விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.
சிவா சுந்தரம்பிள்ளை அவசரமாக எடுத்த முடிவின் விளைவாக ஆறு மாதங்கள் வேலையற்று நிற்க வேண்டி இருந்தது. அந்தக் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பல இடங்கைளை பல மனிதர்களைப் பார்த்து பழகிய நாட்கள். அந்த ஆறுமாத காலத்தில் விக்ரோரியாவில் பல இடங்களில் இரு நாட்கள் , ஒரு கிழமை என விடுப்பு எடுக்கும் மிருகவைத்தியர்களுக்குப் பதிலாக வேலை செய்தான். அறிமுகமற்ற சிறு நகரங்கள் மற்றும் மெல்பன் புறநகர்ப் பிரதேசங்கள் என சில இடங்களில் வேலை செய்யும்போது அந்தப் புதிய இடங்களும் , புதிய மனிதர்களும் திரில் அனுபவமாக இருந்தாலும் மனதில் நிரந்தர வேலை இல்லையே என்ற அழுத்தம் பனை ஓலைப் பையில் சரசரக்கும் உயிர் நண்டு போல் எப்போதும் குடைந்து கொண்டிருக்கும். விக்ரோரியாவில் பக்கஸ்மாஸ் மெல்பேனில் இருந்து நுாறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அதிகமாக பால் மாட்டுப்பண்ணைகள் உள்ள பிரதேசமாகும். சிவா சுந்தரம்பிள்ளை வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்ற போது அங்கு ஏற்பட்ட அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாதது மடடுமல்ல. வாழ்வையே வேறு பாதையில் திருப்பியது. சிறிய சம்பவங்கள் நெருப்புப்பொறி போன்று பெரிய காட்டை அழிக்க கூடியவை. சுந்தரம்பிள்ளையின் எதிர்காலத்தை புதிதாக மீண்டும் புதிதாக வார்பதில் பக்கஸமாஸ் வைத்தியரும் அங்கு நடந்த நேர்முகமும் பங்காற்றியது.
“நான் தமிழ்நாட்டில் இருந்த காலப் பகுதியில்தான் இராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையை ஈழத் தமிழர்கள் செய்தார்கள் என்பதை ஏற்க மறுக்கிறேன். திரு பழ. நெடுமாறன் கூறுவதைப் போல இந்தக் கொலையைச் செய்தவர்கள் நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். நீதி, நேர்மை முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்டன. இராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப் பட்ட விதமும் தண்டனை வழங்கப்பட்ட விதமும் பல அய்யங்களை எழுப்புகின்றன. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். எஞ்சிய 13 பேர் ஈழத்தமிழர்கள். சரி சமமான எண்ணிக்கை என்பது தற்செயலான செயல் அல்ல. ஆழமான உள்நோக்குடன் செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ் தேசிய உணர்வை சிதைப்பதற்காக இந்த சதி வகுக்கப்பட்டு சிபிஅய் என்ற புலனாய்வு அமைப்பு தனது புலன் விசாரணையை நடாத்தியது என நூலாசிரியர் திருச்சி வேலுசாமி சொல்லுகிறார்” என இராஜீவ் படுகொலை தூக்குக் கயிற்றில் நிஜம் என்ற நூல் பற்றி ஆய்வுரை ஆற்றிய முன்னாள் நா. உறுப்பினர் திரு மா.க. ஈழவேந்தன் குறிப்பிட்டார்.