எல்லோரையும் அசத்திய சிவகாமியின் சபதம்!

கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 5 இல்) சோனி அரங்கில் ஆயனரும் சிவகாமியும் முதலாம் மகேந்திர பல்லவரும் அவர் மகன் முதலாம் நரேந்திர பல்லவரும்  புலிகேசியும் நாகநந்தியும் அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள்நக்கீரன் (தங்கவேல்)கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 5 இல்) சோனி அரங்கில் ஆயனரும் சிவகாமியும் முதலாம் மகேந்திர பல்லவரும் அவர் மகன் முதலாம் நரேந்திர பல்லவரும்  புலிகேசியும் நாகநந்தியும் அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள். அவையோர் மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் கடைசிவரை அவர்களைக் கண்டு களித்தார்கள். ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு கண்முன் விரிந்தன. மாமல்லபுரம் பல்லவர்கள் சிற்பக்கலைக்கு கட்டியங்கூறி நிற்கிறது. இது 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது.  முதலாம் நரேந்திரவர்மனின் இன்னொரு பெயர் மாமல்லன். அவனால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி நிற்கிறது. பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களை கட்டியவர்களும் பல்லவரே. இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேசுவரவர்மனும் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை இராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

Continue Reading →