நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்

நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை தலைப்புகளுக்கு ஆங்கில தலைப்பும் கொடுத்திருப்பது விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது. தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது என்பது மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். மேலும் அதற்கான இணைய தளங்களையும் அவ்வப்போது வரிசைப்படுத்தி வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. தமிழ்மொழி பிறமொழித் தாக்கமின்றி ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்ததையும், பிறமொழிக் கலப்பின்றி புதுச் சொல்லை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.

Continue Reading →

திருஞானசம்பந்தர் தேவாரம் – திருக்கடைக்காப்பு

திருஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன.  திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார்.  அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh,  இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும்.  சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை.  ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது.  இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர்  தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார்.  சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார்.  அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

திருக்கடைக் காப்பு:
பத்து பத்து பாடல்களால் பாடப்பெறுவது தான் பதிகம் என்று  பெயர் பெறும், சமய இலக்கியங்களில் காரைக்காலம்மையார் இம்முறையைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்;கள் இதற்குச் சான்றாகும்.  திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன.  புதினொன்றாவதாக உள்ள பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்று பெயர்.  இதைப் பதிகப் பயன் என்றும் கூறுவர்.  தம்முடைய பதிகங்களை ஓதுவதால் வரும் நன்மைகளை திருக்கடைக்காப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (1)

முன்னுரை

நோயல் நடேசன்கோழிகள் ஒன்றுடன் ஒன்று கொத்தி யார் இந்த கூட்டத்தில் முக்கியமானவர் என்பதை நிலைநாட்டும். அதை பெக்கிங் ஓடர் (Pecking Order) என்போம். ஆனால், உணவில் உப்புக் குறைந்த போது அவை ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்தும். அதை கனிபலிசம் (Cannibalism) என்போம்.  இரண்டும் வேறு வேறானவை தமிழ் இலக்கியப்பரப்பில் நாவல்களுக்கான வெளி கத்தாளைச் சாற்றைத் தடவியது போன்ற தரை. வழுக்கிக் கொண்டு செல்லக் கூடியது. சிறுகதை, கவிதை போன்றவற்றில் அந்தச் சிக்கல் இல்லை. கவிஞர்கள் சிறுகதையாளர் அல்லது கவிதைகள், சிறுகதைகள் என தீர்க்கமான இடம் உள்ளது. எந்தக் கவிதையையும் கவிதை இல்லை அல்லது சிறுகதை இல்லை எனச் சொல்லப்படுவது கிடையாது. நாவல்களில் இது நாவலே கிடையாது எனத் துணிந்து சொல்லப்படுகிறது. க. நா.சுப்பிரமணியம் நான் அக்காலத்தில் வாசித்த கல்கி, அகிலனது நாவல்களை எல்லாம் நாவல் இல்லை என்று சொன்னார். அதன் பின்பு அதை ஜெயமோகன் போன்றவர்கள் வழி மொழிந்தார்கள். இதே போல் நான் சிறந்தது என நினைத்தவற்றை பலர் இது நாவல் இல்லை எனச் சொன்னார்கள். சமீபத்தில் எஸ். ராமகிருஸ்ணன் வெங்கடேசனின் காவற்கோட்டையைக் குதறினார். இப்படியான வாதப்பிரதிவாதங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இலங்கையைச் சேர்ந்தவர்களிடமும் உள்ளது. விமல் குழந்தைவேலின் கசகரணம் கிழக்கு மாணத்தில் இருந்து வந்த நாவல். அதை வெளி வந்த சில காலங்களிலே சோபாசக்தி தகவல் தொகுப்பு என்றார். நான் எழுதிய வண்ணாத்திக்குளம், உன்னையே மையல் கொண்டு இரண்டையும் மேலோட்டமான எழுத்துகள் என மெல்பேனில் ஒருவர் கூறினார். கனடாவில் ஒரு பெண்மணி அதன் அறிமுக நாளிலே  தட்டையான எழுத்துகள் என வர்ணித்தார்.

Continue Reading →

நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) ஆசிரியர்: வ.ந.கிரிதரன்

[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து ‘அமெரிக்கா’ என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன ‘தாயகம்’ சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த…

தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு

தொல்காப்பியர்1.0. முகப்பு

தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்

 தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

The Hindu.Com: A perfect day for democracy

Arundhati Roy February 10, 2013 – Wasn’t it? Yesterday I mean. Spring announced itself in Delhi. The sun was out, and the Law took its Course. Just before breakfast, Afzal Guru, prime accused in the 2001 Parliament Attack was secretly hanged, and his body was interred in Tihar Jail. Was he buried next to Maqbool Butt? (The other Kashmiri who was hanged in Tihar in 1984. Kashmiris will mark that anniversary tomorrow.) Afzal’s wife and son were not informed. “The Authorities intimated the family through Speed Post and Registered Post,” the Home Secretary told the press, “the Director General of J&K Police has been told to check whether they got it or not.” No big deal, they’re only the family of a Kashmiri terrorist.

In a moment of rare unity the Nation, or at least its major political parties, the Congress, the BJP and the CPM came together as one (barring a few squabbles about ‘delay’ and ‘timing’) to celebrate the triumph of the Rule of Law. The Conscience of the Nation, which broadcasts live from TV studios these days, unleashed its collective intellect on us — the usual cocktail of papal passion and a delicate grip on facts. Even though the man was dead and gone, like cowards that hunt in packs, they seemed to need each other to keep their courage up. Perhaps because deep inside themselves they know that they all colluded to do something terribly wrong.

Continue Reading →

தலித் முரசு: “எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்” – அப்சல் குரு

முகமது அப்சல் குரு[இந்திய நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பெப்ருவரி 9, 2013 காலை 8 மணிக்கு தூக்கிலிடப்பட்டார். இவரது தூக்கு தண்டனையையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. அவரது கருணை மனுவை, இந்தியக்குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பெப்ருவரி 3 ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து, டெல்லி திஹார் சிறையில் அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனையொட்டி ஒரு பதிவுக்காக வெளிவரும்   மீள்பதிவுகளிவை.]

அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்’ செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா’ ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து…

Continue Reading →