இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் – 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஸோன் என்கிற ஆவணப்படம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்யூசன் க்ளப்-ல் இன்று…
முகநூலில் சண்முகலிங்கம் அவர்கள் ஆஸ்பத்திரியில் இருப்பதாக அறிந்தேன். அவரின் மறைவு பற்றிய விடயத்தையும் பின்னர் முகநூல் மூலம் அறிந்தேன். உண்மையிலேயே துயரமாகவிருந்தது. நல்லதொரு மனிதர். தன்னைப்பற்றி தம்பட்டம் அடிக்காத,அமைதியாகத் தன் பங்களிப்பினை வழங்கியவர். தோழர் பொன்னம்பலம் சண்முகலிங்கம் அவர்களைச் சந்தித்து நீண்ட நாட்களாகி விட்டன. நான் நினைத்தேன் அவர் இன்னுமொரு நகருக்குச் சென்று விட்டதாக. ‘காந்தியம்’ அமைப்புடன் பணியாற்றியவர். அதன் காரணமாகச் சிறைவாசமும் அனுபவித்தவர். அவரைச் சந்திக்கும் நேரங்களிலெல்லாம் அவரது அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரும்படி கூறுவதுண்டு. அதற்கவர் சிரித்துக்கொண்டு ‘ஓம்! ஓம்’ என்று தலையாட்டுவார். அவரைச் சந்திக்காமலிருந்தாலும் அவர் பற்றி அவ்வப்போது நினைப்பதுண்டு. ஒரு நாளாவது அவரைப் புன்னகை தவழாத முகத்துடன் பார்த்தது கிடையாது. அவரது மறைவால் துயருறும் நண்பர்கள், உறவினர்களுடன் நானும் தனிப்பட்டரீதியிலும், ‘பதிவுகள்’ இணைய இதழ் சார்பிலும் கலந்துகொள்கின்றேன். அவரது இறுதிச் சடங்குகள் பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:
கணையாழி விருது விழா அழைப்பிதழ்
சங்கத்தலைவர் திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் எதிர்வரும், 24.2.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 வரையில் ஷா ஆலாம்,செக்ஷன்7, மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மைதானத்திலும்,…
குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்……
இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா ‘எயார் லைன்ஸ்’ எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.
குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்……
[வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் இந்த வருட இறுதிக்குள் தமிழகத்தில் வெளிவரவுள்ளது. அதனையொட்டி இக்கட்டுரை, ஓர் அறிமுகத்துக்காகப் பிரசுரமாகின்றது. – பதிவுகள்-] இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா ‘எயார் லைன்ஸ்’ எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.