(3) – சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -சொல்லாமல் கொள்ளாமல் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் தான் போனேன்.  இருந்தாலும், போனபோது செல்லப்பா வீட்டில் இருந்தார் சந்தோஷமாக இருந்தது. அப்போதெல்லாம் அந்த மாதிரி முன்னாலேயே சொல்லி நேரம் குறித்து வாங்கிக்கொண்டு போவது எனபது தெரியாத காலம். அத்தோடு அவர் இருந்தது மட்டுமல்லாமல் அங்கேயே நான் போன தருணத்தில் இலங்கையிலிருந்து சிவராமூவும் அங்கு இருக்க நேர்ந்தது, என்ன சொல்ல.. எல்லாம் நேர்ந்து கொள்கிறதே. தருமு சிவராமுவின் கவிதைகளும் சொல்லும் நடையும் போன்ற தமிழ்மொழி, உரை நடை பற்றிய எழுத்துவில் வந்த கட்டுரைகளும் ஒரு புதிய குரலை, ஆளுமையின் தோற்றத்தைச் சொல்லின.  என் பாராட்டைச் சொன்னேன் சிவராமுவிடம். ”எதிர்பாராத ஒரு ஆச்சரியம் தரும் சந்திப்பு (a very pleasant surprise!) இல்லையா> என்றேன். சிவராமுவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. பேசிக் கொண்டி ருந்தோம். என்ன என்று இப்போது நினவிலில்லை. அப்போது எழுத்து வர ஆரம்பித்து இரண்டு வருஷங்கள் முடிந்து இருக்கும். செல்லப்பாவின் வாடிவாசல் ஒரு சிறு புத்தகமாக, எழுத்துச் சந்தாதாரர்களுக்கு அன்பளிப்பாகவும், எழுத்து பத்திரிகையில் ஜீவனாம்சம் என்று அவரது புதிய நாவல் தொடராகவும் வெளிவந்து இருந்தது. கணவன் இறந்ததும் இனி தன் வாழ்க்கை ஆதரவற்ற கணவனின் பெற்றோருடன் தான் என்று தீர்மானித்து தன் அன்ணா ஜீவனாம்சத்துக்காகத் தொடர்ந்த வழக்கை உதறு, கணவன் மறைவுக்குப் பிறகும், அண்ணா சொல்லையும் மீறி, கணவனின் பெற்றோர்களுக்கு உதவியாக அவர்க்ளுடன் இருக்க முடிவு செய்கிறாள். மிகவும் வித்தியாசமான வாழ்நெறி.  வாடிவாசல் மதுரை மாவட்டத்தில் காணும் ஜல்லிக்கட்டு என்ற ஒரு வீர விளையாட்டை ஆயுதமின்றி காளையை அடக்குவது ஒரு அறம், மரபு, விளையாட்டு. தேவர் வகுப்பினரின் விளையாட்டு. இரண்டும் ஒரு ஆவணம் என்றே கூடச் சொல்லப்படத் தகுந்த பதிவு. படைப்பு. இரண்டும் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை அறங்களைச் சொல்லும் வித்தியாசமான நடையில். இவை இரண்டும் செல்லப்பாவை நாவலாசிரியராகவும் ஒரு புதிய அறிமுகத்தைத் தந்திருந்தன.

Continue Reading →

‘டொராண்டோ’வில் நூல் வெளியீடு: ராஜிவ் படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம்!

'டொராண்டோ'வில் நூல் வெளியீடு: ராஜிவ்  படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம்!

ராஜீவ்  படுகொலை- தூக்குக் கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் எதிர்வரும் பெப்ருவரி 16, 2013 அன்று மாலை 2.30 மணிக்கு ‘ஸ்காப்ரபரோ சிவிக் சென்டர்’இல் நடைபெறவுள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழக ஆதரவில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:

Continue Reading →

நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்

நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை தலைப்புகளுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. தமிழ்மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும், பிறமொழிக் கலப்பின்றி புதுச் சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

Continue Reading →

திருஞானசம்பந்தர் தேவாரம் – திருக்கடைக்காப்பு

திருஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன.  திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார்.  அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh,  இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும்.  சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை.  ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது.  இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர்  தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார்.  சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார்.  அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

திருக்கடைக் காப்பு:
பத்து பத்து பாடல்களால் பாடப்பெறுவது தான் பதிகம் என்று  பெயர் பெறும், சமய இலக்கியங்களில் காரைக்காலம்மையார் இம்முறையைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்;கள் இதற்குச் சான்றாகும்.  திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன.  புதினொன்றாவதாக உள்ள பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்று பெயர்.  இதைப் பதிகப் பயன் என்றும் கூறுவர்.  தம்முடைய பதிகங்களை ஓதுவதால் வரும் நன்மைகளை திருக்கடைக்காப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (1)

முன்னுரை

நோயல் நடேசன்கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம்.  இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது கவிதைகள், சிறுகதைகள் என தீர்க்கமான இடம் உள்ளது. எந்தக் கவிதையையும் கவிதை இல்லை அல்லது சிறுகதை இல்லை எனச் சொல்லப்படுவது கிடையாது. நாவல்களில் இது நாவலே கிடையாது எனத் துணிந்து சொல்லப்படுகிறது. க. நா.சுப்பிரமணியம் நான் அக்காலத்தில் வாசித்த கல்கி, அகிலனது நாவல்களை எல்லாம் நாவல் இல்லை என்று சொன்னார். அதன் பின்பு அதை ஜெயமோகன் போன்றவர்கள் வழி மொழிந்தார்கள். இதே போல் நான் சிறந்தது என நினைத்தவற்றை பலர் இது நாவல் இல்லை எனச் சொன்னார்கள். சமீபத்தில் எஸ். ராமகிருஸ்ணன் வெங்கடேசனின் காவற்கோட்டையைக் குதறினார். இப்படியான வாதப்பிரதிவாதங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இலங்கையைச் சேர்ந்தவர்களிடமும் உள்ளது. விமல் குழந்தைவேலின் கசகரணம் கிழக்கு மாணத்தில் இருந்து வந்த நாவல். அதை வெளி வந்த சில காலங்களிலே சோபாசக்தி தகவல் தொகுப்பு என்றார். நான் எழுதிய வண்ணாத்திக்குளம், உன்னையே மையல் கொண்டு இரண்டையும் மேலோட்டமான எழுத்துகள் என மெல்பேனில் ஒருவர் கூறினார். கனடாவில் ஒரு பெண்மணி அதன் அறிமுக நாளிலே  தட்டையான எழுத்துகள் என வர்ணித்தார்.

Continue Reading →