்’ படத்திற்காக அவர் பெற்ற வருமானம் ரூபா 2500 மட்டுமே.
மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் டிசம்பர் 11. தனது குறுகிய காலத்து வாழ்வில் அவரது சாதனைகள் வியப்பைத் தருவன. தான் வாழ்ந்த காலகட்டத்துச் சூழலை மீறிச் சிந்தித்த கவிஞன் அவன். ‘தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச் செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீயபக்தி யியற்கையும் வாய்ந்தி’டாத கவிஞனவன். தன் அறிவு கொண்டு , தனக்குச் சரியென்று பட்டதை உரைத்திடத் தயங்காதவன் அவன். தான் வாழந்த சமுதாயத்தைப் பற்றி, அச்சமுதாயத்தில் நிலவிய சீர்கேடுகளைப் பற்றி, அந்நியர் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த தன் பிறந்த மண் பற்றி, அதன் விடுதலை பற்றி, பெண் விடுதலை பற்றி, வர்க்க விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மானுட இருப்பைப் பற்றி, சக உயிர்களைப் பற்றியெல்லாம் சிந்தித்துப் பாடிய, எழுதிய படைப்பாளி அவன். பணத்தை மட்டுமே வைத்து எடைபோடும் இந்த மானுட சமுதாயம், அவன் வாழ்ந்த காலத்தில், வாழத் தெரியாதவனென்றெல்லாம் அவனை எள்ளி நகையாடியது. ஆனால் இன்று .. அதே மானுட சமுதாயம் அவனைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. மாகவி பாரதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ‘பதிவுகள்’ அவனது கவிதைகள் சிலவற்றை மீள்பிரசுரம் செய்கிறது.
நாள்: 18.12.2011 ஞாயிற்றுக்கிழமைநேரம்: காலை மணி 9:30 – மாலை மணி 6:30இடம்: ‘சிந்தா சாயாங் ரிசோர்ட்’ (Cinta Sayang Resort) மேலதிக விபரங்கள் … உள்ளே
குறும்பட வட்டம் – பகுதி இரண்டு.
நாள்: 10-12-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
பேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11. எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இன்று ,85 வயதினைக் கடந்த நிலையிலும், உற்சாகம் குறையாமல் இலக்கியப் பணியாற்றும் அவரது விடா முயற்சியும், சுறுசுறுப்பும் அனைவரையும் வியப்படைய வைப்பன. தீண்டாமைக் கொடுமைக்கெதிராக அடங்கி, ஒடுங்கிச் சோர்ந்து விடாமல், அதன் நச்சுக்கரங்களின் தீண்டுதல்களைக் கண்டு அஞ்சி விடாமல், அத்தீண்டுதல்களையெல்லாம் சவால்களாக ஏற்றுக்கொண்டு, இத்தனை வருடங்களாக ‘மல்லிகை’ என்னும் மாத இதழினைக் கொண்டு வரும் அவரது ஆற்றல் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடும். ‘மல்லிகை’யையும் ஜீவாவையும் பிரிக்க முடியாது. ‘மல்லிகை ஜீவா’ என்று அழைக்கப்படுவது அவரது இலக்கியப் பங்களிப்பினை நன்கு புலப்படுத்தும். ‘மல்லிகை’ சஞ்சிகை பல இளம் எழுத்தாளர்களுக்குக் கை கொடுத்திருக்கின்றது; இன்றும் அவ்விதமே ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களை, ஆர்வலர்களை, புரவலர்களை அட்டைப்பட நாயகர்களாக்கிப் பெருமைப்பட்டிருக்கின்றது.
ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக அந்தந்த சூழல்களில் எதிர்ப்படாத பரிச்சயங்களையும் கூட முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று தான் சொல்ல வேண்டும். ஹிராகுட்டுக்கு வந்த முதல் வருடம் 1950-ல் புத்தகம் வாங்க என்றால் பக்கத்தில் 10 மைல் தூரத்தில் இருக்கும் ஜில்லா தலைநகரமாகிய சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போகும் போது அங்குள்ள கடைத் தெருவுக்கும் போய் அங்குள்ள ஒரே ஒரு சின்ன கடையையும் எட்டிப் பார்த்து வருவேன்.
காலம் மனித நேயம் மிக்க ஒருவரை மீண்டும் நாம் நினைக்க வைத்துள்ளது. வர்க்கம் சார்ந்து, சாதிய முறைமைகளை எதிர்த்தபடி தனது கற்பனைத் திறத்தால் நம்மையெல்லாம் ஆட்கொண்டவர்தான் அகஸ்தியர். 29/08/1926இல் சவரிமுத்து-அன்னம்மா தம்பதியர்க்கு மகனாக ஆனைக்கோட்டையில் பிறந்தவர். அந்தக் காலத்து எஸ்.எஸ்.சி சாதாரண தரம் வரை கல்வி கற்றிருந்தாலும் அவர் வளர்த்துக்கொண்ட தமிழ் அறிவு அவரை நல்லதொரு படைப்பாளியாக நமக்குத் தந்திருக்கிறது.தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஆற்றல் வாய்ந்தவராகவே தன்னை வளர்த்துக் கொண்டார். எழுத்தாற்றலால் தன்னை வளர்த்துக்கொண்டாலும் பலராலும் நேசிக்கப்பட்ட அதே வேளை சிலரால் இருட்டடிப்புக்குள்ளாக்கவும் பட்டதனால் இவரின் எழுத்துக்களை கண்டும் காணாது விட்டதும் பலரின் பார்வைக்குத் தெரியாமல் போய்விட்டார்; பலரிடம் இவர் படைப்புகள் சென்று சேர முடியாது போனது. ஆனாலும் பார்வைக்குக் கிடைத்தவைகள் காத்திரமானதான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.
ஈழத்தின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 16 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (29. 08.1926 – 08.12.1995) பாரீஸ் தமிழர் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் வளர்ச்சிப் பணியில் நாம் அதிக அக்கறை கொண்டிருந்த காலங்களில், எமது கல்வி நிறுவனத்தோடு அதிக அக்கறை கொண்டவராக அறிமுகமானவரே திரு.எஸ்.அகஸ்தியர் அவர்கள். ஆரம்பகால ஆண்டுவிழா, மலர் வெளியீட்டுகளிலும் ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து எமது வளர்ச்சிப் பாதையில் துணை நின்றார். மனித நேயத்தை நேசித்து அதற்காக வாழ்ந்து மறைந்துவிட்ட ஒரு இலக்கியவாதியின் காலத்தில் அவரது புலம்பெயர் வாழ்வில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை இங்கு பெருமையோடு நினைவுகூர்ந்து மதிப்பளிக்கு முகமாகவே அவரைப்பற்றிய நிகழ்வுகளைத் தருகின்றேன்.