தமிழ் ஸ்டுடியோ அறிவிப்புகள்!

பேசாமொழி 7ஆவது இதழ் – இணையத்தில் படிக்க..

படிக்க: http://pesaamoli.com அல்லது  http://pesaamoli.com/index_content_7.html

தமிழ் ஸ்டுடியோ அறிவிப்புகள்!நண்பர்களே மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் “பேசாமொழியின்” 7ஆவது இதழ் வெளியாகியுள்ளது. வெங்கட் சாமிநாதன், யமுனா ராஜேந்திரன், டிராட்ஸ்கி மருது, ராஜேஷ் (கருந்தேள்), எஸ். ஆனந்த் (கோணங்கள்), எம். ரிஷான் ஷெரிப், சுரேஷ் சுந்தர், தினேஷ், அருண் மோ. விஸ்வாமித்திரன் போன்றோரின் கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராமத்து படங்களில் தென் மேற்கு பருவக் காற்று எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை மிக ஆழமாக வெங்கட் சாமிநாதன் விவரித்துள்ளார். பாலஸ்தீன படமான டீவைன் இன்டர்வென்சன்ஸ் படம் பற்றியும், நடிகர் & இயக்குனர் மணிவண்ணன் பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும் யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளார். அனிமேசன் பற்றிய ஓவியர் மருதுவின் தொடரும், நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாக்கள் தொடர்பான கோணங்கள் ஆனந்தின் கட்டுரையும், இலங்கை இயக்குனர் பிரசன்னா விதானங்கே பற்றிய விச்வாமித்ரனின் கட்டுரையும், ரிஷானின் உலகப் படக் கட்டுரையும் மிக முக்கியமாக இந்த இதழில் நீங்கள் தவறவிட கூடாத கட்டுரைகள். பேசாமொழி, இணைய இதழ். கீழ்க்கண்ட இணைய முகவரியில் நீங்கள் இந்த இதழை இலவசமாகவே படிக்கலாம்.

Continue Reading →