[14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான ‘நானா’வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் ‘நானா’வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம் – பதிவுகள்]. உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. ‘பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!’ என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.
[அறிஞர் அ.ந.கந்தசாமி சுதந்திரன் பத்திரிகையில் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் சிலப்பதிகாரத்தை விமர்சிக்கும் இந்தக் கட்டுரையினை ஜுலை 8, 1951 அன்று வெளியான சுந்திரனில் எழுதினார். இந்தக் கட்டுரை மிகுந்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது. அவற்றையும் சுதந்திரன் பிரசுரித்திருந்தது. பின்னர் இவற்றுக்கெல்லாம் பண்டிதர் திருமலைராயர் பதிலளித்திருந்தார். ஒரு பதிவுக்காக பண்டிதர் திருமலைராயரின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். இக்கட்டுரைகள் தமிழகத்தில் பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டதாக அறிகின்றோம். இதுபற்றிய ஆதாரங்களைத் தமிழகத்திலுள்ளவர்கள் யாராவது அறிந்திருந்தால் அறியத்தரவும். எமது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com – பதிவுகள்-]