தமிழ் ஸ்டுடியோ.காம்: ஆஸ்கர் பரிந்துரைத்த திரைப்படங்கள் திரையிடல் – நிகழ்ச்சி நிரல்.

தமிழ் ஸ்டுடியோ.காம்: ஆஸ்கர் பரிந்துரைத் திரைப்படங்கள் திரையிடல் - நிகழ்ச்சி நிரல்.

நாள்: 8, 9, 10, 11, 12 பிப்ரவரி – 2013
இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி.
நேரம்: காலை 10 மணி முதல்.

Continue Reading →

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்:

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்:தமயந்திபெரும்பாலும் வெகுஜனஇதழ்களிலும், கொஞ்சம் இலக்கிய இதழ்களிலும் படித்த தமயந்தியின் சிறுகதைகள் அவரின் பிறப்பு, ஜாதி சார்ந்த அடையாளங்களைக் காட்டியதில்லை. அவரின் நாவல்” நிழலிரவு” படிக்க ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவ சமூகம் சார்ந்த அவரின் அனுபவங்கள் அவரின் பெயர், கிறிஸ்துவ சமூகம் பற்றிய எண்ணங்கள் அவரின் இன்னொரு முகமாய் வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் கிறிஸ்துவ இலக்கியம் பற்றிய யோசிப்பில் எழுத்தாளர் பட்டியல் விடுபட்டுப்போகிறது. சிஎல்எஸ், பூக்கூடை எண்பதுகளில் நடத்திய இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் ஞாபகம் வந்தது.நண்பர் வட்டம் பத்திரிகை சரோஜினி பாக்கியமுத்து மறைந்து போனார். ”அரும்பு  “ சிறுவர் இதழாகவே நின்று விட்டது. அதன் இலக்கிய தரம் அவ்வப்போது அதன் ஆசிரியராய் அமர்த்தப்படும் பாதிரியார்களின் இலக்கிய அக்கறை சார்ந்தே வெளிப்பட்டிருக்கிறது, “கோணல்கள்” தொகுப்பின் பாதிப்பில் நாங்கள் வெளியிட்ட “நாலு பேரும் பதினைந்து கதைகளும்” தொகுப்பில் இடம்பெற்ற கார்த்திகா ராஜ்குமார் அப்போதைய ஸ்டார் எழுத்தாளர். இப்போது  கிறிஸ்துவ மத போதக விசயங்களை சின்னத்திரையில் பரப்புகிறவராகி விட்டார், காஞ்சிபுரம் எக்ஸ்பர்ட் சச்சிதானந்தமும் எழுதுவதில்லை. தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்களின் ஜாதீய சிக்கல்களை பாமா, ராஜ்கவுதமன், ஆர். எஸ்.ஜேக்கப் கொஞ்சம் எழுதியிருக்கிறார்கள். பத்தாண்டுகளில் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை தமிழில் குறிப்பிட்த்தக்கதாய் சொல்லப்பட்டது போல் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை முன் வைக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ இதழ்கள். சிலது விடுதலை இறையியலைப்  பேசுகின்றன. அவற்றில் இலக்கியப் பதிவுகள் ரொம்பக்கம்மி.

Continue Reading →

இலண்டன்: ‘காலம்’ சஞ்சிகை (கனடா) 40வது இதழ் அறிமுகமும், கலந்துரையாடலும்!

9 பெப்ருவரி 2013: 'காலம்' சஞ்சிகை (கனடா)  40வது இதழ் அறிமுகமும், கலந்துரையாடலும்!

9 பெப்ருவரி 2013: ‘காலம்’ சஞ்சிகை (கனடா)  40வது இதழ் அறிமுகமும், கலந்துரையாடலும்!
இடம்: Trinity Centre, East Avenue, Eastham, London

Continue Reading →

தமிழகத்திலிருந்து: நம்மைக் கொல்லும் தீண்டாமை!!

தருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை வலியுறுத்தினான் பாரதி. அந்த எட்டயபுரத்தானின் நெஞ்சில் நெருப்பு கொட்டியிருக்கிறார்கள் தருமபுரி சாதிவெறியர்கள். தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் குடியிருப்பு. இந்த ஊர் இளவரசனுக்கும் பக்கத்து ஊரான செல்லங்கொட்டாய் ஊரைச் சேர்ந்த திவ்யாவிற்கும் காதல். திவ்யா வன்னிய சமூகம். இளவரசன் ஆதிதிராவிடர். திவ்யாவின் பெற்றோர் இவர்களின் காதலை விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பை மீறி இருவரும் அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். குடும்பங்களுக்குள் சண்டை, இரண்டு ஊரின் சண்டையானது. இரண்டு ஊரின் சண்டை சாதியச் சண்டையானது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இருவரையும் பிரிக்க முடியவில்லை. தருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை வலியுறுத்தினான் பாரதி. அந்த எட்டயபுரத்தானின் நெஞ்சில் நெருப்பு கொட்டியிருக்கிறார்கள் தருமபுரி சாதிவெறியர்கள். தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் குடியிருப்பு. இந்த ஊர் இளவரசனுக்கும் பக்கத்து ஊரான செல்லங்கொட்டாய் ஊரைச் சேர்ந்த திவ்யாவிற்கும் காதல். திவ்யா வன்னிய சமூகம். இளவரசன் ஆதிதிராவிடர். திவ்யாவின் பெற்றோர் இவர்களின் காதலை விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பை மீறி இருவரும் அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். குடும்பங்களுக்குள் சண்டை, இரண்டு ஊரின் சண்டையானது. இரண்டு ஊரின் சண்டை சாதியச் சண்டையானது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.

Continue Reading →