கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது எனலாம். உசனார் தொரை என்பவரிடம் வேலை செய்யும் ரகீம், தனது மகன் தஸ்லீமின் உயர்கல்விக்காக பணவுதவி கேட்கின்றார். தன்னிடம் தொழில்பார்க்கும் ஒருவனின் மகன், பட்டணத்தில் போய் உயர்படிப்பு படிப்பதா என்ற இளக்காரம் உசனார் தொரைக்கு. எனவே தஸ்லீமையும் வயலில் வேலைக்கமர்த்திக் கொண்டால் நல்லது என மனிதாபிமானம் கொஞ்சமுமின்றி ரகீமிடம் கூறுகின்றார். ரகீமுக்கு அவமானம் ஒரு புறம். ஆற்றாமை மறுபுறம். எனவே பேசாமல் வந்துவிடுகிறார்கள். அதையறிந்த தஸ்லீமின் தாய், தான் இத்தனைக்காலம் சேமித்து வந்த கொஞ்சப் பணத்தைக் கொடுத்தும், இடியப்பம் விற்றும் மகனை பட்டணம் அனுப்புகின்றனர். அங்கு சென்ற தஸ்லீமுக்கு நல்லதொரு நண்பன் கிடைக்கின்றான். நண்பனின் தந்தையின் உதவியுடன்; படித்து தஸ்லீம் வக்கீல் ஆகின்றான்.
அந்த தீவிர சிகிச்சைப்பகுதியில் இருந்த வேலையை முடித்துக்கொண்டு வெளியேறி, பொதுவான நோய்களைக் கொண்ட நாய்கள் பகுதிக்கு சென்ற போது, உப்பலான குழந்தை முகத்துடன் ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற அகலமான விரிந்த தோள்களுடனும் ஒரு இளைஞன் வந்தான்.வயது இருபதுக்கு மேல் இராது. அவனுடன் ஒரு குண்டான சந்தனக்கலர் லாபிரடோர் இன நாய் தொடர்ந்து வந்தது. நடப்பதை வேண்டா வெறுப்பாக செய்வது போல் அதனது நடை இருந்தது. ‘மிகவும் அமோகமாக விளைந்திருக்கிறாய்‘ எனக் அதன் தலையை குனிந்து தடவும்போது ‘நீ தானா அந்த புது இந்திய வைத்தியர்’ என கேட்டு முகத்தை திருப்பியது. சுந்தரம்பிள்ளை திடுக்கிட்டு கையை எடுத்தான். இந்த நாய் பேசுவது மட்டுமல்ல. திமிராகவும் பேசுகிறது. அதன் வார்த்தையில் ஏளனம் தொக்கி நிற்கிறது. புது வைத்தியன் என்பதாலா? இல்லை இந்தியன் என நினைப்பதாலா? நான் இங்கு வேலையில் சேர்ந்திருப்பது எல்லோருக்கும் புதிதாக இந்தியன் ஒருவன் வேலைக்கு சேர்ந்திருப்பதாக எல்லோரிடமும் தகவல் போய் சேர்ந்திருக்கிறது. இதை திருத்தி நான் இலங்கையன் என்று சொல்வதில் என்ன இருக்கிறது? என நினைததபோது இந்தச் சந்தர்ப்பத்தில், அந்தத் ஆறு அரை அடி இளைஞன், தனது பெயர் மல்வின். நாய்கள் வைத்திருக்கும் பகுதியில் வேலை செய்வதாக சொல்லி பலமாக கைகளைக் குலுக்கினான். அவனது உடலின் பலமும், ஆரோக்கியமும் அந்த கை குலுக்கலில் தெரிந்தது.
தமிழகத்தில் இயங்கி வரும்,தமிழ் அறக்கட்டளையின் ஆதரவோடு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, இந்திய அளவிலும், உலகளவிலும் சிறப்பாகச் செயல்படும் தமிழ்ச்சங்கங்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறது. கடந்த 17.3.2013 சென்னையில் நடைபெற்ற விழாவில், உலகலாவிய நிலையில் சிறந்த அமைப்பின் தலைவராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதும்; வரவேற்கத்தக்கதுமாகும். எழுத்தாளர்கள் மட்டுமின்றி,மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மறைந்த திரு.ஆதிகுமணன் அவர்களுக்குப் பின் 2002 ஆம் ஆண்டு முதல் தலைவராகப் பொறுப்பேற்ற இளந்தலைவர் திரு.பெ.இராஜேந்திரன் அவர்கள் துடிப்புடன், தொய்வில்லாமல் தமிழ் இலக்கியத்தைப் பராமரிக்கவும், வளர்க்கவும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சங்கத்தை இன்றுவரை மிகச் சிறப்பாக வழிநடத்திவருவது போற்றதக்கதாகும்.
முன்னுரை
தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார். ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழினி பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
முன்னுரை
தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன. தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார். ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழினி பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
pichinikkaduelango@yahoo.com
[அறிஞர் அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனை முன்னிட்டு எழுத்தாளர் அந்தனி ஜீவாவுன் ‘அ.ந.க ஒரு சகாப்தம்’ நூல் பற்றிய எழுத்தாளர் மேமன்கவியின் இக்கட்டுரை பிரசுரமாகின்றது. இதனைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பிய மேமன்கவிக்கு நன்றி. -பதிவுகள்.] அ.ந.க.என நெருக்கமானவர்களால் அழைக்கப்பட்டவர்.. அவரது மறைவு நிகழ்நது சுமார் 40 வருடங்கள் கடந்து அவரை பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகள் உதிரிகளாக ஆங்காங்கே பிரசுமாகி இருப்பினும், அவர் பற்றிய ஓரு நூல் என்ற வகையில் அந்தனி ஜீவாவின் ‘அ.ந.க ஒரு சகாப்தம்’ முக்கியமான நூலென்றே சொல்லவேண்டும். இன்றைய நமது கலை இலக்கிய சூழலில் முக்கிய தேவை ஒன்று இருக்கிறது. புதிய தலைமுறையைச் சார்ந்த கலை இலக்கிய ஈடுபாட்டாளார்களுக்கு, அவர்கள் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் நவீன கலை இலக்கிய வளர்ச்சிக்கு அஸ்திவாரமிட்டுப் போன முன்னோடிகளைப் பற்றிய அறிதலை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இந்த நூல் அந்த தேவையை நிறை வேற்றுவதில் பங்காற்றி இருக்கிறது. அந்தனியின் இந்த சிறிய நூல் அ.ந.க வை சிறப்பான முறையில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஆய்வு செய்யவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவும் மலர் வெளியீடும்
பெரிய சிவன் கோவில் (1148 Bellamy Road)
பிரதம விருந்தினர்: பேராசிரியர். செல்வா கனகநாயகம்
காலம்: ஞாயிறு ஏப்ரல் 28, 2013 மாலை 5.00 மணி – 9.00 மணி வரை
கடந்த ஜனவரி 28ம் திகதி நூல்தேட்டம் தொகுப்புப் பணிக்கான தகவல் சேகரிப்புக்கென தமிழக விஜயத்தை மேற்கொண்டிருந்த ஈழத்தின் பிரபல நூலகவியலாளர் என்.செல்வராஜாவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்புபு உபசாரமொன்றினை உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இந்திய ஒன்றியத்தினர் மேற்கொண்டிருந்தனர். சென்னை பாரதீய வித்தியா பவனில் 29.1.2013 அன்று செவ்வாய்க் கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழாவின் சிறப்பம்சமாக இவ்வரவேற்புபசாரம் மேற்கொள்ளப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஒன்றான பலனை எதிர்பார்க்காமல் சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்ய வேண்டும் என்ற வாக்கைத் தன் வாழ்வில் முழுமையாகப் பின்பற்றி வரும் செல்வராஜாவுக்கு இந்நிகழ்வு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். நிகழ்ச்சிக்கும் பொருத்தமானதாக இருந்திருக்கும். பாரதீய வித்தியா பவன் வாயிலில் நூலகவியலாளரின் புகைப்படத்தைத் தாங்கிய பாரிய வண்ணப் பதாதையொன்று “இலண்டன் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் வரவேற்பு விழாவுக்கு வருகைதரும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்று வரவேற்றது.
2012 ஜனவரியில் செயற்பட ஆரம்பித்த எழுநா ஊடக நிறுவனம், 2012 / 2013ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான செயற்பாடுகளைப் பூர்த்திசெய்து 2013 / 2014ஆம் ஆண்டு பருவகாலச் செயற்பாடுகளுக்குள் காலடி வைக்கின்றது. எழுநா செயற்பட விரும்பும் வெளிகளில், எழுநாவின் நண்பர்கள் வட்டத்தினூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிகளே கடந்த காலத்தில் வெளியீட்டிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தன. தமிழ் சமூகங்களின் பல்வகைமையை உறுதிசெய்யுமுகமாக பிரதிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்த அதேவேளை, எழுநா வெளியீடுகளின் தரத்தைப் பேணுவதிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இப்பொழுது, 2013 / 2014 ஆம் ஆண்டு பருவகாலத்தில், எழுநா வெளியீடுகளுக்கான கோரலை பகிரங்கமாக முன்வைக்கின்றது. இளைய படைப்பாளிகள், அறிமுகமாகியிருக்காத எழுத்தாளர்களின் வெளியீடுகளை எழுநா ஊக்குவிக்க விரும்புகின்ற அதே நேரம், வெளியீட்டு வசதிகளற்ற / வெளியீட்டு வாய்ப்புக்கள் குறைந்த தரமான பிரதிகள் சார்ந்தும் அதிக கவனம் கொள்கின்றது.